பிரத்யும்னன்


 பிரத்யும்னன்

🔆🔆🔆🔆🔆🔆🔆



ருக்மிணி- கிருஷ்ணர் கல்யாணம்


🔆🔆🔆🔆🔆🔆🔆



விதர்ப்ப தேசத்தை பீஷ்மகன் என்பவன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு ருக்மி என்னும் மகனும், ருக்மிணி என்னும் மகளும் இருந்தனர். அழகில் சிறந்த ருக்மிணியும், கிருஷ்ணரும் காதல் கொண்டனர். ருக்மிணி தன் காதலை தன் தந்தை பீஷ்மகனிடம் தெரியப்படுத்தினாள். ஆனால், ருக்மிணியின் சகோதரன் ருக்மி, இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தான். தன் தங்கையை, சிசுபாலன் என்பவனுக்கு மணம் முடித்து வைக்கும்படி தந்தையிடம் வற்புறுத்தி சம்மதமும் வாங்கி விட்டான்.

எல்லா நாட்டுக்கும் மணஓலை அனுப்பப்பட்டது. சிசுபாலனின் நண்பர்களான ஜராசந்தன், பௌண்டரகன் என்று பலரும் அழைப்பிதழை பெற்றனர். அவர்கள், திருமண வைபவத்தைக் காண விதர்ப்பதேசம் வந்தனர். விருபமில்லாத திருமணத்தை தடுத்து நிறுத்த, ருக்மிணி கிருஷ்ணருக்கு ஒரு பிராமணர் மூலம் கடிதம் கொடுத்து அனுப்பினாள். திருமணத்தை தடுத்து நிறுத்தும் பொருட்டு கிருஷ்ணரும், பலராமன் மற்றும் யாதவர்கள் புடைசூழ விதர்ப்பதேசம் புறப்பட்டு வந்தார்கள். திருமணம் நடக்கும் முன்பு, கிருஷ்ணர் மணப்பெண்ணான ருக்மிணியை தூக்கிக் கொண்டு துவாரகைக்கு தேரில் கிளம்பினார். ருக்மிக்கு தகவல் தெரிந்தது. அவன் கிருஷ்ணரைக் கொல்வேன் என்று சபதம் செய்து, அவரைத் துரத்தினான். ஓரிடத்தில் கிருஷ்ணரின் தேரை மறித்தான். இருவருக்கும் கடும் போர் நடந்தது. ருக்மியை கிருஷ்ணர் வீழ்த்தினார். பின்னர், ருக்மிணியோடு துவாரகை சென்றடைந்தார். ருக்மிணி- கிருஷ்ணர் கல்யாணம் விமரிசையாக நடந்தது.

பிரத்யும்னன் பிறப்பு

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


சிறிது காலத்தில், மன்மதனின் அம்சத்தில் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள் ருக்மிணி. அவனுக்கு பிரத்யும்னன் என்று பெயரிட்டனர்.

பகவான் வாசுதேவருடைய அம்சமான காமதேவன் முன்பு சிவ பெருமானின் கோபத்தால் எரிந்து சாம்பலானார். பிறகு அவர் ருக்மிணியின் கர்பத்தில் மீண்டும் பிறவியெடுத்தார். பிரதியும்னரைத் எதிரி என்றெண்ணிய சம்பரன் என்ற அசுரன், பிறந்த பத்து நாட்களுக்குள் அக்குழந்தையை அபகரித்துச் சென்று சமுத்திரத்தில் எறிந்துவிட்டு நாடு திரும்பினான். ஒரு சக்திவாய்ந்த மீன் பிரதியும்னரை விழுங்கியது. அந்த மீனைச் செம்படவர்கள் பிடித்து சம்பரனுக்கே காணிக்கையாகக் கொடுத்தனர். அவனுடைய சமையற்காரர்கள் அந்த மீனை வெட்டியதும் அதன் வயிற்றில் ஒரு குழந்தையைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். பின்னர் அக்குழந்தையைக் வேலைக்காரியான மாயாவதியிடம் சமையற்காரர்கள் கொடுத்தனர். அச்சமயத்தில் நாரத முனிவர் தோன்றி குழந்தை யாரென்பதை அவளிடம் கூறினார். மாயாவதி உண்மையில் காமதேவனின் மனைவியான ரதிதேவியாவாள். தன் கணவர் புதியதொரு உடலில் பிறவியெடுப்பதற்காகக் காத்திருந்த சமயத்தில், அவள் சம்பரனின் வீட்டில் சமையல் காரியாக பணியாற்றி வந்தாள். இப்பொழுது குழந்தை யாரென்பதை அறிந்த அவள், குழந்தையிடம் மிகவும் பாசம் கொள்ளத் துவங்கினாள். குறுகிய காலத்திற்குப்பின் வாலிபப் பருவமடைந்த பிரதியும்னர் எல்லாப் பெண்களையும் தமது அழகினால் மயங்கச் செய்தான்.

சம்பராசுன் வதம்

🍁🍁🍁🍁🍁🍁🍁


ஒரு சமயம் பிரத்யும்னனை அணுகிய ரதிதேவி, காதல் மனோபாவத் தோடு விளையாட்டாக தன் புருவங்களை அசைத்தாள். அவளைத் தன் தாயாக பாவித்த பிரதியும்னர், அவள் தாய்க்குரிய மனோபாவத்தை விட்டு ஒரு காதலியைப் போல் நடந்து கொள்வது முறையன்று என்று கூறினார். பிறகு தாங்களிருவரும் யாரென்பதை பிரதியும்னரிடம் கூறிய ரதி, சம்பரனைக் கொன்றுவிடும்படி அறிவுரை கூறினாள். பிறகு அவருக்கு உதவும் வகையில் மகாமாயை என்ற மாயமந்திரத்தை அவருக்கு உபதேசித்தாள். பிரதியும்னரும் சம்பரனிடன் சென்று, பல அவதூறுகளால் அவனுக்குக் கோபமூட்டி, போருக்ழைத்தார். இதனால் கோபாவேஷமடைந்த சம்பரன் , தன் கதாயுதத்தை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான். அந்த அசுரன் பிரதியும்னருக்கு எதிராகப் பல வசிய சக்திகளைப் பிரயோகிக்க முயன்றான். ஆனால் பிரதியும்னர் அவற்றையெல்லாம் மகாமாயை மந்திரங்களால் தடுத்து, சம்பரனைத் தமது வாளால் சிரத்சேதம் செய்தார். அப்பொழுது ரதிதேவி ஆகாய மார்க்கமாக பிரத்யும்னனை துவாரகைக்கு அழைத்துச் சென்றாள்.

பிரத்யும்னன் துவாரகையில் பெற்றோரை சந்தித்தல்

🍁🍁🍁🍁🍁🍁🍁


பிரதியும்னரும், அவரது மனைவியும் பகவான் ஸ்ரீ கிருஷண்ருடைய அந்தப்புரத்தில் பிரவேசித்தபொழுது, அங்கிருந்த அழகிய மங்கையர் பலர், அவர் கிருஷ்ணர் என்று எண்ணினர். ஏனெனில் தோற்றத்திலும், ஆடை அலங்காரத்திலும் அவர் பகவானைப் போலவே காணப் பட்டார். வெட்கமடைந்த அப்பெண்கள் மறைவிடம் தேடி இங்குமங்கும் ஓடினர். ஆனால் சிறிது நேரத்திற்குப் பின் பிரதியும்னருக்கும், கிருஷ்ணருக்கும் இடையில் சிறு வேறுபாடுகள் இருப்பதை அவர்கள் கவனித்தனர். அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரல்ல என்பதைப் புரிந்து கொண்டதும் அவர்கள் உடனே அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

ருக்மிணி தேவி பிரதியும்னரைக் கண்டபொழுது, தாய்ப்பாசம் மேலோங்கி, அவளது ஸ்தனங்களிலிருந்து பால் பெருகியோடத் துவங்கியது. பிரதியும்னர் கிருஷ்ணரைப் போலவே காணப்படுவதைக் கவனித்த அவள், அவர் யாரென்பதை அறிய ஆவல் கொண்டாள். தன் மகன்களுள் ஒருவன் பிரசவ விடுதியிலிருந்து கடத்தப்பட்டதை அவள் நினைவு கூர்ந்தாள். "அவன் உயிருடன் இருந்திருந்தால், தன்முன் நிற்கும் இந்த பிரதியும்னனுக்கு ஒத்த வயதினனாக இருப்பான்." என்று அவள் எண்ணினாள். ருக்மிணி இத்தகைய சிந்தனையில் ஆழ்ந்திருந்தபொழுது பகவான் கிருஷ்ணன் தேவகியுடனும், வசு தேவருடனும் அங்கு வந்தார் பகவான் நிலைமையை நன்கு புரிந்து கொண்ட போதிலும் மௌனமாகவே இருந்தார். பிறகு நாரதமுனி அவ்விடம் வந்து அனைத்தையும் விளக்கினார். விவரமறிந்து ஆச்சரியப்பட்ட அனைவரும் பேரானந்ததுத்துடன் பிரதியும்னரை தழுவிக் கொண்டனர்.

( ஶ்ரீமத் பாகவதம் / காண்டம்10 / அத்தியாயம் 55 )


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more