புலன் நுகர்வுக்காக பணத்திடம் நாம் பற்றுக் கொண்டுவிடக் கூடாது; ஒவ்வொரு காசையும் கிருஷ்ண பக்தி இயக்கத்தைப் பரப்புவதற்காகவே செலவிட வேண்டும், புலன் நுகர்வுக்காக அல்ல.
பிரச்சாரம் செய்யும் ஒரு பக்தன் பெரிய அளவிலான பணத்தைப் பெறும் பொழுது, அவனுக்கு ஆபத்து காத்திருக்கிறது. ஏனெனில் அர்பணத்தில் ஒரே ஒரு காசைக்கூட தன் சொந்த புலன் நுகர்வுக்காக அவன் செலவு செய்த உடனேயே, வீழ்ச்சியடைந்தவனாகிறான். கிருஷ்ண பக்தி இயக்கத்தைச் சேர்ந்த பிரச்சாரகர்கள், இந்த இயக்கத்தைப் பரப்புவதற்குத் தேவைப்படும் பெரிய அளவிலான பணத்தை துஷ்பிரயோகம் செய்யாதபடி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த பணம் நம் துன்பத்திற்குக் காரணமாகி விடாதபடி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்; இதை கிருஷ்ணருக்காக உபயோகிக்க வேண்டும். அதுவே நமது நித்தியமான மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கும். பணம் நாராயணரின் நாயகியான லக்ஷ்மிதேவி ஆவாள். லக்ஷ்மிதேவி எப்பொழுதும் நாராயணருடன்தான் இருக்க வேண்டும். அப்பொழுது இழிவடையும் பயத்திற்கு அவசியம் இருக்காது.
ஶ்ரீமத் பாகவதம் 7.13.32
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Thankyou Hare Krishna mataji
ReplyDelete