முன்னுரை:
இந்த ஶ்லோகம், நமக்குள் இருக்கும் மகிழ்ச்சியை அறியாமல், ஜட உலகில் அதைத் தேடும் மனிதனின் நிலையை எளிமையாக விளக்குகிறது. எப்படி ஒரு மான் கானல் நீரை உண்மை நீராக எண்ணி ஓடுகிறது, அதுபோல் நாமும் உண்மையான மகிழ்ச்சியைத் தவறான இடங்களில் தேடுகிறோம்.
உண்மையான மகிழ்ச்சி
ஜலம்-நீர்; தத்-உத்பவை:-அந்த நீரிலிருந்து வளர்ந்த
புல்லால்; சன்னம்-மூடப்பட்டுள்ள; ஹித்வா-விட்டுவிட்டு; அக்ஞ:-அறிவில்லாத ஒரு மிருகம்;
ஜல-காம்யயா-நீரைப் பருக விரும்பி; ம்ருகத்ருஷ்ணாம்-கானல் நீரை; உபாதாவேத்-தேடிச் செல்கிறது;
ததா-அதுபோலவே; அன்யத்ர-வேறெங்கோ; அர்த்த-த்ருக்-தன்னலத்தில் ஈடுபட்டு; ஸ்வத:-தனக்குள்.
மொழிபெயர்ப்பு
அறியாமையின் காரணத்தால், புல்லால் மூடப்பட்டுள்ள
கிணற்றுக்குள் இருக்கும் நீரைக் காண முடியாமல் ஒரு மான் நீரைத் தேடி வேறு எங்கோ ஓடுகிறது.
அதுபோலவே, ஜட உடலால் மூடப்பட்டுள்ள ஜீவராசி தனக்குள் இருக்கும் மகிழ்ச்சியை காண முடியாமல்,
ஜட உலகில் மகிழ்ச்சியைத் தேடி அலைகிறான்.
அறிவு பற்றாக்குறையின் காரணத்தால் ஜீவராசி எப்படி புற உலகில் மகிழ்ச்சியைத் தேடி அலைகிறான் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். தான் ஓர் ஆன்மீகமான ஜீவன் என்ற தனது உண்மையான சொரூபத்தை ஒருவன் புரிந்து கொள்ளும் பொழுது, அவனால் பரம ஆன்மீக ஜீவனாகிய ஸ்ரீ கிருஷ்ணரையும் புரிந்து கொள்ள முடியும். மேலும் கிருஷ்ணருக்கும் தனக்கும் இடையிலுள்ள உண்மையான அன்புப் பரிமாற்றத்தையும் அவனால் புரிந்து கொள்ள முடியும். உடலானது எப்படி ஆன்மீக ஆத்மாவிலிருந்து வளர்கிறது என்பதை இச்சுலோகம் சுட்டிக் காட்டுவது கவனிக்கத் தக்கதாகும். நவீன விஞ்ஞானிகள், உயிரானது ஜடத்திலிருந்து வளர்கிறது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மை என்னவெனில் உயிரிலிருந்து நான் ஜடம் வளர்கிறது. உயிரானது, அல்லது ஆன்மீக ஆத்மாவானாது இங்கு நீருக்கு ஒப்பிடப்படுகிறது. அந்த நீரிலிருந்து, புல்லின் வடிவில் ஜடத்தொகுதிகள் வளர்கின்றன. ஆன்மீக ஆத்மாவைப் பற்றிய விஞ்ஞானப் பூர்வமான அறிவை அறியாதவன், ஆத்மாவினுள் இருக்கும் ஆனந்தத்தைக் காண, தன் உடலுக்குள் பார்வையைச் செலுத்துவதில்லை; மாறாக, புல்லுக்கு அடியிலுள்ள நீரைப்பற்றிய அறிவு இல்லாத ஒரு மான் நீரைத்தேடி, வெளியிலுள்ள பாலைவனத்திற்குச் செல்வது போலவே, மகிழ்ச்சியைத் தேடி அவன் வெளியே செல்கிறான். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், உயிரின் எல்லைக்கப்பால் நீரைத் தேடமுயலும், தவறாக வழிநடத்தப்பட்ட மனிதர்களின் அறியாமையைக் களைய முயற்சி செய்கிறது. ரஸோ வை ஸ:. ரஸோ ‘ஹம் அப்ஸு கௌந்தேய. நீரின் சுவை கிருஷ்ணரேயாவார். தாகத்தை தணித்துக் கொள்ள, ஒருவன் நீரைச் சுவைத்து கிருஷ்ணருடன் தொடர்பு கொள்ள வேண்டும். இது ஒரு வேதக் கட்டளையாகும். (ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 7.13.29 - )
முடிவுரை:
மகிழ்ச்சி நம்முள் தான் உள்ளது என்பதை உணர வேண்டும். கிருஷ்ண பக்தி வழியாக தான் ஓர் ஆன்மீகமான ஜீவன் என்றும் தனது உண்மையான சொரூபம் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாசன் என்றும் ஒருவன் புரிந்து கொள்ளும் பொழுது, நம் உண்மையான மகிழ்ச்சியை உணர முடியும். வெளியில் அல்லாமல், நம்முள் இருக்கின்ற கிருஷ்ண தாசன் என்ற உண்மையான நிலையை கண்டறிந்து "கிருஷ்ண சேவையை" தொடர்ந்து செய்யும் நித்ய சேவைகளே நித்யமான மகிழ்ச்சியைத் தரும் வழி.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment