கிருஷ்ண உணர்விலுள்ள பக்தர்கள், உணவை கிருஷ்ணருக்குப் படைத்தபின் உட்கொள்கின்றனர். இஃது உடலை ஆன்மீகத்தில் வளப்படுத்துகின்றது. இத்தகு செயலால், உடலின் பழைய பாவ விளைவுகள் அழிவது மட்டுமின்றி, ஜட இயற்கையின் எல்லாக் களங்கங்களிலிருந்தும் பூரண பாதுகாப்பு ஏற்படுகிறது. தொற்று வியாதி வேகமாக பரவும் போது, தடுப்பு மருந்து உட்கொள்வதால் ஒருவன் அதன் தாக்கத்திலிருந்து தப்ப முடிகிறது. அதுபோலவே பகவான் விஷ்ணுவிற்கு அர்ப்பணம் செய்த உணவை நாம் உட்கொள்ளும் போது ஜட பாதிப்பை எதிர்ப்பதற்குத் தேவையான சக்தி கிடைக்கிறது. இதைப் பின்பற்றுபவர்கள் இறைவனின் பக்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். எனவே, கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட உணவை மட்டுமே உண்ணும் கிருஷ்ண பக்தர், ஆன்மீகத் தன்னுணர்வின் முன்னேற்றப் பாதையில் தடங்கல்களாக உள்ள (முந்தைய) ஜட பாதிப்புகளை வெற்றிகொள்ள முடியும். மறு பக்கத்தில், இவ்வாறு செய்யாதவன் தனது பாவச் செயல்களின் அளவை அதிகரித்துக் கொண்டே சென்று, இவற்றின் விளைவுகளை அனுபவிப்பதற்காக நாய், பன்றி போன்ற உடல்களை மறுபிறவியில் அடைகின்றான். இப்பௌதிக உலகம் முழுக்க முழுக்க களங்கங்கள் நிறைந்தது. பகவான் விஷ்ணுவின் பிரசாத்தை உட்கொண்டு எதிர்ப்பு சக்தியை வளர்த்தவர், இதன் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறார். இம்முறையைப் பின்பற்றாதவரோ களங்கங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்.
ஶ்ரீல பிரபுபாதர்./பொருளுரை/பகவத் கீதை உண்மையுருவில் / அத்தியாயம் மூன்று/பதம் 14
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment