சீமந்தத்வீபத்தில் வீற்றிருக்கும் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் திவ்ய சரித்திரம்
வழங்கியவர் :- உயர் திரு பங்கஜாங்கிரி தாஸ்
பாகம் 1
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஏழாம் நூற்றாண்டின் வரலாறு
ஸ்ரீ சீமந்தத்வீப்பில் இருக்கும் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர், ஸ்ரீ நீலாசல தாமின் (ஶ்ரீ ஜெகன்னாத புரியின்) எஜமானரும் வேறல்ல. இந்த உண்மையை வரலாற்றின் அடிப்படையில் ஸ்ரீல பக்திவினோத் தாகூரால் "ஸ்ரீ நவத்வீப் தாம மஹாத்மியம்தில் கீழ் கண்ட கதை விளக்கப்பட்டுள்ளது.
ஏழாம் நூற்றாண்டில், ரக்தபாகு என்ற யவன அரசன் ஒரிசா என்ற மாநிலத்தில் தோன்றினான். அவன் மிகுந்த பாவியாகவும், நாத்திகவாதியாகவும் இருந்து பல நாச காரியங்களில் ஈடுபட்டு, கோயில்களை உடைத்து, ஒரிசாவில் உள்ள நன்மக்களுக்கு அச்சத்தை விளைவித்தான். புரியில் உள்ள பகவான் ஜெகந்நாதரின் பக்தர்கள் ரக்தபாகுவின் அட்டகாசத்தை அறிந்த பொழுது மிகவும் அஞ்சினர் அவர்கள் உடனடியாக பகவான் ஜெகந்நாதரை அணுகி, வழிபாட்டிற்குரிய பகவானே! ரக்தபாகு அனைத்து கோயில்களையும் உடைத்து, அங்கு உள்ள விக்ரஹங்களை அழித்து வருவது எங்களுக்கு மிகுந்த கவலையை இருக்கிறது. அவன் தற்போது இந்த திசையை நோக்கி வருகிறான். அவன் எந்த சமயத்திலும் இங்கு வந்து உனது இந்த கோயிலை தாக்கலாம். அவ்வாறு நடந்தால் நாங்கள் எங்களது உயிரை விட்டுவிடுவோம். ஏனெனில் எங்களால் உங்களுக்கு எதிராக நடக்கும் காரியங்களை கண்டு சகித்துக் கொள்ள முடியாது. தயவு செய்து தாங்கள் தங்களது விக்கிரகத்தையும், கோவிலையும் காப்பாற்ற போதுமான ஏற்பாடுகளை செய்து கொண்டு எங்களையும் இந்த அபாயத்திலிருந்து காப்பாற்றவேண்டும் “ என்று பெறும் பதட்டத்துடன் மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.
பக்தர்களின் பிரார்த்தனையை ஏற்று அவர்களது அச்சத்தை போக்கும் விதமாக அன்று இரவு பகவான் ஜகந்நாதர் தலைமை பூஜாரியின் கனவில் தோன்றி கீழ்கண்டவாறு கூறினார்.“ எனது அருமை பூசாரியே பக்தர்களாகிய நீங்கள் என் மீது கொண்டுள்ள அன்பையும், பக்தியையும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அனைவரும் உங்களை விட என்னை அதிகமாக நேசிக்கிறார்கள். இதுவே புனித பக்தர்களின் அடையாளம். உண்மையில் எனது விக்ரஹத்திற்கோ, கோயிலுக்கோ யாராலும் எந்தவித தீங்கையும் விளைவிக்க முடியாது நீங்கள் நிச்சயமாக அதனை பற்றி கவலை பட தேவையில்லை.எனது சக்தியால், அனைத்து நாசக்காரர்களையும் எனது பிரியமான பக்தர்களிடமிருந்து தொலைவில் பிரித்து வைக்க முடியும். ஆனால் எனது பக்தர்களை ஆசீர்வாதம் செய்யும் பொருட்டு, தனது அன்பை அவர்களுக்கு வெளிபடுத்துவதற்காகவும் இது போன்ற இன்னல்களை நானே ஏற்று கொள்கிறேன். இதன் மூலம் எனது பக்தர்களின் அன்பும் பற்றுதலும் பல மடங்காக அதிகரிக்கிறது. இது அவர்களது விருப்பம் ஆதலால் அவர்கள் என் மீது கொண்டுள்ள அன்பை மிக முக்கிய வழியில் வெளிப்படுத்த போகிறேன். தயவு செய்து நாளை என்னுடைய விக்கிரகத்தையும், பலராமர் மற்றும் சுபத்ரா தேவி விவரத்தையும் வங்காளத்திற்கு எடுத்து செல்லவும், எங்களை காட்டின் வழியாக எடுத்துச் செல்ல வேண்டும், ஏனெனில் ரக்தபாகு பிரதான சாலை வழியாக வருகிறான். அதற்காக நீங்கள் அஞ்ச வேண்டாம் நான் உங்களை எப்பொழுதும் பாதுகாப்பேன் என்றார்.
பின்னர் பூஜாரியின் கனவிலிருந்து பகவான் மறைந்தார். பூஜாரி கண்விழித்து. அவர் கண்ட கனவை அனைவருக்கும் தெரிவித்தார். இது பக்தர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அவர்கள் பகவானின் பிரயாணத்திற்கு சரியான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினர்.
ஜகந்நாத் புரியின், பல பிரிவை சார்ந்த பக்தர்கள் பல விதமான சேவைகளை பகவானுக்கு செய்வார்கள். உதாரணமாக பிராமணர்கள் திரு உருவ வழிப்பாட்டிற்கு பொறுப்பு இருப்பார்கள், மற்றவர்கள் பகவானின் இன்பத்திற்காக சமைப்பார்கள். மேலும் சபராக்கள் என்று அழைக்கப்படும் பக்தர்கள், ஸ்ரீ ஜெகந்நாதர்,பலதேவர் மற்றும் சுபத்ரா தேவியை ஸ்நான யாத்திரை, ரத யாத்திரை போன்ற விழாக்களுக்கு அழைத்து செல்லும் சேவையை செய்வார்கள் இது அங்குள்ள பாரம்பரிய வழக்கமாகும்.
பிரபு ஜகந்நாதர் வங்காளம் செல்ல வேண்டும் என்ற விஷயத்தை சபராக்கள் அறிந்தபொழுது, அவர்கள் மறுநாள் காலை புறப்படுவதற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்தார்கள். அவர்கள் நாள் முழுவதும் நடந்து இருள்வதற்கு சற்று முன்பு ஒரு பொருத்தமான இடத்தில் தங்கினார்கள். அங்கு காட்டில் உள்ள பழம், பூ, இலைகளை சேகரித்து பகவானை பூஜித்தார்கள். பிறகு திரு உருவங்களை ஓய்வெடுக்க செய்து பகவானின் மஹாபிரசாதத்தை உண்டு அவர்கள் ஓய்வு எடுத்தார்கள். மறுநாள் காலை காலை விக்ரஹங்களை வழிப்பட்ட பிறகு சபராக்கள் தங்களது சேருமிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். இவ்வாறாக பதினொரு தினங்கள் கழிந்து பன்னிரெண்டாவது நாள் சீமந்தத்வீப்பை அடைந்தார்கள்.அது நவத்வீபத்தின் ஒன்பது தீவுகளில் ஒன்று ஆகும்.
அன்று இரவு பகவான் ஜகந்நாதர், தலைமை சபராவின் கனவில் தோன்றி, தான் அந்த இடத்திலேயே இருக்க விரும்புவதாகவும், அந்த இடம் எல்லா விதங்களிலும் ஆன்மீகமாக உள்ளது என்றும் கூறினார். உடனடியாக சபரா பக்தர்கள், பகவான் விருப்பத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு, பகவான் அங்கேயே நிரந்திரமாக தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்கள்.
சபரா வைஷ்ணவர்கள் பல தலைமுறைகளுக்கு பகவானை சேவகம் செய்து வந்தார்கள். அவர்களது தூய அன்பினாலும், பக்தியினாலும் முக்தி அடைந்து, இறுதியாக . ஆன்மீக உலகில் பகவான் ஜகந்நாதரின் நிரந்திர இருப்பிடத்திற்கு சென்றார்கள். இன்றும் ஐகந்நாதர் கோயிலுக்கு அருகே சபரா என்ற கிராமம் உள்ளது.அதை சபரா தங்கா அல்லது சபராக்களின் இருப்பிடம் என்று அழைக்கிறார்கள். காலத்தின் பாதிப்பால், இந்த விக்ரஹமும், கோயிலும் பார்வையிலிருந்து மறைந்தது.இருப்பினும் பகவான் அந்த இடத்தை விட்டு செல்லவில்லை
நாளை . . .
பதினாறாம் நூற்றாண்டின் வரலாறு
தொடரும் . . . .
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment