சீமந்தத்வீபத்தில் வீற்றிருக்கும்
பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின்
திவ்ய சரித்திரம்
வழங்கியவர் :- உயர் திரு பங்கஜாங்கிரி தாஸ்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
பாகம் 3
பகவான் ஶ்ரீ ஜகந்நாதரின் மறு அவதாரம்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஜன்ம கர்ம ச மே திவ்யம்
ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம
நைதி மாம் ஏதி ஸோ’ர்ஜுன
“எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலைவிட்ட பின் மீண்டும் இப்பௌதிக உலகில் பிறவி எடுப்பதில்லை. அர்ஜுனா, அவன் எனது நித்திய உலகை அடைகிறான்.” ( ஶ்ரீமத் பகவத்கீதை 4.9)
பகவான் ஜகன்னாதர், பலருக்கும் புரியாத வகையில் தன்னுடையை இனிய விருப்பத்தால் தோன்றி மறைகிறார். யார் ஒருவர் இந்த அற்புதமான லீலைகளை புரிந்து கொள்கிறாரோ அவர்கள் மீண்டும் இந்த ஜட உலகில் பிறப்பதில்லை என்று பகவான் ஜகன்னாதர் (ஶ்ரீ கிருஷ்ணர்) பகவத்கீதையில் கூறுகிறார்.
ஜகதீசகங்குலியின் குடும்பம் மறைந்து பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர், முன்பு பகவான் ஜகன்னாதரின் கோவில் இருந்த இடத்தில் அடர்ந்த புதரின் நடுவில் நிறைய பாம்பு புற்றுகள் இருந்தது. பாம்பு புற்று புதரின் நடுவே தனித்தன்மையான அழகு நிறைந்த நீலப்பூ ஒன்று மலர்ந்திருப்பதை கிராம வாசிகள் கண்டனர். பாம்பு புற்று புதரின் அருகே சென்ற போது தயைகூர்ந்து எனக்கு தண்ணீர் தாருங்கள்! தண்ணீர் தாருங்கள் நான் தாகமாக இருக்கின்றேன்" என்ற குரல் கேட்டது. இந்த பாழடைந்த இடிந்த கோவிலுக்கு உரிமையாளர் யாரும் இல்லாத காரணத்தினாலும் , விஷம் நிறைந்த பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் பயத்தினாலும் அந்த கிராம வாசிகள் அக்கோவில் அருகே செல்ல தயங்கினர். அதனால் அந்த கோவில் கேட்பாரற்று இருந்தது.
1958 ஆம் ஆண்டு, பகவான் ஜகந்நாதர் தன்னை எல்லோரும் மீண்டும் பூஜிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டதால் ஜெய்மினி கோஷ் என்பவர் மூலம் மீண்டும் தன்னை வெளிப்படுத்த விரும்பினார்.
ஜெய்மினி கோஷின் அற்புத அனுபவங்கள்
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
![🍁](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t61/1.5/16/1f341.png)
ஜெய்மினி கோஷ் என்பவர் கோவில் அருகே உள்ள பஹாதுர்பூர் கிராமத்து வாசியாவார். அச்சமயம் அவர் வாலிபராக இருந்ததால் இப்போது அவர் நினைவு கூர்ந்து கூறினார் :
ஒரு மாலை பொழுதில் நவதீபில், பகவான் ஜகன்னாதரின் கோவிலின் வெளியே பாதையில் நடந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மூங்கில் மரம் ஒன்று சாய்ந்தது. ஒரு தீய சக்தி இருப்பதை என்னால் உணர முடிந்ததால், நான் இது பிசாசின் வேலையாக இருக்கும் என கருதி அதன் மீது நான் ஏறினால் எனக்கு ஏதாவது தீங்கு வரும் என சந்தேகப்பட்டேன். பயத்தினால் சூழப்பட்ட நான் தரையில் மண்டியிட்ட போது, பயத்தின் எல்லையில் மூர்ச்சையாகிப் போனேன் நான் கண்விழித்து பார்த்த போது திடமான குரல் ஒன்று" எல்லாம் சரியாகிவிட்டது இப்போது நீ உன் வழியில் தொடரலாம்" என்றது.
உடனே நான் “ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டேன் அந்த குரல் நான் செய்யவில்லை. உண்மையில் நான் தான் உன்னைக் காப்பாற்றினேன், நான் உனது நண்பன் என்றது.சந்தேகம் கொண்ட நான் "என்னை நீங்கள் காப்பாற்றியிருந்தால், உண்மையில் நீங்கள் என் நண்பராயிருந்தால், நான் நவ்தீபத்தில் உள்ள என் மாமன் வீட்டிற்கு செல்ல உதவுங்கள்" என்று கூறினேன். உடனே என்னை யாரோ தூக்கிச்செல்வது போல் எவ்வித முயற்சியின்றி காட்டுபாதையை கடந்தது மட்டுமல்லாமல் படகின் உதவியின்றி கங்கையையும் கடந்து என் மாமன் வீட்டை அடைந்தேன்.
கொஞ்ச நேரம் கழிந்த பின்பு அதே குரல் தன்னை பகவான் ஜகன்னாதர் என்று காட்டிக்கொண்டு. தன்னை கங்கை நீர், பால் மற்றும் பாடாசா என்ற இனிப்புடன் வழிபடுமாறு கூறினார். பின்னர் பதிக் சட்டர்ஜி என்பவர் இப்போது அந்த நிலத்தின் சொந்த காரர் என்றும் கூறினார்.நிலத்தின் சொந்த காரர் பதிக் சட்டர்ஜியை தேடி சென்று நடந்த விவரங்களையெல்லாம் விளக்கினேன். பதிக்சட்டர்ஜி தன் மாப்பிள்ளை ராம் உதவியுடன் மலை போல் கிடந்த கரையான் புற்றை சமன் செய்து உள்ளே இருந்த பகவான் ஜகன்னாதரை வெளியில் எடுத்தார் பகவானின் உருவங்கள் மோசமான மலைபோன்ற கரையான் புற்றின் உள்ளே இருந்திருந்தாலும் அதன் உருவங்கள் ஆச்சரியப்படும் வகையில் அப்படியே இருந்தது.அவர்களின் திருமேனியிலிருந்து அருமையான ஊதுபத்தியின் நறுமணம் வெளிப்பட்டது. பலதேவர் மற்றும் சுபத்ராவின் மர உருவங்களில் சில பாகங்கள் மட்டும் பதிக் சட்டர்ஜியின் தோட்டத்தில் இருந்த வேப்பமரங்களின் உதவியுடன் சிற்பியால் சரி செய்யப்பட்டது.
ஒரு சிறு கோவில் ஒன்று அவர்களுக்கு கட்டப்பட்டது (அது இப்போது கூட ஆலமரமும் சிவலிங்கமும் உள்ள இடத்தின் அருகே உள்ளது) பதிக் சட்டர்ஜி அவர்களே முழு நேர பூஜாரியாக பகவானுக்கு பணியாற்றினார். 1979ல் வயதான காரணத்தால் பதிக் சட்டர்ஜி தன் அன்பு மூர்த்திகளை தொடர்ந்து பூஜிக்க முடியாமல் போகும் என எண்ணி, அந்த கோவிலை ஒரு கௌரபூர்ணிமா தினத்தன்று இஸ்கான் அமைப்பிற்கு தானமாக தந்தார்.பல பக்தர்கள் அன்பளிப்பால் இங்கு சிறந்த கோவில் கட்டப்பட்டு அழகான தோட்டங்களுடன் மாமரங்களுடனும் தற்போது பராமரிக்கபடுகிறது.
அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த ஜகன்னாதர் பலதேவர் மற்றும் சுபத்ரா தேவியின் விக்ரஹங்கள் 500 ஆண்டுகளாக அங்கு இருந்து வருகிறது. இப்போதும் பிரபு ஜகந்நாதர் தனது நித்ய லீலைகளை நடத்தியவண்ணம் உள்ளார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami
Comments
Post a Comment