மேற்கத்திய நாட்டினரையும் அந்நிய நாட்டினரையும் பின்பற்றுவதால் நாம் நமது சொந்த பண்பாட்டைக் கைவிட்டு விட்டோம். இந்தியர்களின் சுபாவம் மேற்கத்திய நாட்டினரிடமிருந்து வேறுபட்டிருப்பதால், மேற்கத்திய பண்பாட்டையும் இந்தியர்களால் சரியாக பின்பற்ற முடிவதில்லை. முந்தைய பிறவிகளில் ஆன்மீகப் பண்பாட்டை விருத்தி செய்ய விரும்பியவர்களே இந்தியாவில் பிறக்கின்றனர் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இந்தியாவில் பிறப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஆனால், ஒருவன் பிறந்ததும், இந்நாட்டின் முட்டாள் தலைவர்களும், முட்டாள் தந்தையும், முட்டாள் ஆசிரியர்களும், “ஆன்மீகப் பண்பாடு பயனற்றது, ஆன்மீகத்தில் ஆர்வம் இருந்ததால்தான் நம்மை ஆங்கிலேயர்கள் அடிமைகளாக்கினர். எனவே, அவற்றையெல்லாம் துறந்துவிட்டு தொழிற்கல்வியில் முன்னேறுங்கள்,” என்று கூறி அவனைக் கெடுத்து விடுகின்றனர். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. பாவப்பட்ட இளைய தலைமுறையினர் என்ன செய்ய முடியும்?
—தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர், ஏப்ரல் 15, 1976ல் மும்பையில் அருளிய ஸ்ரீமத் பாகவத (7.12.4) உபன்யாஸத்தின் ஒரு பகுதி.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment