பகவான் நாம ஜபத்திற்கு எதிரான
குற்றங்கள்
சதாம் நிந்தா நாம்ன : பரமம்
அபராதம் விதனுதே
யத: க்யாதிம் யாதம் கம் உ சஹதே தத்விகரிஹாம்
சிவஸ்ய சிறீவிஷ்ணோர் ய இஹ நாமாதி சகலம்
தீயா பின்னம் பஸ்யேத் ச கலௌ ஹரிநாமாஹிதகர
குரோர் அவஞா ஸ்ருதி சாஸ்திர நிந்தனம்
ததார்த வாதோ ஹரி நாம்னி கல்பனம்
நாம்னோ பலாத் யஸ்ய ஹிபாப புத்திர்
ந வித்யதே தஷ்ய யமை : ஹி சுத்தி :
தர்மவ்ரத த்யாக ஹுதாதி சர்வ
சுபகிரியா சாம்யம் அபி பிரமாது:
அஸ்ரத்த தானே விமுகே அபி அஸ்ருண்வதி
சிருத்வாபி நாம் மஹாத்ம்யம்
ய: பிரீதி ரஹிதே தாம:
அஹம் மாமாதி பரமோ
நாம்னி சோ அபி அபராதகிறுத்
1.பகவானின் புனித நாமத்தை பரப்ப தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள பக்தர்களை நிந்திப்பது குற்றம்
2..பிரம்மா, சிவன் போன்ற தேவர்களின் நாமங்களை விஷ்ணுவின் நாமத்திற்கு சமமாகவோ, தன்னிச்சையானவை என்றோ கருதுவது குற்றம்.
3.ஆன்மீக குருவின் கட்டளையை மீறுவதும், அவரை ஒரு சாதாரண மனிதராக நினைப்பதும் குற்றம்.
4.வேத இலக்கியங்களையும், வேத வழிவந்த நூல்களையும் நிந்திப்பது குற்றம்.
5.ஹரே க்ருஷ்ண மகாமந்திரத்தை கற்பனையானது என்று கருதுவது குற்றம்.
6.புனித நாமத்திற்கு பெளதிகமான வியாக்யானம் கொடுப்பது குற்றம்.
7.பகவானின் புனித நாமத்தின் பெயரால் பாவ காரியங்கள் செய்வது குற்றம்.
8.வேதத்தில் கர்ம காண்ட பகுதியில், செயல்களுக்கு பலனை கொடுக்கும் சடங்குகளுக்கு ஈடாக திவ்ய நாமத்தை கருதுவது குற்றம்.
9.நம்பிக்கையில்லாத நபர்களுக்கு பகவானின் புனித நாமத்தை எடுத்து சொல்வது குற்றம்.
10.பெளதிக பந்தத்தின் காரணமாக புனித நாமத்தின் மகிமையை அறிந்தும் பூர்ண நம்பிக்கை இல்லாமல் இருப்பதும், பகவான் நாமத்தை கவன குறைவாக உச்சரிப்பதும் குற்றமாகும்.
தன்னை வைஷ்ணவன் என்று கூறிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இவவெல்லா குற்றங்களையும் தவிர்த்து க்ருஷ்ணப் பிரேம நிலையை அடைய முயற்சிக்க வேண்டும்.
வாஞ்சா-கல்பதருப்யஸ்ய’ச க்ருபா-சிந்துப்ய ஏவ ச
பதிதானாம் பாவனேப்யோ வைஷ்ணவேப்யோ நமோ நம :
Comments
Post a Comment