சாதாரண உயிர்வாழிகள், தேவர்கள் ஆகிய இருவருமே பரமனின் விருப்பத்தைச் சார்ந்தவர்களே, சுதந்திரமானவர்கள் அல்ல.
சாதாரண உயிர்வாழிகள், தேவர்கள் ஆகிய இருவருமே பரமனின் விருப்பத்தைச் சார்ந்தவர்களே, சுதந்திரமானவர்கள் அல்ல.









யோ யோ யாம் யாம் தனும் பக்த:
ஷ்ரத்தயார்சிதும் இச்சதி
தஸ்ய தஸ்யாசலாம் ஷ்ரத்தாம்
தாம் ஏவ விததாம்-யஹம்









யோ யோ யாம் யாம் தனும் பக்த:
ஷ்ரத்தயார்சிதும் இச்சதி
தஸ்ய தஸ்யாசலாம் ஷ்ரத்தாம்
தாம் ஏவ விததாம்-யஹம்
மொழிபெயர்ப்பு
எல்லோரது இதயத்திலும் நான் பரமாத்மாவாக இருக்கிறேன். தேவர்களை வழிபட வேண்டுமென ஒருவன் விரும்பும்போது, அந்த குறிப்பிட்ட தேவனிடம் பக்தி செய்வதற்கான அவனது நம்பிக்கையை நானே பலப்படுத்துகிறேன்.
பொருளுரை
கடவுள் அனைவருக்கும் சுதந்திரம் கொடுத்துள்ளார்; எனவே, தேவர்களிடமிருந்து ஜட இன்பத்திற்கான வசதிகளைப் பெற்று அவற்றை அனுபவிக்க விரும்பினால், எல்லாருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக வீற்றுள்ள பகவான் அதனை உணர்ந்து, அத்தகையவனுக்கு வசதிகளைச் செய்து கொடுக்கிறார். எல்லா உயிர்வாழிகளின் உன்னத தந்தையான பகவான், அவர்களது சுதந்திரத்தில் தலையிடுவதில்லை, ஆனால் அவர்களது லௌகீக விருப்பங்கள் பூர்த்தியாகும் வகையில் எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார். சர்வ வல்லமையுடைய கடவுள், ஜடவுலகை அனுபவிப்பதற்கான வசதிகளைக் கொடுத்து, அதன் விளைவாக மாயையின் வலையில் உயிர்வாழிகளை விழச் செய்வது ஏன் என்று சிலர் கேட்கலாம். பதில் என்னவெனில், பரம புருஷர் (பரமாத்மா) இத்தகு வசதிகளை கொடுக்காவிடில், சுதந்திரம் என்பதற்கு அர்த்தமில்லை. எனவே, ஒவ்வொருவருக்கும், அவரவரின் விருப்பப்படி, பூரண சுதந்திரத்தைக் கொடுக்கிறார்—ஆனால், அவரது இறுதி அறிவுரையை நாம் பகவத் கீதையில் காண்கிறோம்: ஒருவன் எல்லாவற்றையும் துறந்த முழுமையாக அவரிடம் சரணடைய வேண்டும். இதுவே மனிதனை மகிழ்விக்கும்.
சாதாரண உயிர்வாழிகள், தேவர்கள் இருவருமே பரம புருஷ பகவானின் விருப்பத்திற்குக் கீழ்ப்பட்டவர்கள்; எனவே, உயிர்வாழி தனது விருப்பத்தின் மூலம் மட்டும் தேவர்களை வழிபட முடியாது, தேவர்களாலும் பரமனின் விருப்பமின்றி எந்த வரத்தையும் அளிக்க முடியாது, முழுமுதற் கடவுளின் விருப்பமின்றி புல்லும் அசையாது என்று கூறுவர். பொதுவாக, ஜடவுலகில் துயரப்பட்டவர்கள், வேத இலக்கியங்களின் வழிகாட்டலின்படி, தேவர்களிடம் செல்கின்றனர். ஒரு குறிப்பிட்ட பொருளை விரும்புபவர் அதற்குரிய தேவரை வழிபடுவர். உதாரணமாக, நோயுற்றவன் சூரியதேவனை வழிபாடுமாறு பரிந்துரைக்கப்படுகிறான்; கல்வியை விரும்புபவன் கல்வியின் தேவதையான சரஸ்வதியை வழிபடலாம்; அழகான மனைவியை நாடுபவன் சிவபெருமானின் நாயகியான உமாவை வழிபடலாம். இவ்விதமாக, வேத சாஸ்திரங்களின் பல்வேறு தேவர்களை வழிபடுவதற்கான பல்வேறு முறைகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. ஓர் உயிர்வாழி ஒரு குறிப்பிட்ட வசதியை அனுபவிக்க விரும்புவதால், அதற்கான குறிப்பிட்ட தேவரிடமிருந்து அந்த வரத்தினைப் பெறுவதற்கான பலமான ஆசையை பகவான் தூண்டுகிறார், அதன் மூலம் அவன் அவ்வரத்தினை வெற்றிகரமாக அடைகிறான். ஒரு குறிப்பிட்ட தேவரை நோக்கி ஓர் உயிர்வாழிக்கு இருக்கும் பக்தி மனப்பான்மையும் பரம புருஷரால் ஏற்படுத்தப்படுவதேயாகும். கிருஷ்ணரே பரம புருஷர், அவரே எல்லா உயிர்வாழிகளின் இதயத்திலும் வாழும் பரமாத்மா என்பதால், குறிப்பிட்ட தேவர்களை வழிபடுவதற்கான ஆர்வத்தை அவரே மனிதர்களுக்கு அளிக்கிறார், தேவர்களால் அத்தகு ஆர்வத்தினை ஏற்படுத்த முடியாது. பரம புருஷருடைய விஸ்வரூபத்தின் பல்வேறு அங்கங்களே தேவர்கள், எனவே அவர்களுக்கு சுதந்திரமில்லை. வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது, “பரம புருஷ பகவான், பரமாத்மாவின் உருவில் தேவர்களது இதயத்திலும் அமர்ந்துள்ளார்; எனவே, ஜீவாத்மாவின் ஆசைகளை பூர்த்தி செய்ய தேவர்கள் மூலமாக அவர் ஏற்பாடு செய்கின்றார். ஆனால் ஜீவாத்மா, தேவர்கள் ஆகிய இருவருமே பரமனின் விருப்பத்தைச் சார்ந்தவர்களே, சுதந்திரமானவர்கள் அல்ல.”
( ஶ்ரீமத் பகவத்கீதை 7.21 )
Comments
Post a Comment