சைதன்ய மகாபிரபு ரூப கோஸ்வாமியிடம் கூறினார்.
“ப்ரஹ்மானந்த ப்ரமிதே கோன பாக்யவான் ஜீவ
குரு-க்ருஷ்ண-ப்ரஸாதே பாய பக்தி-லதா-பீஜ.”
எல்லா உயிர்வாழிகளும் தத்தமது கர்மத்தின் அடிப்படையில் பிரபஞ்சம் முழுவதும் திரிந்து கொண்டுள்ளனர். அவர்களில் சிலர் மேல் உலகங்களுக்கு உயர்த்தப்படுகின்றனர், சிலர் கீழ் உலகங்களுக்கு செல்கின்றனர் அவ்வாறு அலையக்கூடிய கோடிக்கணக்கான ஜீவன்களில், எவனொருவன் மிகவும் பாக்கியசாலியாக உள்ளானோ அவன் கிருஷ்ணரின் கருணையினால் உண்மையான ஆன்மிக குருவுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பினை பெறுகிறான். கிருஷ்ணர், ஆன்மீக குரு ஆகிய இருவரின் கருணையினால் அவன் பக்தி தொண்டு என்னும் கொடியின் விதையினை பெறுகிறான்.(ஸ்லோகம் 151)
பக்தித் தொண்டின் விதையினை பெறுபவன், அதனை தனது இதயத்தில் விதைத்து ஒரு தோட்டக்காரனாகி அதனை முறையாக கவனித்துக் கொள்ள வேண்டும் ஸ்ரவணம் (கிருஷ்ணரை பற்றி செய்திகளை பனிவுடன் கேட்டல்) மற்றும் கீர்த்தனத்தின் மூலமாக அவன் படிப்படியாக அந்த விதைக்கு நீர் ஊற்றினால் விதையானது முளைக்கத் தொடங்கும்.(ஸ்லோகம் 152)
பக்தி லதா பீஜத்திற்கு நீரூற்று கையில் அந்த விதை முளைத்து, கொடியாகி படிப்படியாக வளர்ந்து பிரபஞ்சத்தின் அடுக்குகளை ஊடுருவி சென்று ஆன்மீக உலகத்திற்கும் பௌதிக உலகத்திற்கும் இடையிலுள்ள விரஜா நதியினை கடந்து செல்கிறது. அது பிரம்ம ஜோதி இருக்கக்கூடிய பிரம்மலோகத்தினை அடைகிறது அந்த மண்டலத்தையும் ஊடுருவிச் சென்று அஃது ஆன்மீக வானத்தையும் ஆன்மீக லோகமான கோலோக விருந்தாவனத்தையும் அடைகிறது.(ஸ்லோகம் 153)
இதயத்தில் நிலைபெற்று ஸ்ரவண கீர்த்தத்தினால் நீரூற்றப்படும் பக்தி கொடியானது மேன்மேலும் வளர்ந்து ஆன்மீக வானில் மிக உயர்ந்த பகுதியான கோலோக விருந்தாவனத்தை அடைகிறது. கிருஷ்ணர் நித்தியமாக வீற்றுள்ள அந்த லோகத்தில், அந்த பக்தி கொடி கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகள் என்னும் கற்பக மரத்திடம் புகலிடம் பெறுகிறது(ஸ்லோகம் 154)
(ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.151 முதல் 19.154
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
Comments
Post a Comment