மரியாதையின் பொருட்டுத் திருமூர்த்தத்தின் முன்னர் விழுந்து வணங்குதல்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
"நாரதீய புராணத்தில்" திருமூர்த்தத்திற்கு மரியாதை செய்யும் பொருட்டு அதன் முன் விழுந்து வணங்குவது பற்றிய குறிப்பு ஒன்று காணப்படுகிறது. பெரிய வேள்வி செய்த ஒருவனும் திருமூர்த்தத்தின் முன்பு விழுந்து வணங்குவதன் மூலம் தனது மரியாதைக்குரிய வந்தனங்களை வெளிப்படுத்துவோனும் இணையாகமாட்டார்கள்" அதோடல்லாமல் பல்வேறு மகாயக்ஞங்களைச் செய்தவன் அதன் காரணமாகப் புண்ணிய பலன்களைப் பெறுகிறான். ஆனால் அப்பலன்கள் தீர்ந்து போனவுடன் மீண்டும் இப்பூமியில் பிறப்பெடுக்கிறான். மாறாக திருமூர்த்தத்தின் முன்பு விழுந்து வணங்கி மரியாதை செய்தவன் இவ்வுலகில் மீண்டும் பிறப்பதில்லை. ஏனென்றால் அவன் கிருஷ்ணரின் உலகத்திற்கு நேரடியாக செல்கிறான்.
( ஶ்ரீல பிரபுபாதர் / பக்தி ரஸாம்ருத சிந்து / அத்யாயம் 9 )
Comments
Post a Comment