ஸ்ரீ துளசி ஸ்தோத்திரம்
விருந்தாயை துளசி-தேவ்யை
ப்ரியாயை கேசவஸ்ய ச
க்ருஷ்ண-பக்தி-ப்ரதே தேவி
சத்ய வத்யய் நமோ நம:
பகவான் கேசவரின் அன்புக்கு பாத்திரமான ஸ்ரீமதி துளசி தேவிக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள், பகவான் க்ருஷ்ணருக்கு பக்தித் தொண்டை வாரி வழங்கி, மிக உயர்ந்த உண்மையின் உறைவிடமாய் இருக்கிறீர்கள்
ஸ்ரீ துளசி கீர்த்தனை
பதம் 1
நமோ நம:
துளசி க்ருஷ்ண-ப்ரேயஸி
ராதா-க்ருஷ்ண-ஸேவா பாபோ ஏய அபிலாஷி
பதம் 2
ஜே தோமார சரண லோய் தார வாஞ்சா பூர்ண ஹோய்
க்ருபா கோரி கோரோ தாரே ப்ருந்தாவன-பாஸி
பதம் 3
மோர் ஏய் அபிலாஸ் பிலாஸ் குஞ்சே தியோ வாஸ்
நயனே ஹேரிபோ சதா ஜுகல-ரூப-ராஸி
பதம் 4
ஏ நிவேதன தரோ ஸக்கீர் அனுகத கோரோ
ஸேவா-அதிகார தியே கோரோ நிஜ தாஸி
பதம் 5
தின க்ருஷ்ண-தாஸே ஹோய் ஏ ஜென மோர ஹோய்
ஸ்ரீ-ராதா-கோவிந்த-ப்ரேமே ஸதா ஜேன பாஸி
1.க்ருஷ்ணருக்கு பிரியமான துளசி தேவியே, மீண்டும் மீண்டும் உங்கள் முன்னால் நான் வணங்குகிறேன், ஸ்ரீராதா க்ருஷ்ணரின் சேவையை பெறுவதே எனது விருப்பமாகும்.
2.உங்களிடம் தஞ்சமடையும் அனைவரது விருப்பங்களும் நிறைவேற்றப்படுகின்றன, உங்களது கருணையை அவர்கள் மேல் பொழிந்து, விருந்தாவன வாசியாக மாற்றுகிறீர்கள்
3.இன்பம் கொழிக்கும் விருந்தாவனதாமில் எனக்கு இடமளிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும், இவ்வாறு என் மனக்கண்ணில் ராதா க்ருஷ்ணரின் அழகிய லீலைகளை எப்பொழுதும் நான் காண்பேன்.
4.விருந்தாவனத்தில் பசுக்களை மேய்க்கும் இடைச்சிறுவர்களில் ஒருவனாக என்னை ஆக்குங்கள், பக்தி சேவையில் என்னை ஈடுபடுத்தி, உங்களது சேவகனாக என்னை மாற்றுங்கள்.
5.இந்த தாழ்ந்த க்ருஷ்ண சேவகனை எப்போதும் ஸ்ரீ ராதா கோவிந்தனுடைய பிரேம சாகரத்தில் நீந்தச் செய்யும்படி உங்களை வேண்டுகிறேன்.
ஸ்ரீ துளசி பிரதக்ஷிண மந்திரம்
யானி கானி ச பாபானி
ப்ரஹ்ம-ஹத்யாதிகானி ச
தானி தானி ப்ரணஸ்யந்தி
ப்ரதக்ஷிண பதே பதே
துளசி தேவியை வலம் வரும் ஒவ்வொரு அடியும் அனைத்து வகையான பாவங்களையும் அழித்து விடுகிறது. பிரமணரை கொல்லும் பாவம் உட்பட இதில் அடங்கும்.
Comments
Post a Comment