ஶ்ரீ ஶ்ரீ சோராஷ்டகம்
வழங்கியவர் :- பில்வமங்கள டாகுர்
பதம் 1
வ்ரஜே ப்ரசித்தம் நவநீத சோரம்
கோபாங்கனானாம் ச துகூல சௌரம்
அனேக ஜன்மார்ஜித பாப சௌரம்
சௌராக்ரகண்யம் புருஷம் நமாமி
மொழிபெயர்ப்பு
விருந்தாவனத்தில் வெண்ணை திருடுவதில் பிரசித்தி பெற்றவரும்,
கோபியர்களின் ஆடைகளை திருடியவரும், தன்னிடம் சரணடைந்த பக்தர்களின் பல கோடி வருடங்களாக சேர்த்து வைத்திருந்த பாவங்களைத் திருடுபவரும், திருடர்களில் எல்லாம் முதன்மையான திருடனுமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.
பதம் 2
ஸ்ரீராதிகாயா ஹ்ருதயஸ்ய சௌரம்
நவாம்புத ஷ்யாமல காந்தி சௌரம்
பதாஸ்ரீதானாம் ச சமஸ்த சௌரம்
சௌராக்ரகண்யம் புருஷம் நமாமி
மொழிபெயர்ப்பு
ஸ்ரீமதி ராதாராணியின் இதயத்தைத் திருடியவரும், புத்தம் புதிய இருண்ட மழை மேகத்தின் காந்தியைத் திருடியவரும், தமது தாமரைப் பாதத்தில் சரண் அடைந்தவர்களின் பாவங்களையும் துன்பங்களையும் திருடும் திருடர்கள் எல்லாம் முதன்மையான திருடரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு எனது மரியாதை கலந்த வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.
பதம் 3
அகிஞ்சனீ க்ருத்ய பதாஷ்ரிதம் யஹ்
கரோதி பிக்ஷம் பதி கேஹ ஹீனம்
கேனாப்ய் அஹோ பீஷண சௌர இத்ருக்
த்ருஷ்டஹ் ஸ்ருதோ வா ந ஜகத் த்ரயே (அ)பி
மொழிபெயர்ப்பு
அவர் தன்னிடம் சரண் அடைந்த பக்தர்களை வறுமையில் வாட்டி வசிக்க இருப்பிடம் அற்று அங்குமிங்கும் அலைந்து திரியும் பிச்சைக்காரர்களாகவும் மாற்றுகிறார்.... ஐயகோ !!! இது போன்ற பயங்கரமான ஒரு திருடனை மூவுலகங்களிலும் நான் பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை.
பதம் 4
யதீய நாமாபி ஹரத்ய் அசேஷம்
கிரி ப்ரசாரான் அபி பாப ராசீன்
ஆஸ்சர்ய ரூபோ நனு சௌர இத்ருக்
த்ருஷ்டஹ் ஸ்ருதோ வா ந மயா கதாபி
மொழிபெயர்ப்பு
அவருடைய (கிருஷ்ணருடைய) பெயரை உச்சரிப்பது மலையளவு பெரும் பாவத்தை
தூய்மை ஆக்குகின்றது. இதுபோன்ற வியக்கத்தக்க அற்புதமான ஒரு திருடனை நான் எங்கும் பார்த்ததும் இல்லை,
கேள்விப்பட்டதும் இல்லை.
பதம் 5
தனம் ச மானம் சத் தேந்த்ரியாணி
ப்ராணாம்ஸ் மம சர்வம் ஏவ
பலாயஸே குத்ர த்ருடோ (அ)த்ய சௌர
த்வம் பக்தி தாம்நாசி மயா நிருத்தஹ்
மொழிபெயர்ப்பு
ஓ
திருடனே!!! என்னுடைய செல்வம், என்னுடைய மரியாதை,
என்னுடைய புலன்கள் (உணர்வுகள்), என்னுடைய வாழ்க்கை....என எல்லாவற்றையும் திருடிவிட்டு உங்களால்
எங்கு ஓட முடியும்??
உங்களை என் பக்தி எனும் கயிற்றினால் நான் பிடித்து விட்டேன்....
பதம் 6
சினத்சி கோரம் பய பாச பந்தம்
பினத்சி பீமம் பவ பாச பந்தம்
சினத்சி சர்வஸ்ய சமஸ்த பந்தம்
நைவாத்மனோ பக்த க்ருதம் பந்தம்
மொழிபெயர்ப்பு
யம ராஜனின் பயங்கரமான கர்ஜனையை (யம பயத்தை) வெட்டி விடுகின்றீர்கள். மாயையின் பயங்கரத்தை துண்டித்து
விடுகின்றீர்கள். அனைவரின் பௌதிக பற்றுதலை
குறைத்து விடுகின்றீர்கள்.....ஆனால் பாசத்திற்குரிய உங்களது பக்தர்களால் கட்டப்பட்ட அன்பு என்னும் முடிச்சை உங்களால் வெட்ட முடியவில்லை.
பதம் 7
மன் மானசே தாமச ராசி கோரே
காராக்ருஹே துஹ்க மயே நிபத்தஹ்
லபஸ்வ ஹே சௌர! ஹரே சிராய
ஸ்வ சௌர்ய தோஷோசிதம் ஏவ தண்டம்
மொழிபெயர்ப்பு
என்னிடம் உள்ள எல்லாவற்றையும் திருடிய ஓ திருடனே!!!!
என்னுடைய அறியாமை எனும் பயங்கரமான இருளில் பயந்து போன பரிதாபமான என் இதயமெனும் சிறைச்சாலையில் இன்று உங்களைக் கைதியாக அடைத்து விட்டேன்.....மிக நீண்டகாலம் அங்கேயே இருங்கள்..... இதுவே நீங்கள் செய்த அனைத்து திருட்டுக் குற்றங்களுக்கு தகுந்த தண்டனை ஆகும்.
பதம் 8
காராக்ருஹே வச சதா ஹ்ருதயே மதீயே
மத் பக்தி பாச த்ருட பந்தன நிஸ்சலஹ் சன்
த்வாம் க்ருஷ்ண ஹே ப்ரலய கோடி சதாந்தரே (அ)பி
சர்வஸ்வ சௌர ஹ்ருதயான் ந ஹி மோசயாமி
மொழிபெயர்ப்பு
ஓ ஸ்ரீ கிருஷ்ண பகவானே!!! என் எல்லாவற்றையும் திருடியவரே!! என் பக்தியின் வலிமையால் எப்போதும் என் இதயம் இறுக்கமாகவே இருக்கட்டும்... நீங்கள் தொடர்ந்து என் இதயமெனும் சிறைச்சாலையிலேயே வாசம் புரிவீர்களாக... பல கோடான கோடி யுகங்களானாலும் என் இதயத்தில் இருந்து
நான் உங்களை விடுவிக்கப் போவதில்லை.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment