சீமந்தத்வீபத்தில் வீற்றிருக்கும் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின்
திவ்ய சரித்திரம்
வழங்கியவர் :- உயர் திரு பங்கஜாங்கிரி தாஸ்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
பாகம் 2
பதினாறாம் நூற்றாண்டின் வரலாறு
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
பகவான் ஶ்ரீ சைதன்ய மகாபிரபுவின் காலத்தில் ஜகதீச கங்குலி என்ற பக்தர் மாயாப்பூரின் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தார்.ஜகதீசர் ஒரு சிறந்த வைஷ்ணவர்.அவர் மிகுந்த வயோதிகராய் இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் 900 கிலோமீட்டர் நடந்து வங்க கடற்கரையில் உள்ள ஶ்ரீ க்ஷேத்திரம் என்னும் ஜகன்நாத புரிக்கு செல்வார். அவர் பக்தர்களுடன், பகவான் ஶ்ரீ சைதன்யரையும், பிரபு ஸ்ரீ ஜகந்நாதரையும், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவியையும் தரிசிப்பதற்காகவும் ரத யாத்திரை பண்டிகையில் கலந்து கொள்ளவதற்காகவும் செல்வார். பின் நான்கு மாதம் அங்கேயே தங்கி அனைத்து வகையான சேவைகளையும் செய்து பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரை பிரிய மனமில்லாமல் வங்காளத்தில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்புவர்.
காலங்கள் சென்றன. ஜகதீசர் கொடிய நோயினால் பார்வையை இழந்தார். அவரின் மகிழ்ச்சி சிதறியது அவரால் பகவான் ஶ்ரீ சைதன்யரையும், பகவான் ஶ்ரீ ஜகந்நாதரின் விக்ரஹங்களையும் இனி தன்னால் காண முடியாது என்று உணர்ந்தபோது மிகவும் மனம் தளர்ந்தார். அதுமட்டும்ல்லாது அவரது நண்பர்கள், புரிக்கு செல்லும் வருடாந்திர யாத்திரைக்கு குருடரை தங்களுடன் அழைத்து செல்வது கடினமென்று மறுத்தனர். இதனால் ஜகதீசர் நவத்வீபத்திேலேயே தொடர்ச்சியான துன்பத்திலும், மனம் கவலையிலும் இருந்தார். நம்பிக்கையற்ற நிலையில் தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சி செய்தார்.
இந்நிலையில் ஓர் இரவு பகவான் ஜகந்நாதர் ஜகதீசரின் கனவில் தோன்றி, "மறுநாள் காலை ஜகதீசர் கங்கைக்கு நீராட செல்லும்பொழுது ஒரு மரக்கட்டை அவரது சிரசை தொடும் என்றும், உடன் அவரது பார்வை திரும்ப கிடைக்கும் என்றும் கூறினார். மேலும், அவர் அந்த மரக்கட்டை எடுத்து கொண்டு போய் அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் ஒரு தச்சரிடம் கொடுத்து தனது (ஜெகந்நாதரின்) அர்ச்சா விக்கிரகத்தை செய்ய சொல்ல வேண்டும் என்றார். அவர் தனது பிரியமான பக்தர் என்பதால் அந்த சேவையை மிக நேர்த்தியாக செய்வார் என்றும் தெரிவித்தார்.. மேலும் பகவான் ஜெகந்நாதர் ஜகதீசரிடம், அந்த தச்சன் ஒரு தொழு நோயாளி என்றும், அவன் கைகள் உருவமிழந்து இருக்கும் என்றும், அவன் இந்த வேலையை செய்வதற்கு மறுப்பான் என்றும் கூறினார். நீ அந்த தச்சனை வற்புறுத்தி அவரை சம்மதிக்க வைக்க வேண்டும் என்றார். அந்த வேலையை முடிக்கும்போது தச்சனின் தொழு நோய் மறைந்து விடும் என்று பகவான் உறுதியளித்தார்.
ஜகதீசர் விழித்தவுடன், தனது கனவை நினைத்து வியந்து போனார். அவர் காலை எழுந்தவுடன், கங்கைக்கு குளிக்க சென்றார். அப்போது ஒரு மரக்கட்டை மிதந்து வந்து அவரது சிரசின் மீது பட்டவுடன் அவரது பார்வை திரும்பியது. இதனை கண்டு அவர் மிகுந்த பரவசமடைந்தார். அந்த மரக்கட்டையை எடுத்து கொண்டு அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று அந்த தச்சனை தேடினார். ஜகதீசர் அந்த தச்சனிடம் பகவான் ஜகந்நாதரின் திருவிக்ரஹத்தை அந்த மரக்கட்டையிலிருந்து செய்யுமாறு வேண்டினார். அந்த தச்சன் திருவிக்ரஹத்தை செய்ய மறுத்து, அவரது உருவமிழந்த விரல்களை காட்டி “இந்த கைகளை கொண்டு, பகவானின் திருவிகரஹத்தை நான் எவ்வாறு செதுக்குவேன்" என்றார். ஆனால் ஜகதீசரோ மீண்டும் மீண்டும் அவனிடம் விக்ரஹம் செய்திட வற்புறுத்தினார். மேலும் அவர் தச்சனிடம் இந்த விக்ரஹத்தை முடிக்கும் பொழுது உனது குஷ்டம் நீங்கீவிடும் என்று பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர் தனது சொப்னத்தில் கூறியதையும் தெரிவித்தார்.. இறுதியில் அந்த தச்சன் விக்ரஹம் செய்திட சம்மதித்தான்.
ஜகதீசர் அந்த தச்சன் வேலை செய்வதையும், அவ்வாறு வேலை செய்யும்போது தொழு நோயாள் அவர் துன்பப்படுவதையும் அவன் கையிலிருந்து இரத்தமும், சீழும் வழிவதையும் கண்டார். தச்சனோ வேதனை சகித்து கொள்ள முடியாமல் தனது வேலையை நிறுத்த முடிவெடுத்து , ஜகதீசரிடம் என்னால் வேதனை சகித்து கொள்ள முடியவில்லை. அதனால் பகவானின் திருவிக்ரஹத்தை தன்னால் செய்ய முடியாது என்று கூறினார். ஆனால் ஜகதீசரோ அவரை உற்சாகப்படுத்தி அவரது துயரத்தை பகவானிடம் தெரிவித்து விக்ரஹத்தை முடிக்கும் வரை வேதனை மறக்க செய்தார். அவர் விக்ரஹத்தை முடித்த வினாடியே அவரது தொழு நோய் மறைந்தது. ஜகதீசர் அந்த விக்ரஹத்தை தற்போதுள்ள ஜகந்நாதரின் கோயில் அருகே எடுத்து சென்று ஆனந்தமாகவும் உற்சாகத்துடனும் மிகவும் நேர்த்தியாக வழிப்பாட்டை தொடக்கி வைத்தார்.
சில இரவுகளுக்கு பின்னர் ஜகதீசருக்கு மீண்டும் ஒரு கனவு தோன்றியது. இம்முறை பகவான் ஜகந்நாதர் அருகில் உள்ள வேப்ப மரத்தின் கட்டைகளை கொண்டு சுபத்ரா தேவி மற்றும் ஶ்ரீ பலதேவரின் விக்ரஹத்தை அதே தச்சனை கொண்டு செய்யுமாறு உத்தரவிட்டார். ஜகதீசரும் அவ்வாறே செய்து அந்த விக்கிரகங்களை, அதே கோயிலில் ஜகந்நாதருக்கு அருகே பிரதிஷ்டை செய்தார்.
ஜகதீச கங்குலியின் மறைவிற்கு பிறகு அவருக்கு பின் வந்தவர்கள் சரியான முறையில் விக்ரஹ சேவையில் ஈடுபடவில்லை. அதனால் , பகவான் ஜகந்நாதர் தனது வழிபாடு உதாசீனப்படுவதை கண்டு அதிருப்தி அடைந்து தனது லீலைகளை முடித்துக் கொள்ள முடிவு செய்தார். அச்சமயம் அந்த ஊரில் திடீரென்று எல்லா இடத்திலேயும் காலரா நோய் பரவிற்று. அப்பொழுது அங்கு வசித்த அனைவரும் பிரபு ஜகந்நாதரிடம் தங்கள் மீது கருணை கொள்ளுமாறும், தங்களது வாழ்க்கையை காப்பாற்ற கோரியும் வேண்டினர். அன்று இரவு ஜகந்நாதர் தலைமை பூஜாரியின் கனவில் தோன்றி “கங்குலி குடும்பத்தை சேர்ந்த ஒரு திருமணமான பெண், குணவதி அல்ல என்றும், அவள் தன்னை அவமதித்து விட்டாதகவும் கூறினார். அந்த அபராதத்திற்காக கங்குலி குடும்பத்தை சார்ந்தவர்களும், அந்த கிராமத்து மக்களும் அந்த இடத்தை விட்டு செல்லாவிட்டால் இறந்து விடுவார்கள் என்றும் கூறினார். மறுநாள் காலை கங்குலி குடும்பத்தினர் அனைவரும் இறந்திருப்பதை அந்த கிராமத்தினர் கண்டனர். மேலும் அந்த இடம் பாலைவனமாக மாறியது.
அந்த கோயிலில் வழிபாடு இல்லாத காரணத்தால் பகவான் ஜகந்நாதர், சுபத்ரா, பலதேவரை மக்கள் மறந்து போயினர். மேலும் அந்த கோயில் இடிந்து தரைமட்டமானது சிறிது காலத்திற்கு பிறகு அவ்விடம் வனத்தால் சூழப்பட்டது
நாளை . . .
பகவான் ஜெகந்நாதரின் மறு அவதாரம்.
தொடரும் . . .
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment