பக்தித்தொண்டு மற்றும் தொண்டாற்றுபவர்களின் மனோநிலை











பகவத் சேவையின் பொருட்டு அனைவரும் நட்புறவுடன் வாழவேண்டும். ஒவ்வொருவரும் மற்றவர்களின் பகவத் சேவையை புகழ வேண்டுமேயன்றி தன்னுடைய சொந்த சேவையில் கர்வம் கொள்ளக்கூடாது. இதுதான் ஒரு வைஷ்ணவர் சிந்திக்கும் முறையாகும். இதுவே வைகுண்ட சிந்தனையுமாகும் தொண்டு செய்வதில் தொண்டர்களுக்கு இடையே போட்டிகள் இருக்கக்கூடும். ஆனால் வைகுண்ட லோகங்களில் மற்றொரு தொண்டனின் சேவை பாராட்டப்படுகிறதே ஒழிய தூஷிக்கப்படுவதில்லை. இது வைகுண்ட போட்டியாகும். தொண்டர்களுக்கிடையில் பகை என்ற கேள்விக்கே இடமில்லை. ஒவ்வொருவனும் அவனது திறமைக்கேற்ப பகவத் தொண்டு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். வைகுண்டத்திலுள்ள செயல்முறைகள் இப்படித்தான் இருக்கும். ஒவ்வொருவரும் ஒரு தொண்டனே என்பதால் ஒவ்வொருவரும் ஒரே படித்தரத்தில் தான் இருக்கின்றனர். மேலும் ஒவ்வொருவனும் அவனது திறமைக்கேற்ப பகவானுக்குத் தொண்டு செய்ய அனுமதிக்கப்படுகிறான். பகவத்கீதை (15.15 ) இதை பின்வருமாறு உறுதி செய்கிறது : _ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோ மத்த ஸ்ம்ருமிதிர் ஞானம் அபோஹனம் ச :_ பகவான் ஒவ்வொருவருடைய இதயத்திலும் இருந்துகொண்டு தொண்டர்களின் மனோபாவத்திற்கேற்ப அவனுக்குத் உத்தரவுகள் பிறப்பிக்கிறார். ஆயினும் பகவான் பக்தர்களுக்கும் பக்தர்ல்லாதவர்களுக்கும் வெவ்வேறு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார். பக்தரல்லாதவர்கள் பரமபுருஷரின் அதிகாரத்தை எதிர்ப்பதால், அவர்கள் ஒவ்வொரு பிறவியிலும் பகவத் சேவையை மறந்து இயற்கை சட்டங்களினால் தண்டிக்கப்படுவதற்கேற்ப பகவான் அவர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார். ஆனால் மனப்பூர்வமாக பகவானுக்கு தொண்டு செய்ய விரும்பும் பக்தனுக்கு பகவான் வேறொரு முறையில் உத்தரவு பிறப்பிக்கிறார். பகவத் கீதையில் (10.10) பகவான் பின்வருமாறு கூறுகிறார் "எப்போதும் என்னிடம் பக்தி செய்து, அன்புடன் என்னை வழிபடுபவர்களுக்கு என்னிடம் வந்தடைவதற்குரிய அறிவை நானே அளிக்கிறேன்." ஒவ்வொருவனும் ஒரு தொண்டனே. அவன் நண்பனோ அல்லது பகைவனோ அல்ல. ஒவ்வொரு ஜீவராசியின் மனநிலைக்கு ஏற்ப, பகவானின் வெவ்வேறு உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து ஒவ்வொருவரும் செயலாற்றுகின்றனர்.
( *ஶ்ரீல பிரபுபாதர் / பொருளுரை / ஶ்ரீமத் பாகவதம் / 7.5.12* )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment