ஆதாரம் :- ஶ்ரீமத் பாகவதம் எட்டாம் காண்டம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பாகம் 3
பரமபுருஷர் அதிதியின் புதல்வராகத் தோன்ற சம்மதித்தல்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்படுவது போல்,
அதிதியால் இயற்றப்பட்ட பயோ - விரதத்தினால் மிகவும் திருப்தியடைந்த பரமபுருஷ பகவான்
பூரண வைபவங்களுடன் அவள்முன் தோன்றினார். பகவான் அவளது பிரார்த்தனைக்கிணங்கி அவளது புதல்வராக
அவதரிக்க ஒப்புக்கொண்டார்.
அதிதி தொடர்ந்து பன்னிரண்டு நாட்களுக்குப் பயோ
- விரத சடங்கை இயற்றியபின், உண்மையாகவே அவளிடம் மிகவும் திருப்தியடைந்த பகவான், மஞ்சள்
நிற ஆடைணயிந்தவராய், நான்கு கரங்களுடன் அவள் முன் தோன்றினார். தனக்கெதிரே பகவான் எழுந்தருளி
இருப்பதைக் கண்ட அதிதி, உடனடியாக எழுந்து, பகவான் மீதுள்ள மிகவும் பரவச அன்புடன் தரையில்
விழுந்து மரியாதையுடன் அவரை வணங்கினாள். பரவச உணர்வின் காரணத்தால் அவளது தொண்டை அடைத்துக்
கொண்டது. பக்தியால் அவளது உடல் முழுவதும் நடுங்கியது. பகவானுக்குப் பொருத்தமான பிரார்தனைகளை
அவன் சமர்ப்பிக்க விரும்பிய போதியிலும், அவளால் எதையும் செய்ய முடியவில்லை. இதனால்
அவள் சிறிது நேரம் மௌனமாகவே இருந்தாள். பிறகு பகவானுடைய பேரழகைக் கண்டு ஆறுதலடைந்து,
அவளது பிரார்த்தனைகளைச் சமர்ப்பித்தாள். அனைத்து ஜீவராசிகளுக்கும் பரமாத்மாவாகிய முழுமுதற்கடவுள்
அவளிடம் மிகவும் திருப்தியடைந்து, ஓர் அம்ச - அவதார ரூபத்தில் அவளது புதல்வராக அவதரிக்க
ஒப்புக்கொண்டார். கஸ்யப முனிவரின் தவங்களால் அவர் ஏற்கனவே திருப்தியடைந்திருந்தார்.
இவ்வாறாக அவர்களது புதல்வராக அவதரிப்பதுடன், தேவர்களையும் காப்பதற்குச் சம்மதித்தார்.
இவ்வாறு தமது வாக்குறுதியை அளித்த பின் பகவான் மறைந்தருளினார். அதிதி பகவானின் கட்டளையைப்
பின்பற்றி கஸ்யப முனிவரின் தொண்டில் ஈடுபட்டாள். அவரால் சமாதியின் வாயிலாக, பகவான்
தனக்குள் இருப்பதைக் காண முடிந்தது. இவ்வாறாக தமது விந்துவை அவர் அதிதியின் கருவினுள்
புகுத்தினார். பரமபுருஷ பகவான் அதிதியின் கருவில் எழுந்தருளியிருப்பதை ஹிரண்யகர்பர்
எனப்படுபவரான பிரம்மதேவர் புரிந்து கொண்டார். இவ்வாறாக அவர் பகவானிடம் பிரார்த்தனைகள்
செய்தார்.
(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8 / அத்தியாயம் 17 )
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment