நெருப்பானது, ஒன்றுமறியாத ஒரு குழந்தையால் கையாளப்பட்டாலோ அல்லது அதன் சக்திகளை நன்கறிந்த ஒருவனால் கையாளப்பட்டாலோ அது செயற்படவே செய்யும். உதாரணமாக, காய்ந்த வைக்கோல் அல்லது புல் உள்ள ஒரு வயலில், நெருப்பின் சக்தியை அறிந்த ஒரு முதியவர் தீ வைத்தாலோ அல்லது ஒன்றும் மறியாத ஒரு குழந்தை தீ வைத்தாலோ அது எரிந்து சாம்பலாகிவிடும் என்பது நிச்சயம். அதுபோலவே, ஹரே கிருஷ்ண மந்திர ஜபத்தின் வலிமையை ஒருவன் அறிந்தோ அல்லது அறியாமலோ இருக்கக் கூடும். ஆனால் அப்புனித நாமத்தை ஒருவன் ஜபித்தால், எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் அவன் விடுபடுவான்.
ஒரு குறிப்பிட்ட மருந்தின் நல்ல பலனளிக்கும் சக்தியை அறியாத ஒருவன், அந்த மருந்தை உட்கொண்டால், அல்லது வலுக்கட்டாயமாக உட்கொள்ளச் செய்யப்பட்டால் கூட, அவனுக்குத் தெரியாமலேயே அது செயற்படுகிறது. ஏனெனில், அதன் ஆற்றல் நோயாளிக்குத் தெரியுமா, தெரியாதா என்பதைப் பொறுத்ததல்ல. அதுபோலவே, பகவானின் புனித நாம ஜபத்தின் மகிமையை ஒருவன் அறிந்திருக்கவில்லை என்றாலும், அறிந்தோ, அறியாமலோ அதை அவன் ஜபித்தாலும், அந்த ஜபம் நற்பயன் அளிக்கும் என்பது நிச்சயம்.
ஶ்ரீமத் பாகவதம் 6.2.18-19 / பொருளுரை
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment