ஹனுமானின் இதயத்தில் சீதாராமன்


    

    ராம பக்தி செலுத்துவதில் தன்னை மிஞ்சியோர் யாருமில்லை என உணர்த்தியவர் ஶ்ரீ ராம பக்த அனுமன். இதை உணர்த்தும் விதமாக தன் இதயத்தில் ராமனும், சீதா தேவியும் இருப்பதை தன் நெஞ்சப் பிளந்து காட்டிய அற்புத நிகழ்வு குறித்து இங்கு பார்ப்போம்.

    14 ஆண்டு கால வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ராமனின் பெயரில் 14 ஆண்டுக்காலம் ஆட்சி செய்த பரதனின் ஆட்சியின் கீழ் மக்கள் எந்த ஒரு குறை இல்லாமல் வாழ்ந்தார்கள் என்றாலும், ராமன் பட்டாபிஷேக தினத்தில் தான் மக்களின் முகத்தில் உண்மையான மகிழ்ச்சியும் ஆனந்தமும் வந்தது.

    வேதங்கள் முழங்க, மங்கல கீதங்கள் இசைக்கப்பட்டு, புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களால் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. மக்கள் ஆனந்த மழையில் நனைந்தனர்.

    ராமனும், சீதா தேவியும் அரியாசனத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்து நாட்டு மக்களும், முனிவர்களும், தேவர்களும் கூட பூமாரி பொழிந்தனர்.

    ஸ்ரீ ராமனும், சீதா தேவியும் அரியனையில் அமர்ந்திருக்க, ராமனின் பாதத்தில் அடக்கத்தோடு அனுமன் அமர்ந்திருந்தார். அங்கதனோ உடைவாள் ஏந்தியிருந்தார். ராமனுக்கு வெண்கொற்றக் குடையை பரதன் பிடித்திருந்தார். லட்சுமணனும், சத்துருக்கனனும் வெண் சாமரம் வீசிக் கொண்டிருந்தனர். பெரியவர்கள் மகுடத்தை எடுத்து கொடுத்த, ரகு குல குருவான வசிஷ்ட முனிவர் மகுடத்தை ராமபிரானுக்கு சூட்டினார். ஸ்ரீ ராமன் அரசனானதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    தன் காலடியில் இருந்த அனுமனைப் பார்த்து ராமபிரான், ‘உன்னுடைய உன்னத அன்பை நான் எப்படி விவரிப்பேன். உதவி செய்வதில் உன்னைப் போல யாரையும் ஒப்பாக சொல்ல முடியாது. உன்னுடைய அன்பை எதாலும் அளக்க முடியாது. உன்னைப் போல கைமாறு பார்க்காமல் உதவக்கூடியவர் யாரும் இல்லை.

    உன் உதவிக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன். என் அன்பைத் தவிர விலை உயர்ந்ததை என்னால் தர இயலாது’ என அனுமனை தன் மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார்.

    அனுமனின் உதவியையும், திறமையையும் பாராட்டி அவருக்கு ஒரு பரிசளிக்கும் விதமாக ஒளி வீசக்கூடிய முத்துமாலை ஒன்றை பரிசாக அளித்தார். ஆனந்தத்துடன் பெற்றுக்கொண்ட அனுமன், முத்துமாலையை ஒவ்வொன்றாகப் பிய்த்து ஒவ்வொரு முத்தாக கடித்து உடைக்கத் தொடங்கினார். இதைப் பார்த்து சபையில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    அனுமனுக்கு பித்துப் பிடித்துவிட்டது என ஒவ்வொருவரும் ஒருவிதமாக பேசத் தொடங்கினர். ஆனால் அனுமன் ஏன் அப்படி செய்தார் என்பதை ராமனுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் அவனின் பக்தியை பறைசாற்ற, அனைவரின் முன்னிலையில் ‘அனுமனே ஏன் இப்படி செய்தாய்?’ என கேட்டார்.

    அதற்கு அஞ்சனை மைந்தனோ, ‘பிரபு உங்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ள சீதா தேவி கொடுத்த முத்து மாலையில் உங்களின் இருவரின் உருவம் இருக்கும் என நினைத்து அதை ஒவ்வொன்றாக உடைத்துப் பார்த்தேன். ஆனால் அதில் ஒன்றில் கூட உங்களின் திரு உருவம் இல்லை. உங்களின் திருவுருவோ, பெயர் சொல்லாத எந்த பொருளும் எனக்கு தேவையில்லை என கூறினார்.

    இதைக் கேட்ட சபையில் இருந்தவர்கள், முத்துமாலையை மாசுபடுத்தியதை நியாயப்படுத்த இப்படி ஒரு காரணத்தை சொல்வதாக கூறினர்.

    இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராமனோ, ‘அப்படியானால் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருப்பதாக கூறும் நீ, உன்னுள் நானிருப்பதை நிரூபித்துக் காட்ட முடியுமா?’ என கேள்வி எழுப்பினார்.

    அனுமன் வசமாக மாட்டிக் கொண்டதாக அனைவரும் நினைத்த நிலையில், என்னுள் ஸ்ரீ ராமன் இருப்பதை இப்போதே என நெஞ்சப் பிளந்து காட்டி அதில் ஸ்ரீ ராமனும், சீதா தேவியும் இருப்பதை காட்டினார். அப்போது அனைவரும் அனுமனின் எல்லையற்ற அன்பை கண்டு வியந்தனர்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.










Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more