யோக முறையின் முழுமையான நோக்கம்







மனதைக் கிருஷ்ணரில் இருத்துவது கிருஷ்ண உணர்வு இயக்கத்தின் நோக்கமாகும். மனம் அவ்வாறு அமர்த்தப்படும்போது நம் நண்பனாகச் செயல்படுவதைத் தவிர அதற்கு வேறு வழியில்லை. வேறுவிதமாக நடப்பதற்கு அதற்கு வாய்ப்பில்லை. சூரியன் வானத்திலிருக்கும் போது இருட்டு விரட்டப்படுவதுபோல், மனதில் கிருஷ்ணர் அமர்ந்தவுடன் வெளிச்சம் ஏற்படுகிறது. கிருஷ்ணர் சூரியனைப் போன்றவர்; அவர் இருக்குமிடத்தில் இருளுக்கு வாய்ப்பில்லை. நம் மனதில் கிருஷ்ணரை அமர்த்தினால் மாயையெனும் இருள் என்றும் உட்புகாது. மனதைக் கிருஷ்ணரின்பால் நிலைநிறுத்துவது யோகத்தின் பக்குவநிலை. மனம் உன்னதமான பரம்பொருளிடம் திடமாக நிலைத்து நின்றால், அது எந்த அபத்தத்தையும் உள்ளே வர அனுமதிக்காது; அப்போது வீழ்ச்சி இல்லை. மனம் பலமாக இருந்தால், சாரதி பலமடைகிறார்; நாம் விரும்புமிடத்திற்குச் செல்லலாம். மனத்தைப் பலப்படுத்துவது, மனத்தைப் பரம்பொருளிடமிருந்து விலகாமலிருக்கச் செய்வது, யோக முறையின் முழுமையான நோக்கம்.
(ஶ்ரீல பிரபுபாதர் / பக்குவநிலைக்கான வழி/ அத்தியாயம் இரண்டு.)
Comments
Post a Comment