அன்னை சீதையின் இரக்க குணம்


 அன்னை சீதையின் இரக்க குணம்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஸ்ரீ ராமர் இராவணனை வென்ற பிறகு, ஹனுமான் இலங்கையில் உள்ள அசோகா வனத்தில் அன்னை சிதையை அழைத்து வர சென்றார். அப்போது ஹனுமான் அன்னை சீதையிடம் இதுநாள் வரை உங்களை சித்திரவதை செய்த இந்த ராட்ஷசிகளை என் கதையால் துவம்சம் செய்ய மனம் துடிகிறது . உங்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறேன் என கூறினார்.


அதற்கு அன்னை சீதா, "தயவுசெய்து அவர்கள் மீது க்ரோதம் கொள்ள வேண்டாம். நான் உனக்கு ஒரு கதையைச் சொல்கிறேன், அதன் பிறகு நீ என்ன செய்ய வேண்டும் என்று உனக்கு உரைக்கிறேன்.

"ஒருமுறை ஒரு காட்டில், ஒரு சிங்கம் ஒரு வேட்டைக்காரனைத் துரத்திக் கொண்டிருந்தது, வேட்டைக்காரன் தனது உயிரைக் காப்பாற்ற கடுமையாக ஓடிக்கொண்டிருந்தான். வேட்டைக்காரன் கடைசியில் ஒரு மரத்தின் மீது ஏறி ஒரு கிளை மீது அமர்ந்தான்.

மரத்தில் அமர்ந்த வேடன் ,அதே மரத்தின் மற்றொரு கிளையில் ஒரு கரடி தூங்குவதைக் கண்டு திடுக்கிட்டான். கரடி தனது தூக்கத்திலிருந்து எழுந்திருக்காது என்று நம்பியிருந்தான்.

"இதற்கிடையில், துரத்தி வந்த சிங்கம் மரத்தின் மேல் ஏற முடியாமல், வேட்டைக்காரன் கீழிறங்கி வர காத்திருந்தது.

"நேரம் செல்ல செல்ல சிங்கம் ஒரு திட்டத்தை யூகித்தது. தூங்கிக் கொண்டிருந்த கரடியை கூப்பிட்டு," கரடி! எழுந்திரு உன் அருகில் யார் அமர்ந்திருக்கிறார் என்று கவனி ! அவன் ஒரு வேட்டைக்காரர். அவன் நமது எதிரி. அவன் நம்மை வேட்டையாடுபவன். நமது இனத்தை அழிப்பவன். நாம் அவனுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். நீ அவனை மரத்திலிருந்து கீழே தள்ளிவிட்டு பழி தீர்க்க வேண்டும். மீதியை நான் பார்த்து கொள்கிறேன். என்று கூறியது.

"கரடி வேட்டைக்காரனைப் ஒரு கணம் பார்த்து, சிங்கத்திடம் 'அவர் இந்த மரத்தை தஞ்சம் புகுந்துள்ளார். நானும் இந்த மரத்தை அடைக்கலம் எடுத்துள்ளேன். நம்பி வரும் ஒருவருக்கு துரோகம் இழைப்பது சரியானதல்ல.என்று கூறியது.

சிங்கம் தனது திட்டம் தோல்வியடைந்ததைப் பார்த்து, மற்றொரு திட்டத்தை தீட்டியது. மரத்தின் மேல் இருக்கும் வேட்டைக்காரனிடம் " ஓ வேட்டைக்காரனே! நீ உனது வீட்டிற்கு செல்ல விரும்பினால் எனது பசிக்கு உணவு தந்து நீ செல்லலாம். உன்னை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுகிறேன்." மேலும் நான் கரடியை சாப்பிட முடியும். நீ செய்ய வேண்டியது எல்லாம் தூங்கும் கரடியை மரத்திலிருந்து கீழே தள்ளிவிட வேண்டும். உனக்கு பதிலாக அதை நான் உண்பேன். இந்த காரியத்தை செய்து முடித்துவிட்டு நீ வீட்டிற்கு திரும்பி செல்லலாம். நான் உனக்கு தீங்கு செய்ய மாட்டேன். " என்றது சிங்கம்.

"இது ஒரு நல்ல யோசனை என்று வேட்டைக்காரன் நினைத்தான். அவன் கரடியைத் கீழே தள்ளினான். ஆனால் கரடி சுதாரித்து கொண்டு , மற்றொரு கிளையைப் பிடித்து வேகமாக மரத்தின் மேல் ஏறி இருந்த இடத்திற்கே மீண்டும் வந்தமர்ந்தது. வேட்டைக்காரன் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான், கரடியிடமிருந்து எதிர்வினைகளை எதிர்பார்த்தான். ஆனால் கரடி வேட்டைக்காரனை ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருந்தது.

சிங்கம் மீண்டும் கரடியிடம் "ஓ கரடி! இந்த வேட்டைக்காரனை ஒருபோதும் நம்ப முடியாது என்று நான் சொல்லவில்லையா? அவன் நல்லது நினைத்த உன்னையே கீழே தள்ளினான் ! இது நல்ல சந்தர்ப்பம் அவனது செயலுக்கான தண்டனையாக அவனை கீழே தள்ளிவிடு. நான் அவனை கவனித்துக்கொள்வேன் என்றது

"கரடி மீண்டும் கண்களைத் திறந்து, வேட்டைக்காரனையும், சிங்கத்தையும் பார்த்து 'உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் எப்போதும் மற்றவர்களின் தவறை மன்னிப்பார்கள்' என்று கூறி அமைதியாக இருந்தது.

இவ்வாறு அன்னை சீதா தேவி கதையை சொல்லி முடித்து ஹனுமானிடம், "என் அன்பான ஹனுமான் நாம் இந்த அரக்கிகளை மன்னிக்க வேண்டும், அவர்கள் எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியிருந்தாலும், மேன்மக்கள் எப்போதும் மற்றவர்களின் தவறான செயல்களை மன்னிப்பார்கள்" என்று கூறினார்.

அன்னை சீதையின் இரக்கத்தால் ஹனுமான் இதயக்குமுறல் சாந்தமடைந்தது. அவர் அரக்கிகளை மன்னித்தும் அவர்களை தண்டிக்கும் யோசனையையும் கைவிட்டார்.

தவறு செய்வது மனித இயல்பு ஆகும். ஆனால் மன்னிப்பது தெய்வீகமானவரின் இயல்பாகும்.

ஹரே கிருஷ்ண!.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

தினமும் 108 முறை . . . . .

ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

உச்சரிப்பீர் !
பிறவி பயனையடைவீர்

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more