ஜனக மகாராஜா


 ஜனக மகாராஜா 


வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁



இவர் சீதாதேவியின் தந்தையும் பகவான் ராமரின் மாமனாருமாவார். விதேக அல்லது மிதிலா வின் (இன்றைய பீஹார்) அரசரான இவர் ஹிராஷ்வரோமாவின் முதல் புதல்வர் ஆவார்.  அவர் ஒரு யாகத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிலத்தில் ஒரு பகுதியை உழும்போது அந் நிலத்தில் இருந்து சுயமாகத் தோன்றிய ஒரு அழகிய பெண் குழந்தையை கண்டெடுத்தார். எனவே அவர் க்ஷீரத்வஜா என்று அழைக்கப்பட்டார். அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தையே சீதா தேவி ஆவார்.  ராஜரிஷி ஜனக மகாராஜாவின் மகளான சீதாதேவி, சிலசமயங்களில் ஜானகி என்றும் அழைக்கப்பட்டார். வசிஷ்ட மகரிஷியின் பேரனும் வியாச தேவரின் தந்தையுமான பராசர முனிவரே ஜனக மகாராஜாவின் ஆன்மிக குரு ஆவார்.  சர்வ வல்லமை பொருந்திய பகவான் பலராமர் மிதிலாவில் பல ஆண்டுகள் தங்கி அவருக்கு மிகவும் பிரியமான பக்தர் ஜனக மகாராஜாவால் கௌரவிக்கப்பட்டார்.


மிகச்சிறந்த கற்றறிந்த பண்டிதரான ஜனக மகாராஜா,  நிமி சக்ரவர்த்தி வம்சத்தில் பிறந்தவர் ஆவார். மஹாராஜா நிமி மிகப்பெரிய யாகம் ஒன்று  செய்யும்  பொருட்டு வசிஷ்ட மகரிஷியைத் தலைமை குருவாக நியமனம் செய்திருந்தார். ஆனால் வசிஷ்டர் ஏற்கனவே தேவலோக அதிபதியான இந்திரனுக்கு ஒரு யாகம் செய்வதற்காக தலைமை குரு பொருப்பை ஏற்க ஒப்புதல் கொடுத்து இருந்தார். இதனால் அவர் மஹாராஜா நிமியின் வேண்டுகோளை மறுத்தார். இருப்பினும் வசிஷ்ட மகரிஷி இந்திரனின் யாகம் முடியும் வரை காத்திருக்கும்படி  இருக்கும்படி மகாராஜா நிமியிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் மகாராஜா நிமியோ வசிஷ்டருக்காக  காத்திருக்காமல் வேறொரு பிராமணரை தலைமை குருவாக நியமித்து யாகத்தை  நிறைவு செய்தார். திரும்பி வந்த வசிஷ்ட மகரிஷி, மகாராஜா நிமியிடம் கோபம் கொண்டு அவரை சபித்தார். நிமி மகாராஜாவும் வசிஷ்ட மகரிஷியை சபித்தார். ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி சபித்ததில் இருவரும் இறந்தனர். நிமி மகாராஜாவின் உடலை அவரது  யாகத்தில் ஈடுபட்டிருந்த பிராமணர்கள் நறுமணம் நிறைந்த ரசாயனங்களில் பாதுகாத்து வைத்தனர். யாகம் நிறைவு பெற்றதும் அனைத்து பிராமணர்களும் மகாராஜா நிமி மீண்டும் உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக யக்ஞ குண்டத்தில் தோன்றியிருந்த அனைத்து தேவர்களிடமும் பிரார்த்தனை செய்தனர்.


ஆனால் மஹராஜன் நிமி மீண்டும் இந்த பௌதிக உலகில் பிறப்பு எடுக்க மறுத்தார்.  ஏனென்றால் இந்த பௌதீக உடலை கீழானதாக அவர் கருதினார். இதனால் பிராமணர்கள் நிமி மகாராஜனின் உடலைக் கடைந்தனர்.  கடைந்ததன் பலனாக ஜனக மகாராஜா அதிலிருந்து பிறந்தார். இவர் ஒரு அசாதாரணமான முறையில் பிறந்ததால் இந்த மகன் "ஜனக" என்று அழைக்கப்பட்டார்.  தனது தந்தையின் இறந்த உடலில் இருந்து பிறந்ததால் இவர் "வைதேகி" என்றும் அழைக்கப்பட்டார். தனது தந்தையின்  பௌதிக உடலில் இருந்து கடைந்து எடுக்கப்பட்டதால் இவர் "மிதிலா" என்றும் அழைக்கப்பட்டார். அவரால் கட்டப்பட்ட  அந்த நகமும்  மிதிலா என்று அழைக்கப்பட்டது.


ஜனக மகாராஜா சிவபெருமானிடமிருந்து வல்லமைமிக்க ஒரு வில்லை பரிசாக கிடைக்கப் பெற்றிருந்தார்.  புனிதமான இந்த வில்லை நாண் ஏற்றக் கூடியவன் மிகவும் அசாதாரணமான சக்திசாலியாக இருக்க வேண்டும்.  அப்படிப்பட்ட ஒருவனுக்கே தனது மகளான சீதாதேவியை மணமுடித்துக் கொடுக்க ஜனக மகாராஜா நினைத்திருந்தார்.  பல்வேறு  இராஜ்ஜியங்களில் இருந்து வந்திருந்த பல ராஜகுமாரர்களும் சீதாதேவியின் கரம் பிடிக்க ஆசை கொண்டனர். ஆனால் அவர்களால் அந்த புனிதமான வில்லை சிறிது கூட தூக்க முடியவில்லை.  ஒருநாள் விசுவாமித்திர மகரிஷி இந்த புனிதமான அரங்கத்திற்கு  அயோத்தியின்  அரசன் தசரதரின் இரண்டு புதல்வர்களான பகவான் ராமர் மற்றும் இலட்சுமணரோடு வருகை புரிந்தார்.  மகரிஷி விஸ்வாமித்திரர் மற்றும் ஜனக மகாராஜனின் ஆசீர்வாதத்தோடு பகவான் ராமச்சந்திரர் சிவபெருமானின் மகத்தான அந்த வில்லை மிக எளிதாக எடுத்து நாணேற்றினார்.  அனைத்து பார்வையாளர்களின் முன்பும் பகவான் ராமச்சந்திரர் அந்த வில்லை எடுத்து நாண் ஏற்றிய போது அந்த வில் இரண்டு துண்டுகளாக உடைந்து மிகப்பெரிய சப்தத்தை எழுப்பியது. அதன்பின் சீதாதேவியை அவர் முறையாக திருமணம் செய்து கொண்டார். .. மகாராஜா ஜனகர் பகவான் ராமச்சந்திரன் மேல் எல்லையற்ற பாசம் கொண்டிருந்தார்.


ஜனக மகாராஜா ஒரு தன்னுணர்வு பெற்ற ஒரு ஆத்மா ஆவார். அவர் பகவானின் மிகச்சிறந்த  பக்தராகி திவ்யமான தளத்தில் நிலை பெற்றிருந்தார்.  இதனால் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லாமல் இருந்தது. இருப்பினும் பொதுமக்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகளை செவ்வனே அவர் செய்தார்.  ஜனக மகாராஜா ஒரு மன்னராக தனது க்ஷத்ரிய தொழில் கடமைகளைச் செய்ததன் மூலம் முழுமை அதாவது பக்குவம் அடைந்ததாக பகவத்கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளார். 


ஜனக மகாராஜா ஒரு ராஜ ரிஷி ஆவார். ஏனென்றால் அவர் பகவானின் மிகச்சிறந்த பக்தராக இருந்தது மட்டுமன்றி மிதிலையின் மிகச் சிறந்த அரசராகவும் இருந்தார்.  இந்த உடலை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், மற்றும்  பிற காரணங்களுக்காகவும், இந்த பௌதிக விஷயங்களோடு தொடர்பு வைத்துக்கொள்வது, என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். ஆனால் இதனை பகவானுக்கு செய்யும் ஒரு சேவையாக நாம் மாற்றினால் அது ஆன்மீக மயமாகி விடுகிறது. இந்த செயல்பாடுகளே யாகமாக மாறுகின்றது.  நேபாளத்தில் உள்ள ஜானக்பூரில் மகாராஜா ஜனகரின் அரண்மனையை இன்றும் நாம் காணலாம்.  மேலும் சீதாதேவி பிறந்து வளர்ந்த இடம்  மற்று அதன் தலைநகரம் போன்ற இடங்களையும் நாம் காணலாம்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/joinchat/HIm4JGufgEgG7jwI

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more