மன ஏவ மனுஷ்யானாம்
காரணம் பந்த-மோக்ஷயோ:
பந்தாய விஷயாஸங்கோ
முக்த்யை நிர்விஷயம் மன:
"மனிதனின் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் மனமே காரணம். புலனின்பப் பொருள்களில் ஆழ்ந்துள்ள மனம் பந்தத்திற்கும், அவற்றிலிருந்து விலக்கப்பட்ட மனம் மோக்ஷத்திற்கும் காரணமாகின்றன." (அம்ருத-பிந்து உபநிஷத் 2) எனவே, கிருஷ்ண உணர்வில் எப்போதும் ஈடுபத்தப்பட்டுள்ள மனம் உன்னத மோக்ஷத்திற்குக் காரணமாகின்றது.
மனதைப் படைத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் நம் மனதை நிலைநிறுத்தினால் எப்பேர்ப்பட்ட மனநோயும் பறந்துவிடும். கிருஷ்ண பக்தர்களே சிறந்த மனநல மருத்துவர்கள். கிருஷ்ணரை நினைவுகொள்வதற்காகவே மனம் படைக்கப்பட்டுள்ளது என உணர்ந்தால், உடனடியாக மன அமைதி ஏற்படுகின்றது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மறந்து மன உலகில் வாழ்பவர்கள் மனப்போராட்டத்தையே சந்திக்கின்றனர்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மகிழ்விக்க பக்தித் தொண்டில் மனம் ஈடுபடும்போதே மனநிறைவு ஒருவருக்கு இயற்கையாக ஏற்பட்டுவிடுகிறது. முந்தைய காலத்தில் உறவுமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். தற்போதைய காலத்தில் நவீன கண்டுபிடிப்புகள்மீது மக்கள் உறவுமுறையை ஏற்படுத்திக்கொள்கின்றனர். தனது நண்பன் தொலைந்து போனால் கவலை கொள்ளாத மனம் கைபேசியை தொலைத்துவிட்டால் பதட்டமடைந்து விடுகிறது.
மனதிற்கு சிறந்த மருந்து
***********
தற்காலிகப் பொருட்கள்மீது பற்றுதல் வைத்திருக்கும் மனதை படிப்படியாக பகவான் கிருஷ்ணரின் மீது திசைதிருப்ப வேண்டும். குரங்கு ஒரு மரத்தை விட்டு மற்றொரு மரத்திற்கு அடிக்கடி தாவுவதைப் போன்று மனமானது நிலையில்லா இவ்வுலகில் அழியக்கூடிய பொருட்கள் மீதும், உடல் மீதும் தாவிக் கொண்டே இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், மனம் கிருஷ்ணர்மீது தியானிப்பதை விட கிருஷ்ணரால் படைக்கப்பட்ட பொருட்களின் மீது தியானிக்கிறது. கலி யுகத்தில் மனதை அடக்குவதற்கு சிறந்த வழி தினந்தோறும் துளசிதேவியின் முன் அமர்ந்து, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே” என்னும் மஹா மந்திரத்தை உச்சரிப்பதேயாகும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment