12 மஹாஜனங்கள்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
1
பிரம்மதேவர்
வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இந்த பிரபஞ்ச படைப்பிற்கு சற்று பின்னர் படைக்கப்பட்ட முதல் உயிர் வாழியே பிரம்மதேவர். அவர் பகவான் விஷ்ணுவின் நாபித் தாமரையில் இருந்து பிறந்தவராவார். பௌதிக உலகப் படைப்பின் ஆரம்பத்தில் பிரம்மதேவரின் இதயத்தில் வேத அறிவை பகவான் புகட்டினார். வேதங்களை அவர் மூன்று முறை மிகுந்த சிரத்தையோடு படித்து வேதங்களின் நோக்கத்தை அறிவதில் கவனம் செலுத்தி அனைத்தையும் கவனமாக ஆராய்ந்த பின்னர் அனைத்து மத கொள்கைகளின் மிக உயர்ந்த பக்குவம் முழுமுதற்கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தூய்மையான அன்போடு இடையறாது பக்தித் தொண்டு செய்வதே என்பதை உறுதிப்படுத்தினார்.
ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ
யதோ பக்திர் அதோக்ஷஜே
அஹை துகி அப்ரதிஹதா
யயாத்மா ஸுப்ரஸீததி
( எதனால் மனிதன் பரம புருஷரின் உன்னதமான பக்தித் தொண்டை பெற முடியுமோ அதுவே மனித வர்க்கம் முழுமைக்கும் தர்மமாகும். ஆத்மாவை பூரண திருப்தி படுத்துவதற்கு இத்தகைய பக்தித் தொண்டு உள்நோக்கம் இல்லாததாகவும் இடையறாத ஆகவும் இருக்க வேண்டும் ) ( ஸ்ரீமத் பாகவதம் 1.2.6 )
முழுமுதற்கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிரம்ம தேவரை தவம் மேற் கொள்ளுமாறு பணித்தார்.
அந்த நேரத்தில் படைப்பில் வேறு எவரும் இல்லாததால் பிரம்மதேவரே முதல் உயிர்வாழியாக இருந்தார். பிரபஞ்சங்களை படைத்தல் முதலான பகவத் தொண்டிற்கு பிரம்மதேவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர் பல தரப்பட்ட படைப்புகளை இந்த பிரபஞ்சத்தில் படைத்தார். எண்ணற்ற கிரகங்களையும் ஒவ்வொரு கிரகங்களிலும் எண்ணிலடங்காத வகையில் உயிர்களையும் படைத்தார். அவர் தனது தீர்மானங்களை நிறைவேற்றுவதில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். ஆயிரம் தேவ ஆண்டுகள் அவர் தவத்தில் ஆழ்ந்தார். இதன் மூலம் அவர் தனது புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்தினார். அவரது தவங்கள் மற்ற உயிர்வாழிகளுக்கு சிறந்த பாடமாக அமைந்தது. இதனால் அவர் துறவிகளில் எல்லாம் மிகச் சிறந்தவராக அறியப்பட்டார். பகவானே ஆன்மீக குருவாக இருந்து நல்கிய வழி முறைகளை பிரம்மதேவர் எவ்வாறு நிறைவேற்றினாரோ அதைப்போல் அங்கீகரிக்கப்பட்ட நம்முடைய ஆன்மீக குரு நமக்கு இட்ட ஆணைகளை நிறைவேற்றுவதில் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிரம்மதேவரிடம் நிறையவே அன்பு கொண்டிருந்தார். இதனால் அவர் தமது பல லீலைகளில் அவரை பங்கேற்க வைத்தார். பிரம்ம தேவரிடம் இருந்து வேதங்களைத் திருடிய அசுரனுடன் பகவான் ஶ்ரீமன் நாராயணன் ,ஹயக்ரீவராக அவதாரமெடுத்து சண்டையிட்டார். மேலும் பரம புருஷ பகவான் வராக மூர்த்தியாக அவதாரம் எடுத்த போது பிரம்மதேவரின் மூக்கிலிருந்து வெளியே வந்தார். பிரம்மதேவர் தனது பல சந்தர்ப்பங்களிலும் மற்றும் அவரது பல சாதனைகளின் போதும் தேவர்களுக்கு தலைமை வகித்து பரமபுருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை போற்றிப் புகழ்ந்தார். பல்வேறு தவங்களையும் யாகங்களையும். மேற்கொள்பவர்களை ஆசீர்வதிக்கும் பொருட்டு பகவான் விஷ்ணு பிரம்ம தேவரை நியமித்திருந்தார். எப்போதெல்லாம் இப்பிரபஞ்சத்தில் இடையூறுகள் ஏற்படுகின்றதோ அதை அது அதற்கென்று நியமிக்கப்பட்ட தேவர்களால் தீர்வு காண முடியவில்லை என்றால் அவர்கள் பிரம்ம தேவரை நாடுவர். அவராலும் பிரச்சினைக்கு தீர்வு காண இயலாவிடில் பிறகு பிரம்மதேவர் பகவான் விஷ்ணுவை போற்றித் துதித்து அவருடன் கலந்து ஆலோசித்து பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பார். பிரம்மதேவர் "பிதாமகர்" அதாவது தாத்தா என்று அறியப்படுகிறார். பகவானோ "பரம பிதா மகர்" அல்லது தாத்தாவின் தந்தை கொள்ளுத்தாத்தா என்று அறியப்படுகிறார்.
பிரம்மதேவர் தனது 'பிரஹ்ம சம்ஹிதையில்' பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றிய நிறைய விஷயங்களை அதிக அளவில் விளக்கியுள்ளார்.
இந்த பிரபஞ்சத்தின் மிக உயர்ந்த கிரகமான பிரம்மலோகத்தில் பிரம்மதேவர் வசிக்கின்றார. சத்ய யுகம், திரேதாயுகம், துவாபரயுகம்,, கலியுகம் என்ற இந்த நான்கு யுகங்களும் சேர்ந்து ஒரு சதுர்யுகம் என்று அறியப்படுகிறது. இவ்வாறு ஆயிரம் சதுர் யுகங்கள் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு பகல். அதைப்போல் ஆயிரம் சதுர் யுகங்கள் அவரின் ஒரு இரவு. இவ்வாறு 2000 சதுர யுகங்கள் சேர்ந்தது பிரம்மதேவரின் ஒரு நாள். இவ்வாறு அவர் நூறு ஆண்டுகள் உயிர் வாழ்கின்றார். பூமி கணக்கீட்டின்படி 311 மில்லியன் மற்றும் 40 பில்லியன் ஆண்டுகள். இதுவே பிரம்மதேவரின் ஆயுட்காலம்.
இவ்வளவு உன்னதமான குணங்களை பிரம்மதேவர் கொண்டிருந்தும் பூமியில் அவருக்கென்று சில கோவில்களே உள்ளன. குறிப்பிடும்படியாக ராஜஸ்தானில் உள்ள புஷ்கரத்தில் "ஜகத் பிதா" கோவில் அமைந்துள்ள. தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள "உத்தமர் கோவில்". ஆனால் வருடந்தோறும் அனைத்து கோவில்களிலும் நடைபெறும் பிரம்மோற்சவ உற்சவத்தின் போது அவர் தனது அன்பு கலந்த பக்தியை தொடர்ந்து பகவானிடம் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment