வில்வமங்கள தாகூரின் பூர்வ ஜென்ம வரலாறு
வழங்கியவர் :- தவத்திரு மஹாவிஷ்ணு கோஸ்வாமி மகாராஜ்
மொழிபெயர்ப்பு :- சுத்தபக்தி குழுவினர்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
நம் அனைவருக்கும் வில்வமங்கள தாகூரின் வரலாறு தெரியும். ஆனால் அவருடைய பூர்வ ஜென்ம வரலாறு தெரியாது. அந்த கதையை அறிந்துகொள்வோம்!
பூர்வ ஜென்மத்தில் வில்வமங்கள் தாகூர் ஒரு சந்நியாசியாக இருந்தார். பகவான் கிருஷ்ணர் மீது அதீத அன்பும் பக்தியும் கொண்டிருந்தார்.
அவர் பல ஆன்மீக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து அதோடு அங்கு வரும் அனைவருக்கும் பிரசாதம் விநியோகித்தும் வந்தார்.
ஒரு முறை அவ்வாறு ஏற்பாடு செய்த நிகழிச்சி ஒன்றிற்கு தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் செலவழித்து விட்டார். பிரசாத விநியோகம் செய்ய பணம் போதவில்லை. ஆகையால் யாரிடமாவது பணம் கேட்கலாம் என்று நினைத்தபடி தெருக்களில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்நாட்டு இளவரசி இறந்து, அதற்கான அந்திமகர்மங்கள் நடைபெற்று கொண்டிருந்தது. இளவரசியின் உடலை தகனம் செய்யும் போது, பல நகைகளையும் நவரத்தினங்களையும் சேர்த்து எரித்தனர். இதை பார்த்து கொண்டிருந்த சந்நியாசி, இறந்த சவத்திற்கு எதற்கு இத்தனை நகைகள். ஆகையால் நாம் இவற்றை எடுத்துக்கொண்டு கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்தலாம், என்று எண்ணினார். அந்த சவத்தின் அருகில் சென்று நகைகளை எடுக்க முற்பட்ட போது, " நில்லுங்கள்! இந்த நகைகளை எடுக்காதீர்கள்". என்று ஒரு குரல் கேட்டது. சந்நியாசி அதிர்ந்தார். யாருடைய குரல் என்று சுற்றிலும் தேடினார். அது இறந்த இளவரசியின் குரல். அந்த குரல் மேலும் கூறியது, "உங்களுக்கு செல்வம் வேண்டுமானால் என் தந்தையிடம் செல்லுங்கள். நான் உங்களை அனுப்பியதாக கூறுங்கள். என்னுடைய கட்டிலின் கீழ் நிறைய பொக்கிஷங்கள் உள்ளது. அதை பெற்றுக்கொண்டு நீங்கள் கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்துங்கள்", என்று கூறியது.
சந்நியாசி,அரசரிடம் சென்று இளவரசி கூறியதை அப்படியே தெரிவித்தார் . அரசரும், தன் மகளுடைய விருப்பத்தை நிறைவேற்ற அணைத்து பொக்கிஷத்தையும் வழங்கினார். அதை பெற்று கொண்ட சந்நியாசி, பாகவத நிகழ்ச்சிக்கு மொத்த பொக்கிஷத்தையும் செலவளித்தார். மீண்டும் பண தட்டுப்பாடு வந்தது. அதனால் இளவரசியை எரிக்கப்பட்ட இடத்திற்கு மீண்டும் சென்று அவளுடைய நகைகளை எடுத்து சென்றார். சிறுது தூரம் சென்ற போது, மீண்டும் இளவரசியின் குரல் கேட்டது. "நீங்கள் இந்த நகைகளை எடுத்து தவறிழைத்து விட்டீர்கள். சொந்த பணதிலோ, யாசகம் செய்தோ, நன்கொடையிலோ, பக்தர்களின் விருப்பம் போல் தரும் தனத்தை பகவத் கைங்கர்யம் செய்வதுதான் சிறந்த பக்தர்களின் குணம். உங்கள் மனம் அவ்வாறு சிந்திக்காமல் இந்த மயானபூமியை நாடிவந்து நான் அணிந்திருந்த நகையின் மீது ஆசை கொண்டீர்கள். நீங்கள் ஒரு சிறந்த பக்தராக இருந்தாலும் இந்த செயல் நியாயமான ஒன்றாக கருத முடியாது. அதனால், இந்த தவறுக்கான தண்டனையாக நீங்கள் மீண்டும் பிறப்பெடுக்க நான் சாபமிடுகிறேன்", என்று கூறியது.
அடுத்த பிறவியில், சந்நியாசி ஒரு பெண் பித்தனாக பிறப்பெடுத்தார். அவரே வில்வமங்கள தாகூர். அதே சமயம் அந்த இளவரசி, சிந்தாமணி என்னும் விலை மாதுவாக பிறப்பெடுத்தார் . வில்வமங்கள தாகூர் சிந்தாமணியை அணுகியபோது, அவள், "நீங்கள் என் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்களோ, அதே அளவு அன்பை பகவான் கிருஷ்ணரின் மீது வைத்தால், தன்னை உணர்ந்தவர் ஆகிவிடுவீர்கள்", என்று உபதேசித்தாள். இவ்வாறு. சிந்தாமணியின் மூலம், இந்த பிறவியில் வில்வமங்கள தாகூர் கிருஷ்ண பக்தியை பெற்றார்
கதையின் நீதி:
🔆🔆🔆🔆🔆🔆🔆
நம் வாழ்வில் நாம் சேர்க்கும் செல்வம் முறையானதாக இருக்க வேண்டும். பகவானுக்கான சேவையிலோ அல்லது பக்தர்களுக்கான சேவையிலோ ஈடுபடுத்துவதாக இருந்தாலும், அது நேர் வழியில் சேர்த்த செல்வமாக இருக்க வேண்டும். இல்லையெனில் அதற்கான பாவத்தை ஏற்க வேண்டியிருக்கும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment