தலிசா மோஹபத்ரா சம்பாத்


 

பூரியில் தலிசா மோஹபத்ரா என்ற பிராமணர் வசித்து வந்தார். பகவான் ஜெகந்நாதரின் அர்ச்சகர்களுள் அவரும் ஒருவர்; சாஸ்திரங்களை நன்கு கற்றறிந்த நிபுணர். அவர் எப்போதும் தூய்மையுடனும், நித்ய அனுஷ்டானத்தில் உறுதியுடனும் இருந்தார். தன்னடக்கம், புத்தி தெளிவு, மற்றும் எல்லா பக்தர்களிடமும் பிரியம், பணிவு, போன்ற நற்பண்புகளும் அவரிடமிருந்தன. அவர் எப்போதும் ஏழைகளுக்கு உணவளித்தும், கிருஷ்ண கதை கேட்பதில் ஆர்வமும் கொண்டிருந்தார். நாள் முழுவதும், பகவான் ஜெகந்நாதர், பலதேவர், சுபத்ரா தேவியின் மூர்த்திகளுக்கு தனிப்பட்ட முறையில் சேவை செய்து வந்தார். இந்த மூர்த்திகள் தான் அவருக்கு எல்லாம்.

ஒரு நாள் அரசர் தன் பரிவாரங்களுடன் பூரிக்கு வந்தார். அரசர் சிம்ம துவாரம் வழியாக கோயிலுக்குள் நுழைந்ததும், சில அர்ச்சகர்கள் ஓடிச் சென்று தலிச மோஹபத்ராவிடம் அரசரின் வருகையைப் பற்றி தெரிவித்தார்கள். அரசர் பகவான் ஶ்ரீ ஜெகந்தாதரை தரிசிப்பதற்கு விரும்பினார். தலிச மோஹபத்ரா கருவறையிலிருந்து வெளியே வந்து அரசரை தக்க மரியாதையுடன் வரவேற்று, தரிசனம் செய்து வைப்பதில் முனைந்தார். ஆனால் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் திருமேனியில் மலர்மாலைகள் ஏற்கனவே அகற்றப்பட்டு அந்த மாஹா பிரசாத மாலையை அவர் அணிந்திருந்தார். வழக்கமாக கோயிலுக்கு தரிசிக்க வரும் அரசர் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதருக்கு அலங்காரம் செய்யப்பட்ட மலர்மாலை மகாபிரசாதத்தை கேட்பது வழக்கம். "ஜெகந்நாதரின் பிரசாதம் அரசருக்கு கிடைக்காமல் போனால் அரசரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் " என்று மோஹபத்ரா நினைத்தார். அவரை கவலை தொற்றிக் கொண்டது. கடைசியில் தன் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி, அதை பகவான் ஜெகந்நாதருக்கு அணிவித்தார்.

அரசர் சந்நிதிக்கு வந்து மூர்த்திகளை தரிசித்தார். வழக்கம் போல், தரிசனம் முடிந்த பிறகு, அரசர் அர்ச்சகரிடம், 'எனக்கு மலர் மாலை பிரசாதம் கிடைக்குமா' என்று கேட்டார்.தன் கையை கழுவிக் கொண்டு, திருமேனியிலிருந்து மலர்மாலை பிரசாதத்தை கழற்றி அரசரிடம் கொடுத்தார். அரசர் பிரசாதத்தை பணிவுடனும் பக்தியுடனும் பெற்றுக் கொண்டு, அரண்மனைக்குத் திரும்பினார்.

மலர்மாலை நேர்த்தியாய், விசேஷ நறுமணம் கொண்ட வெள்ளை பூக்களால் தொடுக்கப்பட்டிருந்தது. சிம்மாசனத்தில் உட்கார்ந்த அரசர் மலர் மாலையை உற்றுப்பார்த்தார். நீண்ட கரு முடி ஒன்று அதில் ஒட்டியிருந்தது கவனித்தார். "இது மிகவும் வினோதமாயிருக்கிறது. எப்படி இந்த தலைமுடி மாலையில் இருக்கமுடியும்? ஜெகந்நாதருக்கு தலையில் முடியே கிடையாதே. இந்த பிராமணர் தன் கழுத்திலிருந்த பூமாலையைக் கழற்றி, பகவான் ஜெகந்நாதருக்கு அணிவித்து, பிறகு 'இது ஜெகந்நாதருடைய பிரசாதம்' என்று சொல்லி கொடுத்துவிட்டார் போலும், என்று அரசர் சந்தேகம் கொண்டார். மோஹபத்ராவை உடனடியாக அரண்மனைக்கு அழைத்து வரக் கட்டளையிட்டார். மோஹபத்ராவை அரசர் முன் அழைத்து வந்தபோது, அரசர் மிகுந்த கோபத்தில் இருகிறார் என்று தெரிந்து. "பகவானுக்கு அர்ப்பித்த மாலையில் ஒரு நீண்ட தலைமுடி இருந்ததைப் பார்த்தேன். எப்போதிலிருந்து பகவானுக்கு தலையில் கேசம் முளைக்க ஆரம்பித்தது என்று கூறவும்? உண்மையைச் சொல்லாவிடில் மரணத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும்." என்றார் அரசர். மோஹபத்ரா அச்சம்மேலிட, அவர் பிரார்த்தித்தார். "பிரபோ, தயவுசெய்து ரட்சிக்கவும். எனக்குத் தெரியும் இந்த அரசர் கடுமையானவர் என்று. எந்த மாதிரி தண்டனையை அவர் தருவாரோ, யார் கண்டது! ஒரு பொய்யைச் சொல்லி தண்டனையிலிருந்து தப்பிப்பதுதான் சிறந்தது." ஆகவே மோஹபத்ரா அரசரிடம் சொன்னார்: "ஆம், நிஜம்தான். இப்போது சிறிது காலமாக பகவானின் சிரசில் தலைமுடி வளர்ந்து வருகிறது."என்றார்.

அரசர் சொன்னார்: "நாளை நான் கோயிலுக்குப் வரும்போது. பகவான் ஜெகந்தாதரின் தலையில் முடி வளர்ந்திருப்பதை அப்போது நீங்கள் எனக்கு காட்டலாம். அது நிஜமானால், தங்களுக்கு எல்லா மங்களமும் உண்டாகும். ஆனால் பகவானின் தலையில் முடியைக் காட்டாமல் போனால் ,நீங்கள் கடுமையான தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. என்று கோபமாக கூறினார்.

தலிசா மோஹபத்ரா கோயிலுக்குத் திரும்பி பகவானின் சேவையில் வழக்கம் போல் ஈடுபட்டார். சேவையை முடித்தபிறகு பகவான் முன் விழுந்து சேவித்தார். "ஓ புஜ பலசாலி பிரபோ, நான் உம்மிடம் சொல்ல இன்னும் என்ன இருக்கிறது? என்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதனுக்கு இத்தகைய பெரிய அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறீர்கள். இதன் விளைவால் உமது பெருந்தன்மைக்கு சவால் எழுந்துள்ளது. ஒருவன் ஒரு நாயை சமாதானப்படுத்தி அதை முத்தமிட்டாலும், அல்லது பாம்புக்கு அமிர்தம் அளித்தாலும் ஏதோ ஒரு சமயத்தில் அவை நிச்சயமாய் விஷத்தையே கக்கும். என்னைப் போன்ற பாவாத்மா, தங்களுக்கு சேவை செய்வதற்கே தகுதியில்லாதவன். தங்களது தாமரைத் திருவடிக்கு லட்சுமி தேவி தொடர்ந்து சேவை செய்து வருகிறார். தங்களது தாமரைத் திருவடியை கழுவிய நீரை சிவபெருமான் தன் சிரத்தில் தாங்குகிறார். அந்த நீர் மூவுலகங்களையும் தூய்மைப்படுத்தியுள்ளது. சுகதேவர், மற்றும் சனத்குமாரர்கள் ஆகியோருக்கு மட்டுமே அரிதாய் கிடைக்கக் கூடியதுமான அந்த தாமரை திருவடிக்கு தேவாதி தேவர்களும் தொண்டு புரிகிறார்கள், மாபெரும் யோகிகளும் தியானிக்கிறார்கள். இத்தகைய தாமரைத் திருவடியை, கேவலம் மானிட தேகத்தை சுமந்துள்ள எனக்கும் சேவை செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. நான் உங்களது சேவைக்கு தகுதியில்லாதவனும் கேவலமானவனுமாவேன்.

ஓ பிரபோ, தாங்கள் பாவக்ரஹி, நானோ கேவலம் கர்வமடைந்தவன். என் மண்டைக்கனம் அதிகமானது. என்னால் பிரபுவை அடையாளம் காணமுடியாது போயிற்று. ஆதலால் இத்தகைய பாவச் செயல்களைப் புரிந்தேன். என் கழுத்திலிருந்த மாலையை தங்கள் கழுத்தில் மாற்றத் துணிந்தேன். இதைச் சொல்வதற்கு நான் இன்னும் இங்கே இருக்கிறேனே. இதற்குள் நீங்கள் தங்கள் சுதர்சன சக்கரத்தால் என் தலையை கொய்திருக்க வேண்டும். என்னைக் கொல்லுங்கள். எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் எனக்கு உயிரோடிருந்து அரசரால் தண்டிக்கப்படுவதில் விருப்பமில்லை. உங்களிடம் சொல்வதற்கு இன்னும் என்ன இருக்கிறது? தாங்கள் எப்போதும் தங்கள் பக்தர்களின் நலனில் ஈடுபட்டிருக்கிறீர்கள். தாங்கள் தங்களுடைய பக்தர்களால் நிரய சிரமப்படுகிறீர்கள் என்பதை சொல்லக் கேட்டிருக்கிறேன். இதை நிருபிக்கும் பொருட்டு தாங்கள் தங்கள் மார்பில் ஸ்ரீவத்ஸ குறியை ஏற்றுள்ளீர்கள். இதை நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன். அதனால்தான் எனக்கு பயமில்லை. தாங்கள் கருணைவாய்ந்தவர். மேற்கண்டவாறு பிரார்த்தித்த மோஹபத்ரா மேலும் தொடர்ந்து இறைஞ்சினார்: "உங்களுக்குத் தெரியும் இரவு முடிந்தவுடன் அரசன் என்னை அழைத்துப் போய், கடும் தண்டனை தருவார் என்று. எப்படி என்னால் அதை பொறுத்துக் கொள்ளமுடியும்? அரசன் பிடித்துக் கொண்டு போவதற்கு முன்னால் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொள்வது சிரேஷ்டமானது." இவ்வாறு புலம்பிய பிறகு மோஹபத்ரா கோயில் கதவைச் சாத்திவிட்டு, தன் வீட்டிற்குச் சென்றார். பகவான் ஜெகந்நாதர், தன்னை காப்பாற்றுவதற்கு ஏற்பாடு செய்யாவிட்டால், இரவு முடியும்போது விஷமருந்தி உயிரை விட்டுவிடுவதென்ற முடிவுடன் தன் பக்கத்தில் விஷம் அடங்கிய சீசா ஒன்றை கையில் வைத்துக்கொண்டு. ஏதாவது அற்புதம் நடக்கும் என்று எதிர்பார்த்து தூங்கச் சென்றார்.

பக்தனின் மனதை பகவான் ஜெகந்நாதர் அறிந்தார். தலிச மோஹபத்ரா தூங்கிக் கொண்டிருக்கும் அறைக்கு பகவான் வந்தார். பகவான் அவருக்கு கனவில் தோன்றி கூறினார்: "ஏன் நீ இவ்வளவு பயந்து போயிருக்கிறாய்? எனக்கு சேவை செய்த உனக்கு பயப்பட ஒன்றுமேயில்லை. நான் இந்த நீலாசலத்தில் இருக்கும் வரை, இந்த அரசரால் உன்னை என்ன செய்ய முடியும்? கோடி அரசர்கள் வந்தாலும் உனக்கு தீங்கிழைக்க முடியாது, ஏன் இந்த அரசரை பார்த்து இவ்வளவு அஞ்சுகிறாய்? நான் என்ன வழுக்கையனா? என் தலையில் கேசம் இருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? அஞ்சாதே. நாளை கோயிலுக்குப் போகவும், என் தலையில் கேசம் நிறைய படர்ந்திருப்பதை நீபார்ப்பாய். அதை நீ அரசருக்கு காட்டலாம்." என்றார்.

மோஹபத்ரா கண்விழித்துப் பார்த்தார். அருகில் யாரும் இல்லை. கனவு மூலமாக பகவான் தனக்கு கருணை காட்டினாரோ என்று நினைத்தார். பொழுது புலர்வதற்கு முன் அவர் நீராடிவிட்டு, கோயிலுக்குச் சென்றார். கதவைத் திறந்து விட்டு பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரை நோக்கினார். சிரசில் நீண்ட சுருண்ட கருமுடி விதவிதமான திவ்ய மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருப்பதைப் பார்த்து ஆச்சர்ய மடைந்தார். முடி நீண்டு விரிந்து, பகவானுடைய இடுப்பைத் தொட்டு ரத்ன சிம்மாசனத்தை இடித்தது. இதைப் பார்த்த பிறகு மோஹபத்ரா மிகவும் ஆனந்தமடைந்தார். பிறகு பகவானுடைய சேவையில் பயமின்றி ஈடுபட்டார்.

அதிகாலை அரசர் கோயிலுக்கு வந்தார். "பகவானுடைய தலையில் முடியைக்காட்டும்" என்று மோஹபத்ராவிடம் அதிகாரத் தொனியில் பேசினார். பயமில்லாமல், "உங்களுக்கு காட்டுவதற்கு என்ன இருக்கிறது? நீங்களே பகவானுக்கு நெருக்கமாய் போய் கேசம் இருக்கிறதா இல்லையா என்று பார்த்துக் கொள்ளவும்," என்று கூறினார். அரசர் திருமேனிக்குப் பின்னால் போய் நீண்டு சுருண்ட கருமுடி திருமூர்த்தியின் இடுப்பைத் தொடுவதைப் பார்த்து திகைத்தார். பூஜாரியிடம் அரசர் கேட்டார்: "பகவான் சிரசில் நீங்கள் இந்த முடியை பசை கொண்டு ஒட்டிவைத்தீரா? அல்லது இது பகவான் தாமே வளர்த்துக் கொண்ட நிஜ முடியா?" என்று கேட்டார். "முடி நிஜமா போலியா என்பதை நீங்களே பரிசோதித்துப் பார்க்கலாம். என்றார் மோஹபத்ரா " ஜெகந்நாதரின் சிரசிலிருந்த சில முடிக் கற்றைகளை அரசர் இழுத்து பார்த போது உடனடியாக திருமேனியின் சிரத்திலிருந்து, ரத்தம் கசிய ஆரம்பித்தது. இதைப் பார்த்ததும் அரசர் மூர்ச்சையடைந்து தரையில் விழுந்தார். கண் விழித்ததும் அரசர் ஓடி சென்று மோஹபத்ராவிடம் பாதத்தைப் பற்றிக் கொண்டார். "தயவு செய்து என்னைக் காப்பாற்றவும். நான் மாபெரும் மூடனும் . பகவானுக்கு பெருத்த அபசாரம் இழைத்தவனும். ஆவேன் அதனால் பக்தவத்சலனான பகவான் ஜெகந்நாதரின் கருணையை அறியாமல் இருந்தேன். இப்போது எனக்குப் புரிகிறது பகவானுக்கும் பக்தனுக்கும் விதியாசமில்லை என்று, தன் பக்தனுக்கு இழைத்த எந்த அபசாரத்தையும் தனக்கு இழைக்கப்பட்ட அபசாரமாகவே பகவான் எடுத்துக் கொள்கிறார். அரசர் மோஹபத்ராவின் பாதத்தில் விழுந்தார்.

மோஹபத்ரா அரசரை உயர்த்தி, " உங்கள் மேல் எந்த தவறும் இல்லை. இது பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் காரணமற்ற கருணையும் மகிமையுமாகும் என்றார்.. அவர் என் குற்றங்களை மன்னித்து என்னிடம் கருணை காட்டியுள்ளார்." இவ்வாறு அவர்கள் கூரிக்கொண்டே பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரை கண்ட போது அவரது சிரசில் முடியில்லாமல் இருப்பதைப் கண்டார்கள்

இந்த அற்புதமான நிகழ்வை கண்ட அரசர் "ஓ பகவானே, உங்களால் எதுவும் செய்ய முடியும். தங்கள் மகிமையை தேவர்களும் அறியார். தங்கள் மனோ நிலையை எப்படி நான் புரிந்துகொள்வது? தயவுசெய்து நான் புரிந்த பிழைகளை மன்னித்தருள்வீர். தாங்களுக்கு எல்லோருக்கும் சமமானவர். உங்களுக்கு விரோதியுமில்லை, நண்பனும்மில்லை." என்றார்.

தன் பிரார்த்தனைகளை செலுத்திய பிறகு அரசர், மோஹபத்ராவுக்கு பரிசுகளை வழங்கிவிட்டு மகிழ்ச்சியுடன் அரண்மனையை நோக்கி புறப்பட்டார். மோஹபத்ரா நன்றி உணர்வுடன் தனது நித்திய சேவைக்கு திரும்பினார்.

பிரபு ஜெகந்நாதரின் இந்த சிரேஷ்டமான லீலையைப் பார்த்த, கூடியிருந்த பக்தர்கள்
ஜெய் ஜெகந்நாத், ! ஜெய் ஜெகந்நாத் ! ஜெய் ஜெகந்நாத் ! என்று மகிழ்ச்சி பொங்க பரவசத்துடன் கோஷம் எழுப்பினார்கள்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram


🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/udvegakathaigal


Whatsapp :- 


🍁🍁🍁🍁🍁


https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏



Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more