(வில்வ மங்கள தாக்கூர் )
வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
கலியுக மக்களின் பக்திக்கும் முக்திக்கும் மட்டுமின்றி, சகல ச்ரேயஸ் மற்றும் சாதனைகளுக்கும் நிரந்தர ஹரி நாம சங்கீர்த்தனமே நன்மை அளிக்கும் சுலபமான மார்க்கமென்று அனைத்து மக்களுக்கும் உரத்த குரலில் கூறியவர் பகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு. அவருடைய அயராத பிரசாரத்தின் மூலம் “ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்” என்ற காவியம் புகழ் பெற்ற பக்திப் பாடல் நூலாக பிரசித்தியடைந்துள்ளது.
சைதன்ய மகாபிரபுவின் யாத்திரையில் ஒரு முறை கிருஷ்ணா நதி தீரத்தில் சில பக்தர்கள் பாடிய ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருத சுலோகங்களைக் கேட்டவுடன் அவர் தன்னை மறந்த ஆனந்தத்தில் மூழ்கினார். உடனே அங்கிருந்த பண்டிதர்களைக் கொண்டு அச் சுலோகங்களை எழுத வைத்து, விருப்பமுடன் அக்கையெழுத்துப் பிரதிகளை தம்முடன் எடுத்து சென்றார். அப்பாடல்களை தம் பக்தர்களைக் கொண்டு பாடச் செய்து மகிழ்ந்தார். என்று ‘ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் ’ கவிராஜ் கோஸ்வாமி எழுதியுள்ளார் மேலும் ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதத்திற்கு சமமான நூல் மூவுலகிலும் இல்லை என்றும் இதைப் படிப்பதன் மூலம் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரிடம் சிரத்தையுடன் கூடிய அன்பு, பக்தி, ஞானம் கிடைக்கப் பெற்று ,ஸ்ரீ கிருஷ்ண லீலைகளின் எல்லைகளைக் கண்டுணர முடியும்.” என்றும் உறைத்தார்.
வில்வ மங்களன்
🔆🔆🔆🔆🔆🔆🔆
புகழ் பெற்ற அந்தண குடும்பத்தில் பிறந்த வில்வ மங்களன், அனைத்து சாஸ்திரங்களையும் கற்று கரை தேர்ந்தான். ஆனால் இந்திரியங்களை தன் வசப் படுத்தாமல், ‘சிந்தாமணி” என்னும் விலைமாது மேல் மோகம் கொண்டான்.
அவ்வாறிருக்கையில் பதிவ்ரதையான தன் மனைவியையும், மரணப் படுக்கையில் இருந்த தன் தந்தையையும் கூடப் பொருட்படுத்தாமல், பெரு மழையையும், புயல் காற்றையும் கூட லட்சியம் செய்யாமல் சிந்தாமணியின் வீடு நோக்கி நடந்தான். பொங்கிப் பெருகி ஓடும் நதியின் மேல் மிதந்து வந்த ஒரு சவத்தை ஓடமென்றெண்ணி மேலேறி, காரிருளில் தொங்கிய ஒரு சர்ப்பத்தை கயிறென்றெண்ணி பிடித்து மேலேறி தன் பிரிய நாயகியான சிந்தாமணியிடம் சென்றான்.
ஆனால், சிந்தாமணி அவனெதிரில் அருவெறுக்கத்தக்க வேஷத்துடன் தோன்றி, துச்சமான உடலாசையில் அவனுக்கு தீவிர விரக்தியை மூளச் செய்தாள். அத்துடன், ” உன்னுடய இந்த தீவிர பிரேமையை அழியக் கூடிய மனித உடலின் மேல் காட்டாமல், சத் சித் ஆனந்த ருபத்தில் உள்ள ,மதன மோகனன், ஸ்ரீ கிருஷ்ண பகவானின் மேல் குவியச் செய்து பரம ஆனந்தத்தை அடைந்து, கிடைத்துள்ள இந்த அபூர்வமான மானுடப் பிறவியை பயனுள்ளதாக்கிக் கொள்” என்று ஞான உபதேசம் செய்தாள்.
அச்சொற்களால் மனமாற்றமடைந்த வில்வ மங்களன், ‘சோமகிரி’ என்ற குருவிடம் சென்று சேர்ந்து ‘கோபால மந்திரம்’ உபதேசம் பெற்று, சிரத்தையுடன் ஜபித்து வருகையில் ஞான வைராக்கியம் கைவரப் பெற்று, ஸ்ரீ கிருஷ்ண பகவானின் சாக்ஷாத்காரதைப் பெற்று, ஸ்ரீ கிருஷ்ண கர்ணாமிருதம் என்ற புனித நூலை எழுதியதால், இவர் லீலா சுகர் என்று அழைக்கப் பெற்றார்.
பில்வமங்கள டாகுரா விருந்தாவனத்துக்குச் சென்று கொண்டிருந்த போதும் பெண்கள் களால் கவரப்பட்டவராயிருந்தார். ஓரிரவு அவர் செல்வம் மிகுந்த ஒரு வியாபாரியின் வீட்டில் தங்கியிருந்தபோது, வியாபாரியின் மனைவி தன் அழகால் பில்வமங்கள் ஈர்க்கப்படுவதைத் தெரிவித்தார்." என்ன செய்யலாம்? என்று அவள் கணவனிடம் கேட்ட போது, அவன் அவருக்கு சேவை செய்” என்று கூறினார்.
அப்போது பில்வமங்கள் அறிவுதெளிந்து அன்னையே, உம் தலைமுடியில் இக்கும் ஊசிகளை என்னிடம் தாருங்கள் என்று அந்த அழகிய பெண்ணிடம் கேட்டார்..
"இந்தக்கண்கள் என் எதிரிகள், நான் பெண்களின் அழகில் பைத்தியமாய் அலைவதற்கு இந்த கண்களே காரணம் . ஆகையால், என் கண்களைக் குத்திக் குருடாக்கி கொள்ளவேண்டும். என்று எண்ணி ஊசியால் தன் கண்களைக் தானே குத்தி குருடாக்கி கொண்டார்.
மீண்டும் ஒரு முறை தன்னுடைய புலனின்பத்திற்கு தான் இறையானதை நினைத்து மிகவும் வருந்தினார் பில்வமங்கள தாகூர். ஆகையால் தான் இனி அவ்வாறு நடக்காமல் இருக்க, தனது கண்களை குருடாக்கிக்கொண்டு ஆன்மீகத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார்.
ஆன்மீகத்தில் முன்னேற விருந்தாவனமே சிறந்த இடம் என்றெண்ணிய பில்வமங்கள தாகூர், சிறிதும் தாமதிக்காமல் அங்கு சென்றார். விருந்தாவனத்தில் மிகவும் எளிமையாக வாழ்ந்து, தனது வாழ்நாட்களை பகவான் கிருஷ்ணருடனான அன்பை வளர்த்துக்கொள்வதில் மிகவும் கவனம் செலுத்தினார். பல விரதங்கள் ஏற்று, ஹரி நாம ஜபம் செய்து, பகவானை போற்றி துதிகள் பல பாடி பகவானை திருப்திபடுத்தினார்.
வில்வ மங்களருக்கு கிருஷ்ணரின் தரிசனம்.
🔆🔆🔆🔆🔆🔆🔆
பல வருடங்கள் கழித்து ஒரு நாள் .....
பில்வமங்கள தாகூரின் பக்தியை கண்டு அவருக்கு காட்சியளிக்க விரும்பிய பகவான் கிருஷ்ணர், அவர் முன் ஒரு சிறு பாலகனாக வந்து நின்றார். அந்த பாலகன், பில்வமங்கள் தாகூரிடம், " ஐயா! நானும் எனது நண்பர்களும் உங்களுடைய பாடல்களை மிகவும் ரசித்து கேட்போம். ஆகையால் இந்த பாலை உங்களுக்கு பரிசாக தருகிறோம்", என்று கூறினான்.
பில்வமங்கள், "உன்னுடைய குரல் மிகவும் இனிமையாக உள்ளது. என் அருகில் வா! வந்து உன்னை பற்றி விவரமாக கூறு!", என்று அந்த பாலகனிடம் கூறினார்.
அதற்கு அந்த பாலகன், " நான் மாடு மேய்க்கும் சிறுவன். அருகில் இருக்கும் கிராமத்திலிருந்து வருகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் நான் தினமும் பால் எடுத்து வருகிறேன்", என்று கூறினான்.
பில்வமங்கள் மிகவும் மகிழ்ந்து, அதற்கு சம்மதித்தார். ஆகையால் அந்த பாலகன் தினமும் அவருக்கு பால் கொண்டு வந்தான். பின்னர் அருகில் வந்து, " தாகூர் ஜி! நான் உங்களுக்கு பால் கொண்டுவந்துள்ளேன்", என்று மென்மையாக கூறினான்.
பில்வமங்கள், "பாலகனே, என் அருகில் வா! நீ யார் என்று எனக்கு தெரியும். நீ என்னுடைய கிருஷ்ணன் தான்", என்று கூறினார். அதற்கு, பகவான், " இல்லை ! இல்லை! நான் மாடு மேய்க்கும் சிறுவன் தான்", என்று பதிலளித்தார்.
பில்வமங்கள், "எனதன்பு கிருஷ்ணா! என் புறக்கண்ணால் உன்னை காண முடியாமல் இருக்கலாம். ஆனால் என் அகக்கண்ணால் உன்னை காணமுடிகிறது. என்னிடமிருந்து நீ தப்பிக்க முடியாது", என்று கூறினார்.
சிரித்துக்கொண்டே, பகவான் கிருஷ்ணர், பில்வமங்கள தாகூரின் பக்தியை ஏற்று தினமும் தனது தரிசனத்தை அவருக்கு தந்தார்
பில்வமங்கள தாகூரின் பூர்வ ஜென்ம வரலாறு
நாளை காணலாம் . . . .
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment