தெய்வீக இலக்கியங்களும். பௌதீக இலக்கியங்களும்


தெய்வீக இலக்கியங்களும்.

பௌதீக இலக்கியங்களும்



இலக்கியங்கள் மீதான ஒரு சுவை பொது மக்களிடம் இயற்கையாகவே உள்ளது. அவர்கள் அறியாத விஷயத்தைப் பற்றிய எதையாவது கேட்கவும் அவற்றை வாங்கிப் படிக்கவும் விரும்புகின்றனர். ஆனால் ஜட புலன்களின் திருப்திக்குரிய விஷயங்களைக் கொண்ட மட்டமான இலக்கியங்களால் அவர்களது சுவை தவறாக பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய இலக்கியங்கள் வெவ்வேறு வகையான இகலோக கவிதைகளையும், கற்பனையான தத்துவங்களையும் கொண்டுள்ளன. மாயையின் ஆதிக்கத்திலுள்ள இவை புலன் இன்பத்தில்தான் முடிவடைகின்றன. இந்த நூல்கள் உண்மையில் உபயோகமற்றவை என்றாலும், புத்தியில் தாழ்ந்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவை பலவிதமாக அழகுபடுத்தப்படுகின்றன. இவ்வாறு கவரப்பட்ட ஜீவராசிகள் ஜட பந்தத்தில் இன்னும் அதிகமாக, சிக்கிக் கொண்டு, ஆயிரமாயிரம் தலைமுறைகளில் முக்தி பெறும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர். ஸ்ரீ நாரத ரிஷி வைஷ்ணவர்களிலேயே மிகச்சிறந்தவராக இருப்பதால், அத்தகைய மட்டமான நூல்களுக்கு பலியான துர்பாக்கியசாலிகளிடம் இரக்கம் கொண்டார். ஆகவே கவர்ச்சியுடையதும் எல்லா வகையான பந்தத்திலிருந்து உண்மையாகவே முக்தியளிக்கக் கூடியதுமான தெய்வீக இலக்கியத்தை தொகுக்கும்படி ஸ்ரீ வியாச தேவருக்கு அவர் அறிவுரை கூறினார். ஶ்ரீல வியாசதேவரும் அவரது பிரதிநிதிகளும் விஷயங்களை உள்ளவாறு காணும் சரியான பயிற்சி பெற்றிருப்பதால் அவர்கள் தகுதி வாய்ந்தவர்களாவர். அவர்கள் ஆத்ம ஞானம் பெற்றவர்களாகவும், பக்தித் தொண்டின் காரணத்தால் அவர்களது விரதங்களில் நிலையானவர்களாகவும், பௌதிக செயல்களில் அழுகிக் கொண்டிருக்கும் இழிவடைந்த ஆத்மாக்களை விடுவிப்பதில் உறுதி கொண்டவர்களாகவும் இருப்பதால் அவர்களுடைய சிந்தனை தூயதாக இருக்கிறது. வீழ்ந்த ஆத்மாக்கள் தினந்தோறும் புதுமையான தகவல்களை பெறுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றன. மேலும் வியாச தேவர் அல்லது நாரதரைப் போன்ற ஆன்மீகிகளால் அத்தகைய ஆர்வமுள்ள மக்களுக்கு ஆன்மீக உலகிலிருந்து எல்லையற்ற செய்திகளை வழங்க முடியும். ஜட உலகம் மொத்த படைப்பில் ஒரு பகுதி மட்டுமே என்றும், இந்த பூமியானது மொத்த ஜட உலகில் ஒரு சிறு பகுதி மட்டுமே என்றும் பகவத் கீதை கூறுகிறது

உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான கற்றறிந்த மனிதர்கள் உள்ளனர். அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் போதுமான பல்லாயிரக்கணக்கான நூல்களை எழுதியுள்ளார் துரதிர்ஷ்டவசமாக அவற்றில் எதுவும் பூமியில் அமைதியையும் சாந்தியையும் கொண்டு வரவில்லை அந்நூல்களில் ஆன்மீக விஷயங்கள் இல்லாததே இதற்குக் காரணமாகும். ஜட நாகரிகமானது மனித சக்தியை அழித்துக் கொண்டு இருக்கிறது. மனிதன் ஜட நாகரிகத்தின் சிக்கலில் இருந்து விடுபட்டு, முக்தியடையும் பொருட்டு அவனுக்கு கீதையும், பாகவதமும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. பகவத்கீதை பகவானாலேயே, பேசப்பட்டதும், வியாசதேவரால் பதிவு செய்யப்பட்டதுமாகும். ஸ்ரீமத் பாகவதம் அதே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகமான திருவிளையாடல்களைக் கொண்ட சரித்திரமாகும். இந்நூல்களால் மட்டுமே ஜீவ ராசிகளை துன்பங்களில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு நித்தியமான அமைதி யையும், முக்தியும் வழங்கி அவர்களை திருப்திபடுத்த இயலும் எனவே, ஸ்ரீமத் பாகவதம் பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் உரியதாகும் இது எல்லா வகையான பௌதிக பந்தத்திலிருந்தும் முழுமையாக விடுதலையை பெற்று தருகிறது. வியாசதேவரையும் அவரது உண்மையான பிரதிநிதிகளையும் போன்ற முக்தி பெற்ற ஆத்மாக்களால் மட்டுமே பகவானின் திருவிளையாடல்களைக் கொண்ட இத்தகைய தெய்வீகமான சரித்திரங்களை விவரிக்க முடியும். இவர்கள் பகவானின் உன்னத அன்புத் தொண்டில் முழுமையாக ஆழ்ந்துள்ளனர், இத்தகைய பக்தர்களுக்கு மட்டுமே, அவர்களது பக்தித் தொண்டின் வலிமையால் பகவானுடைய திருவிளையாடல்களும் அவற்றின் தெய்வீகத் தன்மையும் தானாகவே புலப்படுகின்றன. வேறு யாராலும் பகவானின் லீலைகளை அறியவோ அல்லது விளக்கவோ முடியாது பாகவதத்திலுள்ள விவரங்கள் மிகவும் நுணுக்கமாகவும், சரியாகவும் உள்ளன. மிகச் சிறந்த இந்நூலில் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முன்னறிவிக்கப்பட்டவை அனைத்தும் இப்போது அப்படியே நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. ஆகவே, வியாச தேவரைப் போன்ற முக்தி பெற்ற ஆன்மாக்கள் தொலைநோக்கு மற்றும் ஞானம் ஆகிய சக்திகளில் மட்டுமல்லாமல் செவி சாய்ப்பதிலும், சிந்தனை செய்வதிலும் உணர்ந்தறிவதிலும் பூரணத்துவம் பெற்றவர்களாவர். முக்தி பெற்ற ஒருவர் பக்குவமான புலன்களைப் பெற்றுள்ளார். அத்தகைய புலன்களால் மட்டுமே ரிஷிகேசர் எனப்படும் புலன்களின் அதிபதியும், பரம புருஷருமாகிய பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு ஒருவரால் தொண்டு செய்ய முடியும். ஆகவே ஸ்ரீமத் பாகவதமானது, வேதங்களைத் தொகுத்தவரான சர்வ-பூரணத்துவம் பெற்ற ஶ்ரீல வியாசதேவரால் இயற்றப்பட்ட சர்வ பூரணமான பரமபுருஷ பகவானைப் பற்றிய பரிபூரணமான விளக்கமாகும்.

( ஶ்ரீமத் பாகவதம் 1.5.13 / பொருளுரை )


 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more