கங்கை பூமிக்கு வந்த வரலாறு:
🔆🔆🔆🔆🔆🔆🔆
புனித கங்கை நதி தேவலோகத்தில் இருந்து இந்த பூமிக்கு வந்த வரலாறு மிகவும் நீண்டது அதே போல் கடினமானதும் கூட..
அத்தகைய சாதனையை புரிந்தவர்கள் யாரெனில்..?
பகவான் ஸ்ரீ ராமனின் முன்னோர்களே ஆவர்...
முன்னொரு காலத்தில் பாஹூகன் என்ற அரசன் அயோத்யா நாட்டில் ஆட்சி செய்துகொண்டிருந்தான். ஒரு சமயம் அண்டை நாட்டு பகைவர்களால் தோற்கடிக்கப்பட்டு காட்டிற்க்கு வந்தான். காட்டில் அவன் மனைவியுடன் இருந்த சில நாட்கள் கழித்து இறந்து விட்டான்.
அப்போது அவன் மனைவி கர்ப்பமாக இருந்தாள். அவள் ஒளர்வரிஷி ஆசிரமத்தில் ஒரு மகனை பெற்றாள். ஒளர்வரிஷி அவனுக்கு சகரன் என்று பெயர் வைத்து போர் கலைகள் அனைத்தையும் கற்று கொடுத்தார். சகரன் தந்தை ஆட்சி செய்த நாட்டிற்க்கு சென்று பகைவர்களை வென்று அரசனானார். பாரதத்தை தாக்க வந்த தாலஜங்கர் சக்,யவனர் பர்பர முதலிய அந்நிய தேசத்து பகைவர்களை வென்று சகரன் சக்கரவர்த்தி ஆகிவிட்டார்.
சகர சக்ரவர்த்திக்கு சுமதி,கேசினி என்று இரு மனைவியர் இருந்தனர்.ஒருமுறை சகரன் அஸ்வமேத யாகத்தை தொடங்கினார்.அஸ்வமேத யாகம் நெடுநாள் நீடித்தது.சகரன் நூறு யாகம் செய்து விட்டால் இந்திர பதவி அடைந்து விடுவான் என்ற பயத்தில் அஸ்வமேத யாக குதிரையை இந்திரன் திருடிச்சென்று விட்டான்.
ராஜா சகரன் யாக குதிரையை தேடுவதற்காக மூத்த மனைவிக்கு பிறந்த தன்னுடைய 60,000 புத்திரர்களை நான்கு திசைகளிலும் அனுப்பி யாகக்குதிரையை கண்டுபிடித்து கொண்டுவர சொன்னார். சகரரின் அறுபதாயிரம் புதல்வர்களும் பூமியெங்கும் சென்று தேடினார்கள்.
இறுதியில் பூமியை தோண்ட ஆரம்பித்தார்கள்.பூமியின் அதள பாதாளத்தில் அக்குதிரை கபில முனிவர் அருகில் கட்டபட்டு இருந்ததை கோபமுற்ற இளவரசர்கள் , கபில முனிவர் தான் குதிரையை திருடிக்கொண்டுவந்தார் என்று தவறாக புரிந்துக்கொண்டு, அவரை தாக்கினான். பகவானின் அவதாரமாகிய கபிலதேவரை நிந்தனை செய்த குற்றத்திற்காக. சகரரின் அறுபதாயிரம் பிள்ளைகள் அவர்களின் உடம்பிலிருந்தே வெப்பம் அதிகமாகி நெருப்பாக உருவாக்கி அவர்களின் உடல் எரிந்து சாம்பலாற்று..
பிள்ளைகள் திரும்பிவராததால் அவர்களை கண்டுபிடிக்குமாறு தன் பேரன் அம்சுமானுக்கு சாகரன் உத்தரவிட்டார். இளவரசர்கள் சாம்பலான விஷயத்தை கேள்விப்பட்ட அம்சுமான், அவர்களை எப்படி மீட்க வேண்டும் என்று கபிலரிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார்.,
“பகவானே உம்மை வணங்குகிறேன்:படைக்கும் கடவுள் பிரம்மாவாலும் மற்ற தேவர்களாலும் தாங்கள் சத்திய சொரூபமாக அறியப்படவில்லை.தாங்கள் சாங்கிய யோகம் பயிலும் முறையை உபதேசித்து வழிகாட்டியிருக்கிறீர்கள்.
விஷ்ணு பகவானின் அம்சாவதாரமான தங்கள் கோபத்தால் என் தந்தைகள் மாண்டு போகவில்லை.அவர்களது தவறான எண்ணமே அவர்களை பஸ்மம் செய்துவிட்டது” அம்ஸுமான் இவ்வாறு வேண்டிக்கொண்டதும் கபில முனிவர் கூறினார். ”எனக்கு எவரிடமும் கோபமில்லை,உன் தாத்தாவின் யாகக்குதிரையை கொண்டுசெல்வாயாக. கபிலர் இவ்வாறு கூறியதும் அம்ஸுமான் அவரை வலம் வந்து வணங்கி விட்டு குதிரையை எடுத்து சென்றான்.
சகர மன்னர் அந்த குதிரையை வைத்து யாகத்தை செய்து முடித்தார்.
அம்சுமானின் மகன் திலீபன் சிரிது காலம் ஆட்சி புரிந்தான்., பின்னர் திலீபனின் மகன் பகீரதன் அரியணை ஏறினான். தனது முன்னோர்களின் முத்தியடைய தவம் மேற்கொள்ள தீர்மானித்த பகீரதன், அரசை அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு, இமயமலைக்குச் சென்று தவம் செய்யத் தொடங்கினான்.
பல ஆயிரம் வருடங்கள் தவம் செய்தப் பின்னர், பிரம்மா அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். பகீரதன் கங்கை பூமியில் பாய வேண்டும் என்று கேட்டான். பிரம்மாவும் அவ்வரத்தை அருளினார்.
பின்னர் பகீரதன் கங்காதேவியிடன் பிராத்தனை செய்ய தொடங்கினார். அவரின் பிராதனையில் மகிழ்ந்து கங்காதேவி பிரத்யட்சமானாள்,”உனக்கு வேண்டிய வரத்தை கேள்” என்றாள். “தேவி நீங்கள் பூலோகத்திற்கு வந்து என் மூதாதயர்களை கடைத்தேற்ற வேண்டும்” என்றார்.
அதற்க்கு கங்கை தேவி கூறினாள்.-“நான் வருவதாக இருந்தால் நான் வானகத்திலிருந்து பூமியை நோக்கி பாய்ந்து வரும்போது என்னை எவராலும் தாங்க இயலாது.மேலும் ஒரு விஷயம்.நான் பூமியில் பெருக்கெடுத்து ஓடும்போது பாவிகளும் தூராத்மாக்களும் என் நீரில் மூழ்கி தம் பாவங்களை கழுவிக்கொள்வார்கள்.அந்த பாவங்களை நான் எங்கே போய் தொலைப்பேன் “என்றாள்.
பகீரத மன்னன் பதில் கூறினார்.”தேவி வானகத்திலுருந்து நீங்கள் பாய்ந்து வரும்போது உங்களை தாங்கிக்கொள்ள எல்லாம் வல்ல சிவபெருமான் இருக்கிறார்.நீங்கள் கவலைப்பட வேண்டாம். கங்கை நீர் அசுத்தமாகாது.ஏனெனில் இக பர லோகங்களில் சுக போகங்களை துறந்த பற்றற்ற தர்மாத்மாக்களும், ஞானிகளும் பரோபகாரம் செய்யும் நல்லவர்களும், பகவானின் தூய பக்தர்களும் கங்கை நதியில் நீராடினால் அந்த பாவப்பட்ட நீர் தூய்மை ஆகிவிடும்.
ஏனெனில் இவர்கள் இதயத்தில் எங்கும் நிறைந்த நாராயணன் குடிகொண்டுள்ளார்” என்று பகீரத ராஜா கூற கங்கை பூமிக்கு வர சம்மதித்தாள்.
பகீரதன் சிவபெருமானை நினைத்து தவமிருந்தார்.ஆஷுதோஷ் என்று புகழ் பெற்ற சிவபெருமான் ஒரு வருடத்திற்குள் பிரத்யட்சமாகிவிட்டார்.பகீரதன் தாங்கள் என் மூதாதையர் உய்வதற்காக கங்காதேவியை தாங்கிக்கொள்ள வேண்டும் என்றார். சிவபெருமான் அப்படியே ஆகட்டும் என்றார்.
கங்கை நீர் அசுர வேகம் கொண்டு வானகத்திலிருந்து பாய்ந்து வந்து சிவபெருமானின் சிரசில் விழுந்தது. சிவபெருமான் கங்கை நீரை அடக்க தன் ஜடா முடியை எடுத்து இறுக்கமாக கட்டிக்கொண்டார்.ஜடாமுடியில் கங்கை வெளியேற முடியாமல் உள்ளே சுற்றி திரிந்தது. பகீரத மன்னன் சிவபெருமானை துதி செய்தான்.சிறு தாரையாக வெளியில் விட கேட்டுக்கொண்டான்.சிவபெருமான் அவ்வாறே செய்தார்.
பகீரத மன்னன் ஒரு தேரில் ஏறிக்கொண்டான். மன்னர் தேரில் வழி காட்ட கங்கை நீர் பின்னால் பிரவாகமெடுத்து வந்தது.நாடு,நகரம்,காடு,கிராமம்,அனைத்தையும் புனிதமாக்கிக்கொண்டு வந்தது.
வழியில் ஜாஹ்னு முனி தனது ஆசிரமத்தில் யாகம் செய்து கொண்டு இருந்தார். கங்கை அவ்வழியாக வந்தபோது யாகசாலைகள்,யாகமும்,வழிபாடு தலத்தையும் கங்கை நீரால் மூல்கடித்து அழித்தது.அதனால் கோபமடைந்த ஜாஹ்னு முனிவர் தன் யோகசக்தியால் கங்கை நீரை குடித்து விட்டார் .இதை கண்ட பகீரத மன்னன் அவரை சமாதானப்படுத்தி விஷயத்தை கூறினார்.ஜாஹ்னு முனிவர் சமாதானமடைந்து கங்கை நீரை காது வழியாக வெளியில் விட்டார்..
பகீரதன் தேரில் பின்னால் சென்ற கங்கை நீர் பகீரதன் மூதாதயர் சாம்பலாக கிடந்த இடத்தில் நீரோட்டமாக பாய்ந்து சென்று அந்த சாம்பலை நீரில் மூழ்கடித்தது.உடனே சகர புத்திரர்கள் அவர்களின் பாவம் நீங்கி முக்தியடைந்தனர்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment