மனதைக் கட்டுப்படுத்தினாலொழிய உயர்வென்பதில்லை. உடல் ஒரு ரதத்தைப் போன்றது; மனம் அதன் சாரதி. உங்கள் சாரதியிடம் “என்னை கிருஷ்ணரின் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று சொன்னால் அவர் உங்களை அங்கு அழைத்துச் செல்வார். அவரிடம் “என்னை அந்த மதுக்கடைக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்றால் அங்குதான் போவீர்கள். நீக்ஙள் விரும்புமிடத்திற்கு உங்களை அழைத்துச் செல்வது சாரதியின் வேலை. உங்கள் சாரதியை உங்களின் கட்டுப்பாட்டுக்கள் வைத்திருக்கும் வரை அவர் உங்களை நீங்கள் விரும்பும் இடத்திற்கு இட்டுச் செல்வார்; இல்லாவிடில் இறுதியில் நான் விரும்புமிடத்திற்கு உங்களை கொண்டு செல்வார். உங்கள் சாரதியை நீங்கள் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அவர் உங்களின் எதிரியாவார்; ஆனால், உங்கள் கட்டளைப்படி நடந்தால் அவர் உங்களின் நண்பன்.
(ஶ்ரீல பிரபுபாதர் / பக்குவநிலைக்கான வழி/ அத்தியாயம் இரண்டு.)
Comments
Post a Comment