சிவபெருமானுடைய வாகனம் - நந்தி



சிவபெருமானுடைய வாகனம் - நந்தி

(ப்ரஹ்ம வைவர்த்த புராணம் - கிருஷ்ண ஜென்ம காண்டம் - அத்தியாயம் 36 )

வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


சிவபெருமானுடைய வாகனமான நந்திதேவருடைய தோற்றம் பற்றி ப்ரஹ்ம வைவர்த்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவான் கிருஷ்ணருடைய உடலின் இடது பாகத்திலிருந்து எவ்வாறு ஸ்ரீமதி ராதா ராணி மற்றும் கோபர்கள், கோபிகைகள் அவதரித்தனர் என்பது பற்றி பிரம்ம காண்டத்தின் ஐந்தாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல அழகான பசுக்கள், காளைகள், உயரிய ரக சுரபி பசுக்கள் மற்றும் காமதேனு போன்றவைகளும் பகவான் கிருஷ்ணரின் உடலிலிருந்து தோன்றின. அதிலிருந்து ஆயிரம் சிங்கங்களுக்கு சமமான ஒரு காளையை பகவான் கிருஷ்ணர் தேர்வு செய்து, சிவபெருமானுக்கு அவருடைய வாகனமாக இருக்க வழங்கினார். பகவான் கிருஷ்ணரின் உடலிலிருந்து தோன்றிய காரணத்தால், நந்தி தேவர், பகவான் கிருஷ்ணரின் விரிவாங்கமாகவே கருதப்படுகிறார். இது பின்வரும் கதையில் விளக்கப்பட்டுள்ளது.

உலகத்தின் நலன் கருதி, ஒரு முறை சிவபெருமான், பல தொல்லைகள் செய்துகொண்டிருந்த "திரிபுராசுரன்" என்ற அரக்கனோடு யுத்தத்தில் ஈடுபட்டார். ஆனால் சிவபெருமான் மிகுந்த கர்வத்துடன் இருந்தார். மூவுலகையும் அழிக்கும் தன்னோடு, மின்மினிப்பூச்சி போல் இருக்கும் இந்த அசுரன் நிச்சயமாக தோற்று விடுவான் என்று எண்ணினார். ஆனால் ஆச்சர்யமளிக்கும் விதமாக அந்த அசுரன் மிகவும் பலசாலியாக இருந்தான். ஒரு வருடம் இரவு பகலாக யுத்தம் செய்தும் இருவராலும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியவில்லை. திரிபுராசுரன், தன்னுடைய மாய சக்தியை பயன்படுத்தி வானில் பறந்தான். சிவபெருமானும் அவனுக்கு நிகராக பறந்து சண்டையிட்டார். இவ்வாறாக ஆகாயத்தில் நடந்த ஒரு மாத சண்டையின் போது, அவன் சிவபெருமானுடைய தேர், வில் மற்றும் அணைத்து ஆயுதங்களையும் துவம்சம் செய்தான். மிகவும் சினம் கொண்ட சிவபெருமான், அவருடைய முஷ்டியால், அவன் மார்பில் வேகமாக தாக்கினார். இதை சற்றும் எதிர்பாராத திரிபுராசுரன், மயங்கி விழுந்தான். எனினும் சுதாகரித்துக்கொண்டு வேகமாக எழுந்து சிவபெருமானை திருப்பி பலமாக தாக்கினான். சிவபெருமான் தோல்வியை தழுவும் நிலையை அடைந்து விட்டதை பார்த்த தேவர்கள் பதற்றம் அடைய ஆரம்பித்தார்கள். சிவபெருமான், பகவான் கிருஷ்ணரை நோக்கி பிரார்த்திக்க ஆரம்பித்தார். தான் ஆபத்தில் இருப்பதை நன்கு உணர்ந்து, பகவானிடம் சரணடைந்தார். உடனடியாக பகவான் கிருஷ்ணர் ஒரு அழகிய காளை வடிவம் எடுத்து, சிவபெருமானை முதுகில் தூக்கினார். மேலும் சிவபெருமானுக்கு கவசத்தையும் திரிசூலத்தையும் வழங்கினார். பகவான் வழங்கிய திரிசூலத்தை எடுத்து சிவபெருமான் திரிபுராசுரனை தாக்கினார். அவன் பஸ்பமாகி மண்ணில் விழுந்தான்.

தன்னுடைய ஆணவமே இந்த சம்பவத்திற்கு காரணம் என்பதை உணர்ந்த சிவபெருமான், அகங்காரத்தை துறந்து பகவானை பிரார்த்திக்க ஆரம்பித்தார்.

இந்த சம்பவத்தை ராதாராணியிடம் கூறிய பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் , பின்வருமாறு கூறினார்:

"ததோ அஹம் வ்ரிஷ ரூபேண வஹாம்ய தேன தம் ப்ரியம்
மம ப்ரியதமோ நாஸ்தி திரைலோக்கியேஷு சிவாத் பரஹ"

அன்று முதல் சிவனுடைய வாகனமாக, சிவனை நான் தூக்கி செல்கிறேன்.ஏனெனில் மூவுலகங்களில் சிவனை தவிர , எனக்கு பிரியமானவன் வேறு யாரும் இல்லை".


 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, 
ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண!

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி

🔆🔆🔆🔆🔆🔆🔆

Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇

🔆🔆🔆🔆🔆🔆🔆

சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more