உலக மக்கள் அளவுக்கதிகமான பௌதிகச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோபத்தைத் தூண்டும் மிகச்சிறிய சம்பவம் நிகழ்ந்தாலும், ஒருவன் மற்றொருவனைத் தாக்குகிறான். ஒரு நாடு மற்றொரு நாட்டைத் தாக்குகிறது. இதில் அதிசயம் ஒன்றுமில்லை. இதுவே தொல்லைகள் நிறைந்த இக்கலி யுகத்தின் சட்டமாகும். எல்லா வகையான இழிவான செயல்களாலும் சூழ்நிலை ஏற்கனவே கெட்டுவிட்ட நிலையில் இருக்கிறது. இதை எல்லோரும் நன்கறிவர். புலன் இன்பத்திற்குரிய பௌதிக கருத்துக்கள் நிரம்பிய தேவையற்ற இலக்கியங்கள் பல உள்ளன. பல நாடுகளில், ஒழுக்கக்கேடான இலக்கியங்களைக் கண்டுபிடித்து அவற்றைத் தடை செய்வதற்காக அரசாங்கத்தால் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசாங்கமோ, பொதுமக்களின் தலைவர்களோ இத்தகைய இலக்கியங்களை விரும்பவில்லை என்பதையே இது குறிக்கிறது. இருப்பினும் புலன் இன்பத்திற்காக மக்கள் அவற்றை விரும்புவதால் அவை கடைத்தெருவில் விற்கப்படுகின்றன. பொதுமக்கள் எதையாவது படிக்க விரும்புகின்றனர் (அது ஒரு இயற்கையான சுபாவமாகும்). ஆனால் அவர்களுடைய மனங்கள் அசுத்தமாக இருப்பதால், அவர்கள் நூல்களைப் படிக்க விரும்புகின்றனர். இத்தகைய சூழ்நிலைகளில், ஸ்ரீமத் பாகவதத்தைப் போன்றதொரு உன்னத இலக்கியம் பொதுமக்களுடைய நேர்மையற்ற செயல்களைக் குறைத்துவிடும். அத்துடன் விறுவிறுப்பான நூல்களைப் படிக்க வேண்டுமென்ற அவர்களது எண்ணத்திற்கு உணவாகவும் இது விளங்கும். ஆரம்பத்தில் அதை அவர்கள் விரும்பமாட்டார்கள். ஏனெனில், மஞ்சள் காமாலையால் துன்பப்படுபவன் கற்கண்டை சாப்பிடத் தயங்குகிறான். ஆனால் மஞ்சள் காமாலையைப் போக்கும் ஒரே மருந்து கற்கண்டுதான் என்பதை நாம் அறிய வேண்டும். அதைப் போலவே, பகவத் கீதையையும், ஸ்ரீமத் பாகவதத்தையும் படிப்பதை பொதுமக்கள் விரும்புபடிச் செய்வதற்கான முறையான பிரசாரம் செயற்படுத்தப்பட வேண்டும். இது மஞ்சள் காமாலையைப் போன்ற புலனின்பம் என்ற நோய்க்கு, கற்கண்டைப் போல் அருமருந்தாக செயற்படும். மக்களுக்கு இந்த இலக்கியத்தில் ஒரு சுவை ஏற்பட்டுவிட்டால், சமூகத்திற்கு விஷத்தை அளிக்கும் மற்ற நூல்கள் தானாகவே மறைந்துவிடும்.
( ஶ்ரீல பிரபுபாதர் / பொருளுரை / ஶ்ரீமத்பாகவதம் 1.5.11)
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment