ஶ்ரீ கிருஷ்ண சைதன்யரின் லீலைகள்
வழங்கியவர் :- பக்தி விகாஸ ஸ்வாமி
இராமானந்தரைச் சந்தித்தல்
கோதாவரி நதிக்கரையில் இராமானந்த ராயரை சந்தித்த பகவான் ஆன்மீகத்தின் ஆழ்ந்த விவாதங்களில் விரைவில் நுழைந்தார். அனைத்தையும் அறிந்த, எவரையும் சார்ந்திருக்காத மஹாபிரபு, இராமானந்த ராயரை உள்நோக்கி ஊக்குவித்து பக்குவமான பதில்களை அளிக்கச்செய்யும் வகையில் கேள்விகளைக் கேட்கத் தீர்மானித்தார். வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? அதை அடைவதற்கான வழி என்ன?” என்னும் முதல் கேள்விக்கு, வர்ணாஸ்ரம முறைப்படி கடமை களைச் செய்வதால் ஒவ்வொரு மனிதனும் வெற்றியடைய முடியும்,” என்று இராமானந்த ராயர் பதிலளித்தார். இது மேலோட்டமானது. தயவுசெய்து இதைவிட ஆழமாகக் கூறும்,” என்று கூறி மஹாபிரபு அதனை நிராகரித்தார்.
படிப்படியாக உயர்ந்த வழிமுறைகளை விளக்கிய இராமானந்த ராயர், பலனில் பற்று கொள்ளாமல் கடமைகளை செய்வதை அறிவுறுத்தினார். ஆனால் கௌராங்கர் அதை நிராகரித்தார். அடுத்ததாக வர்ணாஸ்ரமத்தின் கடமைகளைத் துறப்பதை ஆதரித்துப் பேசினார். பகவான் சைதன்யர் அதையும் நிராகரித்தார். அதன் பின்னர் இராமானந்தர் ஞானத்தை வளர்க்கும் பாதையை முன்மொழிந்தார். ஆனால் மஹாபிரபு அதையும்கூட நிராகரித்தார். இறுதியில், புலனுகர்ச்சியை அடைவதற்காக, அல்லது ஞானம் பெறுவதற்கான முயற்சி யிலிருந்து விடுபட்டு, கிருஷ்ணருக்குத் தூய பக்தி செய்வதன் மூலம் ஒருவன் வெற்றியடைய முடியும்,” என்று இராமானந்த ராயர் கூறினார். அதனைத் தகுந்த பதிலாக ஒப்புக்கொண்டபோதிலும், தயவுசெய்து இன்னும் அதிகமாகக் கூறவும்,” என்று பகவான் சைதன்யர் வேண்டினார்.
அதனைத் தொடர்ந்து, கிருஷ்ண உணர்வின் முன்னேற்ற நிலைகளை இராமானந்த ராயர் பல்வேறு இரவுகளில் விளக்கினார்; இறுதியில், ராதா கிருஷ்ணரின் அந்தரங்க லீலைகளையும் உணர்ச்சிகளையும் எடுத்துரைத்தார். பின்னர் பகவான் சைதன்யர் தனது உண்மையான ராதா கிருஷ்ண ரூபத்தை அவருக்கு வெளிப்படுத்தினார். பகவான் சைதன்யரும் இராமானந்தரும் பரஸ்பர தொடர்பில் கிருஷ்ணரைப் பற்றி விவாதிப்பதன் ஆனந்தத்தை அனுபவித்தனர். தயவுசெய்து இங்கு நீண்டநாள்கள் தங்கவும். அதன்மூலம் நாம் நிறைய உரையாட முடியும்,” என்று இராமானந்தர் வேண்டினார். நாம் இந்த விவாத விஷயங்களை சில நாள்களுக்கு மட்டுமின்றி, மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் இணைந்து அனுபவிக்க விரும்புகிறேன். ஆனால் முதலில் எனக்கு தென்னிந்தியாவில் சில பிரச்சாரக் கடமைகள் உள்ளன. சில வருடங்கள் கழித்து நான் புரிக்குத் திரும்பிவிடுவேன். அதற்கு மத்தியில் தாங்களும் தங்களது பொறுப்புகளிலிருந்து விலகி புரிக்குச் செல்வீராக. அங்கு நாம் இணைந்து வாழலாம்,” என்று சைதன்ய மஹாபிரபு பதிலளித்தார்
நாளை . .
ஸ்ரீரங்கத்தை அடைதல்
தொடரும் . . .
( "இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com")
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment