கடவுள் இல்லாத மதமா ?









பொதுவாகவே தற்காலத்தில் மதத் தலைவர்களாக காட்டிக் கொள்பவர்கள் கடவுளைப் பற்றிய கருத்தற்றவர்களே. இருந்தும் அவர்கள் மதத்தைப் பற்றி உபதேசிக்கிறார்கள். அத்தகைய மதத்தினால் பயன்தான் என்ன ? மக்கள் தவறாகவே வழிகாட்டப்படுகிறார்கள். கடவுளின் கட்டளையே உண்மையான மதமாகும்; தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-பரணீதம். கடவுளைப் பற்றிய எண்ணமேயில்லாதபோது மதமென்ற கேள்விக்கிடமேது ? இப்பாசாங்கு எவ்வளவு நாள் நீடிக்கும்? நிச்சயமாக அழிந்தே தீரும். கடவுளைப் பற்றிய அறியாமையே தற்போதைய சீரழிவுக்கு காரணம்
சட்டமென்பது அரங்கத்தின் கட்டளையென்பது போல, மதம் கடவுளின் கட்டளையாகும். ஆனால் சமுதாயத்தில் அரசாங்கமே இல்லாதபொழுது அரசாங்கத்தின் சட்டத்திற்கு இடமேது ? ஒவ்வொருவரும் சொந்த சட்டங்களையே உற்பத்தி செய்வார்கள். அதுவே இன்றைய மதங்களின் நிலையாகும். கடவுளே இல்லை என்பதால், கடவுளின் கட்டளைகளை பின்பற்றுபவர்களுமில்லை..
ஆனால், கிருஷ்ண பக்தர்களாகிய நாங்கள் கடவுள் பற்றிய தெளிவான சிந்தனையுடையவர்கள். இதோ பரமபுருஷரான கடவுள் கிருஷ்ணர். அவர் கட்டளையிடுகிறார். அவற்றை நாங்கள் ஏற்றுக் கொள்ளுகிறோம். ஆகையால் இது தெளிவான மாதமாகிறது. ஆனால், கடவுளின் சிந்தனையே இல்லையெனில், கடவுளின் கட்டளைகளுமில்லை. எனவே, மதம் என்ற பேச்சுக்குமிடமில்லை. பிறமதத்தவரிடம், கடவுளின் உருவத்தைப் பற்றி அவர்கள் எண்ணம் என்ன என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் தெளிவாக பதில் சொல்ல முடியாது. ஆனால் கிருஷ்ண பக்தர்களாகிய நாம் உடனடியாகக் கூற முடியும்
வேணும் க்வணந்தம் அரவிந்த - தளாயதாக்ஷம்
பர்ஹாவதம்ஸம் அஸிதாம்புத - ஸுந்தராங்கம்
கந்தர்ப - கோடி - கமநீய - விசேஷ - ஸோபம்
கோவிந்தம் ஆதி - புருஷம் தம் அஹம் பஜாமி
ஓ கோவிந்தா! ஆதி பகவானே, குழலிசைப்பதில் திறமை வாய்ந்தவரே, மயில் இறகால் கிரீடத்தை அணிந்திருப்பவரே! கோடி மன்மதன்களை வசீகரிக்கும் அழகுடையவரே! நான் உம்மை வணங்குகிறேன். (பிரம்ம-ஸம்ஹிதா 5.30)
கடவுளைப்பற்றி கேட்டவுடன், அவரைப் பற்றிய தெளிவான கருத்தை வெளிப்படுத்துவதே மதம். கடவுளைப் பற்றி தெளிவான தொரு எண்ணமற்ற போது மதமுமில்லை, மக்களிடம் ஒழுக்கமும் இருப்பதில்லை. ஒழுக்கமில்லையெனில் மனித நாகரீகம் சீர்குலைகிறது. நாகரீகம் சீர்குலைவதால் மக்கள் மேன்மேலும் மிருகங்களாக மாறி வருகிறார்கள்.
( ஶ்ரீல பிரபுபாதர் / புத்தகம் - ஆன்மீக வாழ்க்கை / அத்தியாயம் ஒன்று )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment