அணைவரையும் பாதுகாக்கும் பரம புருஷரான பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்











ஜீவன்கள் எண்ணிலடங்காதவை. “அனந்த” என்றால் “எல்லையற்றவை” இந்த ஜீவன்கள் (உயிர்வாழிகள்) எல்லாம் பரமபுருஷனான பகவானால் பராமரிக்கப்படுகின்றன. சிறிய எறும்பு முதல் பெரிய யானை போன்ற 84,00,000 உயிரின வகைகள் பகவானால் பராமரிக்கப்படுகின்றன. நம்மை அவர் காப்பாற்றமாட்டாரா என்று நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? பகவானின் பக்தர்களாயிருந்து அவரது பாதகமலங்களில் சரணடைந்து அவருக்குத் தொண்டாற்றுவதற்காக மற்றெல்லாவற்றையும் துறந்திருப்பவர்கள் நிச்சயமாகக் கவனித்துக் கொள்ளப்படுவார்கள். எமது கிருஷ்ண உணர்வு இயக்கத்தில் 350க்கும் மேலான மையங்கள் உள்ளன; கிருஷ்ணர் அவற்றையெல்லாம் பராமரித்து வருகிறார். எமது பக்தித் தொண்டர்களில் எவரும் தனிப்பட்ட வருவாய்க்காக உழைக்கவில்லை, எனினும் அவர்கள் எல்லோரும் பராமரிக்கப்படுகிறார்கள். பகவத் கீதையில் கிருஷ்ணர் “நீ இதைச் செய், அதைச் செய், நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்” என்று சொல்லவில்லை. நம்மைப் பராமரிப்பது மட்டுமின்றி நமது பாவங்களின் விளைவுகளிலிருந்து நம்மைப் பாதுகாப்பதாகவும் அவர் கூறுகிறார். (ப.கீ. 18.66) இந்த உறுதிமொழிகளெல்லாம் தரப்பட்டுள்ளன.
( ஶ்ரீல பிரபுபாதர் / பகவான் ஸ்ரீ கபிலரின் யோகமுறை / பரமபுருஷனும் உன்னத யோகியும் )
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment