அபிஸந்தாய யோ ஹிம்ஸாம் தம்பம் மாத்ஸர்யமேவ வா
மொழிபெயர்ப்பு
பொறாமை, தற்பெருமை, வன்முறை
மற்றும் கோபம்
இவை உள்ள
ஒருவரால் நிறைவேற்றப்படும் பக்தித்
தொண்டு இருட்டாகிய (தமோ)
குணத்தில் உள்ளதாகக் கருதப்படுகிறது.
பொருளுரை
மிகவுயர்ந்த, மிகவும் புகழ்வாய்ந்த மதம் என்பது
காரணம் அற்ற,
செயல் நோக்கமற்ற பக்தித் தொண்டைச் செய்தலாகும் என்று
ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் காண்டம்
இரண்டாம் அத்தியாயத்தில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது. தூய பக்தித் தொண்டில், பரம புருஷ
பகவானை மகிழ்விப்பது ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். அது உண்மையில் நோக்கமல்ல; அது உயிரினத்தின் தூய நிலையாகும். கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஒருவர் பக்தித்
தொண்டில் ஈடுபடும் பொழுது, முழுச் சரணாகதியில் உண்மை ஆன்மீக
குருவின் உபதேசத்தைப் பின்பற்ற வேண்டும். ஆன்மீக குருவானவர் பகவானின் பிரத்யட்ச பிரதிநிதி ஆவார். ஏனெனில், அவர் சீட மரபால், பகவானின் உபதேசங்களை உள்ளவாறே தாம்
பெறுவார்; பிறருக்கும் கொடுப்பார். உபேதசங்கள் சீட மரபில்
பெறப்பட வேண்டும், இல்லாவிடில் உபதேசத்தில் தூய்மையிராது என்று
பகவத் கீதையில் வர்ணிக்கப்பட்டுள்ளது. பரம புருஷ பகவானைத் திருப்தி செய்யும் நோக்கத்துடன் உண்மையான ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் கீழ்
செயல்படுவது தூய பக்தித் தொண்டாகும். ஆனால்
ஒருவர் தனிப்பட்ட புலன் நுகர்ச்சியை நோக்கமாகக் கொண்டால், அவரது பக்தித்
தொண்டு வேறுவிதமாக வெளிப்படும். அம்மாதிரி மனிதர்
வன்முறை, பெருமை, பொறாமை, கோபம் கொண்டவராக இருக்கலாம். அவரது பணிகள் அனைத்தும் பகவானிடமிருந்து பிரிந்திருப்பவையாகும்.
பக்தித் தொண்டைப் புரிவதற்குப் பகவானை
அணுகும் ஒருவர், தன் தனித்தன்மை குறித்துப் பெருமைப்பட்டாலோ, மற்றவர்களிடம் பொறாமைப்பட்டாலோ அல்லது
பழிவாங்கும் நோக்கமிருந்தாலோ அவர்
கோப குணம்
உடையவர் ஆகிறார். அவர் தானே
மிகச்சிறந்த பக்தர்
என்றும் நினைக்கிறார். இந்த
வழியில் நிறைவேற்றப்படும் பக்தித்
தொண்டு தூய்மையானதல்ல; கலப்படமானது மிகவும் தாழ்ந்த
நிலையானது ஆகும். நல்ல நடத்தை
இல்லாத ஒரு வைஷ்ணவர் தவிர்க்கப்பட வேண்டும் என்று
ஸ்ரீல விஸ்வநாத சக்கரவர்த்தி தாகூர்
அறிவுறுத்துகிறார். வைஷ்ணவர் என்பவர்
பரம புருஷ
பகவானை வாழ்வின் இறுதிக் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டவர், ஆனால் ஒருவர் தூய்மையின்றி, இன்னும்
ஆசை நோக்கங்கள் கொண்டு இருந்தால், அவர் நல்ல
நடத்தையில் முதல்
தரமான வைஷ்ணவர் அல்லர். அவர் பகவானை வாழ்வின் இறுதியான குறிக்கோளாகக் கொண்டிருப்பதால், ஒருவர்
தன் வணக்கங்களை அந்த வைஷ்ணவருக்கு அளிக்கலாம் அவ்வளவே. ஆனால் அறியாமை
பீடித்துள்ள வைஷ்ணவருடன் ஒருவர் தொடர்பு
வைத்துக் கொள்ளக்
கூடாது.
ஶ்ரீமத் பாகவதம் 3.29.8
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment