நிருக ராஜனின் முக்தி


 நிருக ராஜனின் முக்தி


🔆🔆🔆🔆🔆🔆🔆


ஒரு நாள் யாதவ குலத்தைச் சேர்ந்த சாம்பனும், மற்ற இளம் சிறுவர்களும் விளையாட வனம் சென்றனர். நீண்ட நேரம் விளையாடிய பின் மிகவும் தாகத்திற்குள்ளான அவர்கள் நீரைத் தேடினர். பாழடைந்த ஒரு கிணற்றினுள் ஒரு பெரிய ஓணான் இருப்பதைக் கண்டனர். ஆச்சரியப்படத்தக்க அப்பிராணி ஒரு மலையை ஒத்திருந்தது. சிறுவர்கள் மனமிரங்கி, அதை வெளியே இழக்க முயன்றனர். நீண்ட தோல், வார்களையும், கயிறுகளையும் கொண்டு சிலமுறை அதைக் காப்பாற்ற முயன்றும், தங்களால் அதைச் செய்ய இலயாது என்பதைக் கண்டு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்று நடந்ததைக் கூறினர். அவர்களுடன் அக்கிணற்றுக்குச் சென்ற பகவான், தமது இடது கரத்தை நீளச் செய்து அந்த ஓணானைச் சுலபமாக வெளியேற்றினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கரம் பட்டதும் அந்த பிராணி உடனே ஒரு தேவராக மாறியது. பிறகு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், "நீ யார் ? இத்தகைய இழிவான ரூபத்தை எப்படிப் பெற்றாய்?" என்று கேட்டார்.

அந்த தேவர் கூறினார், "என் பெயர் நிருக ராஜன். நான் இஷ்வாகுவின் மகனாக இருந்தேன். தான தருமங்களில் நான் புகழ்பெற்று விளங்கினேன். உண்மையில், நான் எண்ணற்ற பசுக்களை அநேக பிராமணர்களுக்குத் தானம் செய்துள்ளேன். ஆனால் ஒரு சமயம் ஒரு பிராமண சிரேஷ்டரின் ஒரு பசு என்னுடைய பசு மந்தைக்குள் கலந்து விட்டது. இதையறியாத நான் இப்பசுவை வேறொரு பிராமணருக்குத் தானம் செய்து விட்டேன். அப்பசுவின் முதல் உரிமையாளர், அப் பசுவை இரண்டவாது பிராமணர் எடுத்துச் செல்வதைக் கண்டு, அது தன்னுடையதென்று இரண்டாவது பிராமணருடன் விவாதிக்கத் துவங்கினார். சிறிதுநேர விவாதத்திற்குப் பின் அவர்கள் என்னிடம் வந்தனர்.
நானும் அந்த ஒரு பசுவிற்குப் பதிலாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் பசுக்களைத் தருவதாகவும், அறியாமல் செய்த இக்குற்றத்தை மண்ணித்தருள வேண்டும் என்றும் அவர்களிடம் வேண்டினேன். அவ்விருவரில் ஒருவரும் என் வேண்டுகோளை ஏற்கவில்லை. இந்தகணக்குத் தீராமலேயே இருந்தது.

"சிறிது காலத்திற்குப் பின் மரணமடைந்த நான் யமதூதர்களால் யமராஜனின் சபைக்கு எடுத்துச் செல்லப்பட்டேன்.யமராஜனும் என்னிடம், பாவ பலன்கள் மற்றும் புண்ணிய பலன்கள் ஆகிய இவ்விரண்டில் எதை நான் முதலில் அனுபவிக்க விரும்புகிறேன் என்று கேட்டார். பாவ பலன்களை அனுபவிக்க முடிவு செய்த நான் இந்த ஓணானின் உடலை ஏற்றேன்."

நிருக ராஜன் தன் கதையைக் கூறியபின், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குத் தன் பிரார்த்தனைகளைச் செய்து, ஒரு சுவர்க்க லோக விமானத்தி லேறி சுவர்க்கம் சென்றார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பிறகு, தமது அந்தரங்க சகாக்களுக்கும், பொது மக்களுக்கும் ஒரு பிராமணரின் உடைமையைத் திருடுவதிலுள்ள அபாயங்களை எடுத்துக் கூறினார். இறுதியில் பகவான் தமது அரண்மனைக்குத் திரும்பினார்.

( ஶ்ரீமத் பாகவதம் .10.64 )


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


https://t.me/suddhabhaktitami



Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more