🌼🌼🌼🌼🌼🌼🌼
ஒருநாள் கிருஷ்ணர் காட்டில் வனபோஜனம் செய்ய
விரும்பினார். எனவே மற்ற இடைச் சிறுவர்களுடனும், அவர்களது கன்றுகளுடனும் சுக்கிரமாக
அவர் காட்டிற்குச் சென்றார். அவர்கள் வனபோஜனத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தபொழுது
பூதனைக்கும். பகாசுரனுக்கும் தம்பியான அகாசுரன், கிருஷ்ணரையும், அவரது சகாக்களையும்
கொல்லும் எண்ணத்துடன் அங்கு தோன்றினான். கம்சனால் அனுப்பப்பட்ட அந்த அசுரன், எட்டு
மைல்கள் நீளத்திற்கும், ஒரு மலையின் உயர்த்திற்கும் தன்னை விரிவடையச் செய்து கொண்டான்.
அவனது வாய் பூமியிலிருந்து சுவர்க்க லோகங்கள் வரை விரிந்திருப்பதபோல் காணப்பட்டது.
அகாசுரன் இந்த ரூபத்தை ஏற்று சாலையில் படுத்திருந்தான். அசுரனின் இந்த ரூபத்தை, பிருந்தாவனத்தின்
அழகிய இடங்களுள் ஒன்றாக எண்ணிய கிருஷ்ணரின் நண்பர்களான இடைச்சிறுவர்கள், அப்பெரிய மலைப்
பாம்பின் வாய்க்குள் புக விரும்பினர். அந்த மலைப்பாம்பின் பிரம்மாண்டமான ரூபம் அவர்களுக்கு
விளையாடி மகிழும் இடமாயிற்று. ஒருவேளை அந்த ரூபம் ஆபத்தானது என்றாலும், தங்களைக் காப்பாற்ற
கிருஷ்ணர் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் சிரித்துக் கொண்டே அந்த அசுரனின் வாய்க்குள்
அவர்கள் புகுந்தனர்.
அகாசுரனைப் பற்றிய எல்லா விவரங்களையும் கிருஷ்ணர்
அறிந்திருந்ததால், அவனது வாய்க்குள் தம் நண்பர்கள் பிரவேசிப்பதைக் கிருஷ்ணர் தடுக்க
விரும்பினார். ஆனால் அதற்குள் எல்லா இடைச்சிறுவர்களும் தங்கள் கன்றுகளுடன் அந்த அசுரனின்
வாய்க்குள் புகுந்து விட்டனர். கிருஷ்ணர் வெளியில் காத்திருந்தார். அவர் வாய்க்குள்
நுழைந்ததும், வாயை மூடி எல்லோரையும் கொன்று விடாலம் என்றெண்ணிய அகாசுரன் கிருஷ்ணருக்காகப்
பொறுமையோடு காத்திருந்தான். இதற்கிடையில் சிறுவர்களைக் காப்பாற்றி, அகாசுரனைக் கொல்லம்
உபாயத்தைப்பற்றி கிருஷ்ணர் யோசித்தார். பிறகு அசுரனின் பிரம்மாண்டமான வாய்க்குள் புகுந்து
தம் நண்பர்கள் இருக்கும் இடத்தை அடைந்த அவர், தம் உடலை மிகவும் பெரிதாக விரிவடையச்
செய்தார். இதனல் அந்த அசுரன் மூச்சுத் திணறி இறந்தான். அதன் பிறகு, கிருஷ்ணர் தமது
அமுதான பார்வையைத் தம் நண்பர்கள் மீது செலுத்தி அவர்களைப் பிழைக்கச் செய்தார். பிறகு
அவர்களனைவரும் பாதிக்கப்படாமல் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தனர், இவ்விதமாக கிருஷ்ணர்
எல்லாத் தேவர்களையும் உற்சாகப்படுத்தினார். அவர்களும் தங்கள் இன்பத்தையும், மகிழ்ச்சியையும்
வெளிப்படுத்தினர். துர் புத்தியுள்ள ஒரு பாவிக்கு, கிருஷ்ணரின் பிரகாசத்துடன் ஜக்கியமாகும்
(ஸாயுஜ்ய-முக்தியடையும்) வாய்ப்பில்லை. ஆனால் பரமபுருஷர் அகாசுரனின் உடலுக்குள் புகுந்ததால்,
அவரால் தொடப்பட்ட அந்த அசுரன், பிரம்மஜோதியில் இரண்டறக் கலந்து, ஸாயுஜ்ய-முக்தியைப்
பெறும் வாய்ப்பைப் பெற்றான்.
இந்த லீலையை கிருஷ்ணர் நிகழ்த்தியபொழுது, கிருஷ்ணருக்கு ஜந்து வயது மட்டுமே பூர்த்தியாகி இருந்தது.
🌼🌼🌼🌼🌼🌼🌼
அகாசுரனை நம் இதயத்தில் இருக்கும் கொடூரமான வன்முறை செயல்களுக்கு பக்திவினோத தாகூர் ஒப்பிடுகிறார். கிருஷ்ணர் அகாசுரனை தன் ஐந்து வயதில் வதம் செய்தார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண🙏
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment