ஆரம்பத்தில்
ஒரே ஒரு வேதம் மட்டும்
இருந்தது. அதைப் படிக்க வேண்டிய
அவசியமும் இருக்கவில்லை. ஒரு முறை குருவிடம்
கேட்ட மாத்திரமே புரிந்துகொள்ளக் கூடிய புத்தி கூர்மையும்
நினைவாற்றலும் மக்களுக்கு இருந்தன. முழுக் கருத்தையும் நொடியில்
புரிந்து கொள்வார்கள். ஆனால் 5,000 ஆண்டுகட்கு முன்னர், கலியுக மக்களின் வசதிக்காக
வியாசதேவர் வேதங்களை எழுத்தில் வடித்தார். நாளடைவில் மக்களின் வாழ்நாள் குன்றி, நினைவாற்றல் குறைந்து,
புத்தி மழுங்கிப் போய் விடுமென்பதை அறிந்திருந்த
வியாசர் வேத ஞானத்தை எழுத்தில்
வடித்துவிடுவது நல்லதென்று எண்ணினார். அவர் வேதங்களை நான்காகப்
பிரித்தார்: ரிக், சாம, யஜுர்,
அதர்வ, பின்னர் இந்த வேதங்களைத்
தனது பல்வேறு சீடர்களிடம் ஒப்படைத்தார்.
பிறகு, புத்தியில் குறைந்தவர்களான ஸ்த்ரி, சூத்திரர், த்விஜ-பந்து ஆகியோரைப் பற்றி
எண்ணினார். பெண்கள், தொழிலாளிகளான சூத்திரர்கள், உயர் குடியில் பிறந்தும்
உரிய தகுதிகளைப் பெறாத த்விஜ-பந்துக்களையும்
பற்றி அவர் எண்ணினார். பிராமண
குலத்தில் பிறந்தும் பிராமணர்களுக்கான தகுதிகளைப் பெற்றிராத ஒருவனை த்விஜ-பந்து
என்பார்கள். இவர்களுக்கும் பயன்படும் வகையில், இந்தியாவின் சரித்திரம் என்று கருதப்படும் மஹாபாரதத்தையும்,
பதினெட்டுப் புராணங்களையும் வியாசர் தொகுத்தார். இவை
எல்லாம் வேத இலக்கியங்கள் எனப்படும்:
புராணங்கள், மஹாபாரதம், நான்கு வேதங்கள், உபநிஷத்துக்கள்.
உபநிஷத் என்பது வேதங்களின் ஒரு
பகுதி. பின்னர், பாண்டித்தியம் பெற்றவர்களுக்காகவும், தத்துவ ஞானிகளுக்காகவுமென வேத
ஞானத்தை எல்லாம் சுருக்கி, “வேதாந்த
சூத்திரம்” என்ற வடிவில் வழங்கினார்.
வேதங்களின் இறுதி வடிவம் இது.
வேத வியாசர் தாமே வேதாந்த
சூத்திரத்தைத் தன் குரு மஹாராஜர்
நாரதரின் கட்டளைப்படி எழுதினார். எனினும் அவருக்குத் திருப்தி
ஏற்படவில்லை.
ஸ்ரீமத்
பாகவதத்தில் இந்த நீண்ட கதை
விவரிக்கப்பட்டுள்ளது. பல புராணங்கள், உபநிஷத்துக்கள்
தவிர, வேதாந்த சூத்திரத்தை எழுதியும் கூட
வியாசருக்கு அவ்வளவாகத் திருப்தி ஏற்படவில்லை. அப்போது அவரது குருமஹாராஜர்
நாரதர், “நீ வேதாந்தத்திற்கு விளக்கம்
சொல்” என்று பணித்தார். “வேதாந்தம்”
என்றால் முடிவான அறிவு என்று
பொருள். முடிவான அறிவு கிருஷ்ணரே.
வேதம் முழுமையிலும் கிருஷ்ணரை அறிய வேண்டுமென்று கிருஷ்ணர்
சொல்கிறார். “வேதாந்த க்ருத் வேத-வித் ஏவ சாஹம்”
கிருஷ்ணர் சொல்கிறார்: “நானே வேதத்தைத் தொகுத்தவன்.
நானே வேதங்களை அறிந்தவன்”. எனவே இறுதி லட்சியம்
கிருஷ்ணரே. இது வேதாந்த தத்துவத்திற்கு
விரிவுரை வழங்கும் எல்லா வைஷ்ணவ பாஷ்யங்களிலும்
விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. கௌடீய வைஷ்ணவர்களான எங்களுக்கு
பலதேவ வித்யாபூஷணர் எழுதிய “கோவிந்த பாஷ்யம்”
எனும் நூல் கிடைத்தது. அதுபோலவே,
ராமானுஜாசார்யரும், மாத்வாசார்யரும் பாஷ்யங்கள் எழுதி உள்ளார்கள். ஆதிசங்கரரின்
விளக்கம் ஒன்று மட்டுமே உண்டென்பதல்ல.
வேதாந்த பாஷ்யங்கள் பல உள்ளன. ஆனால்,
முதன்முதலில் பாஷ்யம் எழுதியவர் வைஷ்ணவரல்லாத
காரணத்தால் ஆதிசங்கரரின் விளக்கம் ஒன்று மட்டுமே உள்ளதென்ற
தவறான கருத்து மக்களிடையே பரவியிருக்கிறது.
தவிர, வேத வியாசர் தாமே
மிகச் சிறந்த வேதபாஷ்யத்தை எழுதியுள்ளார்.
அதுவே ஸ்ரீமத் பாகவதம். வேதாந்த
சூத்திரத்தின் முதற் சொற்களோடு ஸ்ரீமத்
பாகவதம் தொடங்குகிறது. “ஜன்மாதியஸ்ய யத:” இந்தச் சொற்களுக்கான
முழு விளக்கமும் பாகவதத்தில் பெறப்படுகிறது. பூரண உண்மையான பிரஹ்மன்
எனப்படுவது யார் என்பதை மட்டும்
வேதாந்த சூத்திரம் குறிப்பிடுகிறது. “எல்லாம் எதனின்று வெளிப்படுகிறதோ
அது பூரண உண்மை.” இது
சுருக்கம். இதற்கான விவரமான விளக்கம்
ஸ்ரீமத் பாகவதத்தில் காணப்படுகிறது. எல்லாம் பூரண உண்மையினின்று
வெளிப்படுகிறதென்றால் பூரண உண்மையின் இயல்பு
என்ன? அது ஸ்ரீமத் பாகவதத்தில்
விளக்கப்பட்டுள்ளது. பூரண உண்மை உணர்வுள்ளது,
ஸ்வயம் பிரகாசமானது. நாம் பிறரிடமிருந்து அறிவைப்
பெற்று நம் உணர்வையும் அறிவையும்
வளர்த்துக் கொள்கிறோம்; ஆனால் இறைவனான கிருஷ்ணர்
ஸ்வயம் பிரகாசர் என்று சொல்லப்படுகிறார். வேத
ஞானத்தின் முழுமையான சுருக்கம் வேதாந்த சூத்திரம். அதை
எழுதியவரே ஸ்ரீமத் பாகவதத்தில் அதற்கான
விரிவுரையையும் வழங்கியுள்ளார். வேத ஞானத்தை அறிய
விழைபவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தையும் கற்று
வேத ஞானத்திற்கான விளக்கங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமென்று இறுதியாகக்
கேட்டுக் கொள்கிறோம்.
அறிமுகம்‘ / வேதம்
வழங்கும் அறிவு’
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment