முத்து மூக்குத்தி








ஒரிசா தேசத்தில் பரம பாகவதரான புருஷோத்தம தேவர் என்னும் மஹாராஜா ஆட்சி செய்து வந்தார். அவர் விஜயநகரத்து ராஜகுமாரியை மணம் செய்து கொள்ள விரும்பித்தன் விருப்பத்தை வெளியிட்டார். இதற்கு விஜயநகர அரசன் சம்மதிக்கவில்லை. ஏனெனில் வருடாவருடம் வரும் மாபெரும் ஜெகன்நாதரின் தேர்திருவிழாவில் மன்னர் ஜெகன்நாதரின் தேரின் முன் துடைப்பத்தால் சுத்தம் செய்வது மரபு
( பகவான் ரதத்திற்கு எடுத்துச் செல்லும் சமயத்தில் மன்னர் பிரதாபருத்ரர் தங்கக் கைப்பிடி கொண்ட துடைப்பத்தைக் கொண்டு தாமே தமது கையினால் வீதியினை சுத்தம் செய்யும் சேவையில் ஈடுவார். மன்னர் வீதியில் சந்தன நீரைத் தெளிப்பார்.. அவர் ராஜ சிம்மாசனத்தின் உரிமையாளராக இருந்தபோதிலும் பகவான் ஜகந்நாதரின் திருப்திக்காக துச்சமான சேவையில் ஈடுபட்டார். மன்னர் மிகவும் மதிக்கத்தக்க நபராக இருந்தபோதிலும், அவர் பகவானுக்காக துச்சமான சேவையினை ஏற்றுக் கொண்டார் எனவே, பகவானின் கருணையைப் பெறுவதற்கு அவர் முழு தகுதியுடைய நபரானார்.
மன்னர் இந்த மாதிரி சேவையில் ஈடுபடுவதை கேள்விப்பட்ட விஜயாநகர மன்னர் தன் மகளை கோயில் பெருக்குகிறவனுக்குத் தரமாட்டேன் என்று கூறினார். இதனால் கோபமடைந்த மஹாராஜா புருஷோத்தம தேவர் விஜயநகரத்தின் மீது படையெடுத்தார். பகவான் ஜகன்னாதனின் கிருபையால் விஜய நகரத்தை வென்று தனது ராஜ்யத்தில் சேர்த்துக் கொண்டார். ராஜ கன்னிகையையும் மணந்து கொண்டார். அப்போதுதான் மஹாராஜா சாட்சி கோபாலனை ஜகன்னாதபுரிக்கு எழுந்தருளும்படி பிரார்த்தித்தார். மஹாராஜாவின் பக்தியால் பரவசமான சாட்சி கோபாலன் புரிக்கு எழுந்தருளி ஜகன்னாத பகவானின் கோயிலில் மாணிக்க சிம்மாசனத்தில் சிறிது காலம் வீற்றிருந்தார். பகவான் ஶ்ரீ ஜகன்னாதருக்கும் புதிதாக வந்த சாட்சி கோபாலனுக்கும் சிறிது ப்ரேம கலகம் தோன்றியது மஹாராஜா புருஷோத்தம தேவர் இருவரையும் ஒன்றாக வைத்திருப்பது உசிதமல்ல என்று கருதினார். முடிவில் புரியிலிருந்த மூன்றுகாத தூரத்தில் 'சத்தியவாதி' என்னும் கிராமத்திற்கு அருகில் சாட்சி கோபால பகவானுக்கு கோவில் கட்டுவித்தார்.
இவரது மஹிமை அபாரமானது. ஒருமுறை ஒரிஸ்ஸா தேசத்து மகாராணி கோபாலனை தர்சிக்க வந்தாள் கோபாலனின் மனமோகனமான மூர்த்தியைக் கண்டு அவள் தன்னை மறந்தாள். இந்த பகவானுக்கு மூக்குக் குத்தியிருந்தால் நான் எனது விலையுயர்ந்த முத்து மூக்குத்தியை அணிவித்துப் அலங்கரித்து பார்ப்பேனே என்று ஆசைப்பட்டாள். மறுநாளே மஹாராணியின் ஸ்வப்னத்தில் சாட்சி கோபாலன் வந்து நின்று கொண்டு கூறலானார்- மஹாராணி! நான் உனது விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் எனது மூக்கு குத்தியிருப்பது பூஜாரிகளுக்குத் தெரியவில்லை. என் மூக்கில் துளை இருப்பதை நாளை நீ கவனமாகக் புஜாரிக்கு காட்டு. மகிழ்ச்சியோடு நீ உன் முத்தை அணிவித்து உனது விருப்பத்தைப் பூர்த்தி செய்துகொள்''.என்றார்.
பொழுது புலர்ந்ததும் மஹாராணி மஹாராஜாவிடம் நடந்தைக் கூறினாள். மஹாராஜா அப்போதே அர்ச்சகர்களை அழைத்து பகவானின் மூக்கில் துளையிருப்பதைக் காட்டினான். மஹாராணி மிகுந்த ப்ரியத்தோடு விலை மதிப்பில்லாத தனது முத்து மூக்குத்தியை பகவானது மூக்கில் அணிவித்தாள் ஆனந்தம் கொண்டார்.
Comments
Post a Comment