இராமானுஜரின் வாழ்க்கை -முக்கிய நிகழ்வுகள்


 

இராமானுஜரின் வாழ்க்கை -முக்கிய நிகழ்வுகள்

  • பிறப்பு, பிங்கல வருடம், சித்திரை  —————————————  1017, திருவாதிரை நட்சத்திரம், தசமி திதி, வியாழக்கிழமை,
  • காது குத்துதல் —————————————————————–1022
  • உபநயனம் ——————————————————————— 1025
  • திருமணம் ———————————————————————- 1033
  • காஞ்சிபுரத்தில் இல்லறத்தவராக ————————————— 1034
  • காசி யாத்திரை ————————————————————— 1035
  • ஆளவந்தாரைச் சந்தித்தல் ————————————————-1041
  • சந்நியாசம் ஏற்றல் ————————————————————1047
  • கோஷ்டியூர் நம்பிகளைச் சந்தித்தல் ————————————1049
  • திருப்பதி, திருமலையில் வசித்தல் ————————————— 1051
  • ஸ்ரீபாஷ்யம் எழுதிய காலம் ————————————————–1051-1055
  • திருப்பதி, திருமலையில் சேவை ——————————————-1057
  • ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் ————————————————1058-1089
  • திக்விஜய யாத்திரை ———————————————————– 1089-1095
  • கூர்மக்ஷேத்திர சேவை ———————————————————1094-1095
  • மைசூர் விஜயம்   —————————————————————– 1097-1098
  • செல்லப்பிள்ளைக்காக தில்லி   ———————————————  1101-1104
  • தொண்டனூர் ராஜ குரு ——————————————————— 1110
  • ஸ்ரீரங்கம் திரும்புதல் ————————————————————  1111-1112
  • வைகுண்டம் திரும்புதல்——————————————————-   22.01.1138

 

இராமானுஜரின் நூல்கள்


ஸ்ரீபாஷ்யம்: வேத வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கான விளக்கவுரை. போதாயனர், திரவிடர், குஹதேவர், தங்கர், பருச்சி முதலியோரின் உரைகளைத் தழுவி எழுதப்பட்டது.

வேதார்த்த சங்க்ரஹம்: ஸ்ரீ இராமானுஜரின் முதல் எழுத்துப் பணி. திருமலை வேங்கடேஷ்வர பெருமாளின் முன்பாக அர்ப்பணிக்கப்பட்டது. உபநிஷதங்களிலுள்ள சிக்கலான விஷயங்களுக்கு விளக்கமளிக்கும் நூல்.

வேதாந்த தீபம்: ஸ்ரீபாஷ்யம் போன்ற மற்றொரு விளக்கவுரை. பிரம்ம சூத்திரத்தைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான சில முக்கிய கோட்பாடுகளை இந்நூல் விளக்குகிறது.

வேதாந்த சாரம்: ஸ்ரீபாஷ்யத்தின் சுருக்கவுரை, பிரம்ம சூத்திரத்தைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான சில இரகசிய அர்த்தங்களையும் விளக்குகிறது.

கீதா பாஷ்யம்: பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அருளிய பகவத் கீதைக்கான விளக்கவுரை.

கத்ய-த்ரயம்: சரணாகதி தத்துவத்தை விளக்கும் சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க க்ஷேத்திரத்தை விளக்கும் ஸ்ரீரங்க கத்யம், பகவானின் தெய்வீக உலகமான வைகுண்டத்தை விளக்கும் ஸ்ரீ வைகுண்ட கத்யம் ஆகிய மூன்று நூல்களின் தொகுப்பு.

நித்ய-க்ரந்தம்: ஒவ்வொரு பக்தரும் தமது இல்லத்தில் அனுதினம் ஆற்ற வேண்டிய விக்ரஹ வழிபாட்டினை விளக்கும் சிறிய நூல்.

 

ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கைசில தகவல்கள்


அவதாரத் திருத்தலம்: ஸ்ரீபெரும்புதூர். காஞ்சீபுரத்தில் வீடு கட்டிக் கொண்டு தங்கி இருந்தார்.

பெற்றோர்: கேசவ சோமயாஜி, காந்திமதி அம்மையார்

துணைவியார்: தஞ்சமாம்பாள்

வம்சம்: ஆசூரி

ஆச்சாரியர்கள்: (1) தந்தையார் கேசவ சோமயாஜி, (2) பெரிய நம்பிகள், (3) திருக்கோஷ்டியூர் நம்பிகள்,

(4) திருவரங்கப் பெருமாளரையர், (5) திருமலையாண்டான், (6) திருமலைநம்பிகள், (7) யாதவப் பிரகாசர்,

(8) யாமுனாச்சாரியார் (ஆளவந்தார்), (9) திருக்கச்சி நம்பிகள்,

சிறப்புத் திருநாமங்கள்: (1) எம்பெருமானார், (2) யதிராஜர் (துறவிகள் வேந்தர்), (3) உடையவர், (4) திருத்திப் பணிகொண்டான், (5) திருப்பாவை ஜீயர், (6) காரேய் கருணை இராமானுஜர்

முக்கிய சீடர்கள்: (1) எம்பார், (2) முதலியாண்டார், (3) கூரத்தாழ்வார், (4) உறங்கா வில்லியும் பொன்னாச்சியும், (5) அனந்தாழ்வார், (6) கிடாம்பி ஆச்சான், (7) வடுக நம்பி, (8) கொங்குப் பிராட்டி, (9) நல்லான் சக்கரவர்த்தி, (10) திருக்குறுங்குடி நம்பி, (11) கோவிந்த ஜீயர் (யாதவப் பிரகாசர்), (12) யக்ஞமூர்த்தி


திருக்கச்சிநம்பிகளின் வாயிலாக வரதராஜ பெருமாள் ஸ்ரீ இராமானுஜருக்கு அருளிய ஆறு மொழிகள்:


  1. ஸ்ரீமந் நாராயணனே முழுமுதற் கடவுள்.
  2. ஜீவாத்மாக்களிலிருந்து பரமாத்மா வேறுபட்டவன்.
  3. திருமாலைப் பெறுவதற்கு அவரைச் சரணடைவதே சிறந்த வழி.
  4. திருமால் திருவடியை அடைந்தவர்களுக்கு உயிர் பிரியும் நேரத்தில் திருமாலின் நினைவு தேவையில்லை.
  5. திருமாலைச் சரணடைந்தவர்களுக்கு இப்பிறப்பின் முடிவில் பரமபதம்கிடைப்பது உறுதி.
  6. இராமானுஜர் பெரிய நம்பிகளையே குருவாகக் கொண்டிருத்தல் வேண்டும்.


"இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com" 


 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க


ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more