மாறுபட்ட பார்வை




 மாறுபட்ட பார்வை


வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்

🔆🔆🔆🔆🔆🔆🔆



சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு அஸ்தினாபுரத்தை மிகவும் சக்திவாய்ந்த குருவம்சத்தினர் ஆண்டு வந்தனர். அதில் மகராஜா பாண்டுவின் ஐந்து மகன்கள் நீதி நேர்மை மிக்க மிக உன்னதமானவர்களாக இருந்தனர். இவர்கள் பாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டனர். மகாராஜா பாண்டுவின் சகோதரரான திருதராஷ்டிரரின் நூறு மகன்களும் கௌரவர்கள் என்று அழைக்கப்பட்டனர். பாண்டவர்களில் யுதிஷ்டிரர் மூத்தவர், கௌரவர்கள் துரியோதனன் மூத்தவனாவார்.

ஒரு நாள் அந்த குடும்பத்தின் பெரியவர்கள் யுதிஷ்டிரன் மற்றும் துரியோதனனை அழைத்து அவர்களுக்கென்று ஒரு பணியை நியமித்தனர். மேன்மை பொருந்திய யுதிஷ்டிரனிடம், நீ சென்று உன்னை விட தாழ்ந்தவர் என்று நீ நினைக்கும் ஒருவரைக் கண்டுபிடித்து வருமாறு கூறினர். அதைபோல துரியோதனனிடம் உன்னை விட உயர்ந்தவர் என்று நீ நினைக்கும் ஒருவரைக் கண்டுபிடித்து வருமாறு கூறினர்.. இருவரும் வெளியே சென்றார்.

யுதிஷ்டிரர் இராஜ்ஜியத்தின் எல்லா இடங்களுக்கும் பிரயாணம் செய்து நிறைய மக்களை சந்தித்தார். கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவமான குணங்கள் கொடுத்திருப்பதைக் கண்டு வியந்து போனார். அவரால் யாரிடமும் எந்த குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் அவர் தனது ராஜ்ஜியம் திரும்புகையில் வழியில் ஒருவர் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து தனக்குள் எண்ணினார், " இன்று ஏகாதசியாயிற்றே, இந்த விரதத்திற்கு தண்ணீர் கூட விலக்கு ஆயிற்றே. அதனால்தானே இந்த விரத நேரத்தை சாஸ்திரங்கள் படிப்பதிலும் பகவானின் புனித நாமங்களைப் பாடுவதிலும் நாம் செலவிடுகிறோம். இவர் இன்று நீர் அருந்துவதற்கு விலக்கு எடுக்கவில்லையா" என்று நினைக்கலானார். அவர் தனது மனதிற்குள் என்னைவிட தாழ்ந்தவர் ஒருவரை கண்டுபிடித்துவிட்டேன் என்றும் நினைத்தார். இருப்பினும் அவர் இதை உறுதிப்படுத்த முடிவு செய்து அவரிடம் சென்று கேட்டார்,அன்பானவரே, இன்று நீங்கள் நீர் அருந்துவதற்கு விலக்கு அளிக்கவில்லையா? என்றார். அதற்கு அந்த மனிதர் பணிவுடன் பதிலளித்தார், நிச்சயமாக ஐயா நான் இன்று விரதம்தான். இந்த நீர் தாகத்துடன் இருக்கும் எனது குதிரைகளுக்கானது என்றார். யுதிஷ்டிரர் தனக்குள் வெட்கினார். ஒரு குறையும் இல்லாத ஒருவரிடம் எப்படி தன்னால் குறைகாண முடிந்தது என்று நினைத்தார். பின் அவரிடம் இருந்து விடைபெற்றார்.

பின் அவர் தன் ராஜ்ஜியத்திற்குத் திரும்பி அங்குள்ள பெரியவர்களை பணிவுடன் அணுகி தனது வணக்கத்தைத் தெரிவித்து பின்வருமாறு கூறினார். இது எனக்கு ஒரு கடினமான தேடலாகத்தான் இருந்தது. ஏனென்றால் என்னைவிட தாழ்ந்தவர் எவரும் இல்லை கடவுள் ஒவ்வொருவரையும் ஒரு விசேஷ குணங்களுடனேயே படைத்துள்ளார் என்றார்.

துரியோதனனுக்கும் யுதிஷ்டிரரைப் போலவே இது கடினமாகவே இருந்தது. ஏனென்றால் அவருக்குத் தன்னைவிட உயர்ந்தவர் எவரையும் கண்டறிய முடியவில்லை. அவனும் நிறைய மனிதர்களை சந்தித்தான். அவ்வாறு சந்தித்த எல்லா மனிதர்களிடமும் ஏதாவதொரு குறையை அவன் கண்டான். எனவே நானே சிறந்தவன், என்னைவிட சிறந்தவர் எவரும் இல்லை என்று நினைத்தான்.

துரியோதனனும் தனது ராஜ்ஜியம் திரும்பி பெரியவர்களை அணுகி, எல்லோரும் ஏதோ விதத்தில் குறை, மற்றும் தவறுகள் நிறைந்தவர்களாகவே உள்ளனர். இதனால் நானே சிறந்தவன், என்னைவிட உயர்ந்தவர் எவரும் இல்லை என்றார்.

இதிலிருந்து அஹங்காரம் கொண்டவர்கள் மற்றவர்களிடத்தில் எப்பொழுதும் குறைகளையும் தன்னிடம் நிறைகளையும் காண்கிறார்கள். ஆனால் அதே சமயம் உன்னத ஆத்மாக்கள் தன்னிடமுள்ள குறைகளையும் மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும், நிறைகளையுமே காண்பார்கள் என்பது புரிகிறது.

இத்தகைய கெட்ட குணங்கள் அசுர இயல்புடையவர்களின் குணங்களாக பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் ஶ்ரீமத் பகவத்கீதையில் உரைக்கிறார்.



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஶ்ரீமத் பகவத் கீதை / அத்தியாயம் 16 பதம் 4

🔆🔆🔆🔆🔆🔆🔆


தம்போ தர்போ (அ)பிமானஷ் ச
க்ரோத: பாருஷ்யம் ஏவ ச
அக்ஞானம் சாபிஜாதஸ்ய பார்த
ஸம்பதம் ஆஸுரீம்


மொழிபெயர்ப்பு

🔆🔆🔆🔆🔆🔆🔆


பிருதாவின் மைந்தனே, தற்பெருமை, அகந்தை, வீண் அபிமானம், கோபம், கொடூரம், அறியாமை ஆகியவை அசுர இயல்புடையவர்களின் குணங்களாகும்.


பொருளுரை

🔆🔆🔆🔆🔆🔆🔆


இப்பதத்தில் நரகத்திற்கான ராஜ பாதை விவரிக்கப்பட்டுள்ளது. கொள்கைகளைப் பின்பற்றாவிடினும், ஆன்மீக ஞானத்தில் முன்னேற்றம் பெற்றுள்ளதாகவும் தர்மத்தைப் பின்பற்றுவதாகவும் அசுரர்கள் தம்மை போலியாக காட்டிகொள்கிறார்கள். ஓரளவு கல்வியையோ மிகுந்த செல்வத்தையோ அடைந்துவிட்டால், அவர்கள் எப்போதும் கர்வத்துடனும் அகந்தையுடனும் இருப்பர். மற்றவர்கள் தம்மை வழிபட வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர், பிறரால் மதிக்கப்படுவதற்கான தகுதி அவர்களிடம் இல்லாவிடினும், மதிப்பளிக்கும்படி வற்புறுத்துகின்றனர். அவர்கள் அற்பமான விஷயங்களில் மிகவும் கோபமுற்று கொடூரமாகப் பேசுகின்றனர், கண்ணியமாக நடந்து கொள்வதில்லை, எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக்கூடாது என்பதை அவர்கள் அறிவதில்லை. தங்களது சொந்த விருப்பத்தின்படி, மனம் போன போக்கில எதையும் செய்கின்றனர், எந்த ஓர் அதிகாரியையும் அவர்கள் ஏற்பதில்லை. தாயின் கருவில் அவர்களது உடல் தொடங்கியதிலிருந்து இந்த அசுர குணங்கள் உள்ளன.மேலும், அவர்கள் வளரும்போது இந்த குணங்களும் வளர்ந்து அமங்களமான இத்தன்மைகளை வெளிப்படுத்துகின்றன.



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, 
ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண!

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி

🔆🔆🔆🔆🔆🔆🔆

Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇

🔆🔆🔆🔆🔆🔆🔆

சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami




Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more