நான்யம் குணேப்ய: கர்தாரம்
யதா த்ரஷ்டானுபஷ்யதி
குணேப்யஷ் ச பரம் வேத்தி
மத்-பாவம் ஸோ (அ)தி கச்சதி
மொழிபெயர்ப்பு







எல்லாச் செயல்களிலும், இயற்கையின் குணங்களைத் தவிர வேறு கர்த்தா யாரும் இல்லை என்பதையும், பரம புருஷர் இந்த இயற்கை குணங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதையும் அறிந்து முறையாகக் காண்பவன், எனது ஆன்மீக இயற்கையை அடைகின்றான்.
பொருளுரை






முறையான ஆத்மாக்களிடமிருந்து கற்று, முறையாகப் புரிந்து கொள்வதால், ஜட இயற்கையின் குணங்களுடைய செயல்களைக் கடக்க முடியும். உண்மையான ஆன்மீக குரு கிருஷ்ணரே, அவர் இந்த ஆன்மீக ஞானத்தை அர்ஜுனனுக்கு உபதேசிக்கின்றார். அதுபோல, குணங்களின் செயல்களைப் பற்றிய இந்த விஞ்ஞானத்தை முழுமையான கிருஷ்ண உணர்வில் இருப்பவர்களிடமிருந்து ஒருவன் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் அவனது வாழ்வு வழிதவறிவிடும். அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் அறிவுரைகளால், ஓர் உயிர்வாழி, தனது ஆன்மீக நிலை, ஜட உடல், புலன்கள், தான் சிறைப்பட்டிருப்பது எவ்வாறு, ஜட இயற்கையின் குணங்களினால் தான் மயங்கியிருப்பது எவ்வாறு போன்றவற்றை அறிந்துகொள்ள முடியும். இந்த குணங்களின் பிடியிலிருக்கும் அவன் உதவியற்றவனாக உள்ளான். ஆனால் அவன் தனது உண்மை நிலையை காண இயலும்போது, ஆன்மீக வாழ்விற்கான நம்பிக்கையைப் பெறுவதால், திவ்யமான தளத்தை அடைய முடியும். உண்மையில் பல்வேறு செயல்களின் கர்த்தா உயிர்வாழி அல்ல. ஜட இயற்கையின் சில குறிப்பிட்ட குணத்தினால் நடத்தப்படும் ஒரு குறிப்பிட்ட உடலில் அவன் இருப்பதால், அதற்குத் தகுந்தபடி செயல்படுமாறு அவன் வலியுறுத்தப்படுகின்றான். ஆன்மீக அதிகாரியின் உதவி இல்லாத வரை, உண்மையில் தான் இருக்கும் நிலை என்ன என்பதை ஒருவனால் புரிந்து கொள்ள முடியாது. அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவின் சங்கத்தினால், அவன் தனது உண்மை நிலையைக் காண முடியும், அதனைப் புரிந்து கொண்டு அவன் முழுமையான கிருஷ்ண உணர்வில் நிலைபெற முடியும். கிருஷ்ண உணர்வில் இருப்பவன் ஜட இயற்கை குணங்களின் மயக்கத்திற்கு கட்டுப்படுவதில்லை. கிருஷ்ணரிடம் சரணடைந்தவன் ஜட இயற்கையின் செயல்களிலிருந்து விடுபட்டவன் என்று ஏற்கனவே ஏழாம் அத்தியாயத்தில் கூறப்பட்டது. விஷயங்களை உள்ளது உள்ளபடி காணும் திறன் படைத்தவனுக்கு, ஜட இயற்கையின் ஆதிக்கம் படிப்படியாக முடிவிற்கு வந்துவிடுகிறது.
( ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் / அத்தியாயம் பதினான்கு / பதம் 19)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment