கீதா மஹாத்மியம்
மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர்
ஶ்ரீமத் பகவத் கீதை ஆறாம் அத்தியாயத்தின் மஹிமை
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம்.
ஶ்ரீமத் பகவத் கீதை ஆறாம் அத்தியாயத்தின் மஹிமை
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
பத்ம புராணத்திலிருந்து - பகவத் கீதை அத்தியாயம் 6 பற்றிய வர்ணனை
பகவான் விஷ்ணு கூறினார், "இப்போது நான் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஆறாம் அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி கூறப்போகிறேன். யாரொருவர் இந்த விளக்கத்தை கேட்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக பௌதிக களங்கங்களிலிருந்து விடுதலை அடைவார்கள்".
கோதாவரி நதிக்கரையில் பிரதிஸ்தான்பூர் என்ற ஊர் உள்ளது. அங்கு நான் பிப்பாலிஷ் என்று அழைக்கப்படுகிறேன். அந்த ஊரின் அரசர் பெயர் ஜானஸ்ருதி; அவர் மிகவும் நர்குணங்கள் படைத்தவர். ஆகையால் மக்கள் அனைவருக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அவர் நாள்தோறும் பிரமாண்டமான யாகங்களை செய்வார். எவ்வளவு பிரமாண்டம் என்றால் யாககுண்டத்திலிருந்து எழும் புகையானது, தேவலோகத்தின் நந்தவனத்திலுள்ள கல்பவிருக்ஷ மரங்களை மூடி கறுப்பாக்கும். பார்ப்பதற்கு அந்த மரங்கள் மன்னர் ஜானஸ்ருதிக்கு மரியாதை செலுத்துவது போல் இருக்கும். மன்னர் ஜானஸ்ருதி இவ்வளவு புண்ணிய காரியங்களை செய்வதால் தேவர்கள் நித்தியமாக பிரதிஸ்தன்ப்பூரில் வசித்தனர்.
மன்னர் ஜானஸ்ருதி தானம் வழங்கும்போது, மேகங்கள் மழையினை வழங்குவது போல் பாரபட்சமில்லாமல் தாராளமாக வழங்குவார். இவரது புனியத்தின் பயனால் மாதம் மும்மாரி மழை பொழிந்தது. அவரது ஊரிலுள்ள வயல்வெளிகள் எப்போதும் விதவிதமான பயிர்களால் நிரம்பியிருந்தது. இந்த பயிர்களை எலி போன்ற கொறிக்கும் பிராணிகள் ஒருபோதும் நாசப்படுத்தியதில்லை. அவர் ஏரிகள், குட்டைகள், மாற்றும் கிணறுகள் வெட்டி மக்களுக்கு பயன்படும்படி செய்தார். ஜானஸ்ருதியின் இத்தகு செயல்களால் திருப்தியடைந்த தேவர்கள்அன்னப்பறவையின் வடிவில் அவரது அரண்மனைக்கு சென்று வாழ்த்த முடிவெடுத்தனர். அரண்மனைக்கு ஒன்றன் பின் ஒன்னாக அன்னப்பறவைகள் பறந்து சென்றுகொண்டிருந்தன. அப்போது பாத்ராஷவா என்ற அன்னப்பறவை வேறு இரண்டு அன்னப்பறவைகளுடன் அனைவருக்கும் முன்னால் பறந்து சென்றுகொண்டிருந்தது. இதை பார்த்த மற்ற பறவைகள், "மன்னர் ஜானஸ்ருதி தான் நினைத்தமாத்திரத்தில் எதிரிகளை பஸ்பமாக்க கூடியவர். அவரை சந்திக்க தாம் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்?" என்று வினவினார். இதை கேட்ட பாத்ராஷவா, மிகவும் பலமாக சிரித்துக்கொண்டே, "ஓஹோ, மன்னர் ஜானஸ்ருதி ரிஷி ரைக்கவாவை விட சக்தி வாய்ந்தவரா?" என்று திருப்பி கேட்டது.
அரண்மனை முற்றத்தில் நின்றுகொண்டு அன்னப்பறவைகளின் உரையாடல்களை கேட்டுக்கொண்டிருந்த மன்னர், கிழே தர்பாருக்கு வந்து மகிழ்ச்சியாக தன் சிம்மாசனத்தில் அமர்ந்தார். பின்னர் தன் ரத சாரதியை அழைத்து ரிஷி ரைக்கவாவை தேடி கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டார். மஹா என்ற பெயருடைய அந்த ரத சாரதியும் மன்னரின் ஆணையை மகிழ்ச்சியாக ஏற்று ரிஷியை தேடி புறப்பட்டார். முதலில், மக்களை காக்கும் பகவான் விஸ்வநாதர் குடியிருக்கும் கஷிபுரிக்கு சென்றார்; பின்னர் அணைத்து ஜீவாத்மாக்களையும் பிறப்பு இறப்பு சக்கரத்திலிருந்து விடுவிக்கும் தாமரை கண்ணனான பகவான் கதாதரர் குடியிருக்கும் கயாவிற்கு சென்றார். இவ்வாறு பல புனிதஸ்தலங்களுக்கு மஹரிஷியை தேடி சென்றார். இறுதியாக முழு முதல் கடவுளான பகவான் கிருஷ்ணர் வசிக்கும் மதுராவிற்கு வந்தார். மதுரா என்ற இந்த புனித ஸ்தலம் அணைத்து பாவங்களையும் போக்கக்கூடியதாகும். பல சாதுக்கள், முனிவர்கள், ரிஷிகள், வேதங்கள் மாற்றும் சாஸ்திரங்கள் இங்கு கடும் தவம் புரிந்து பகவானுக்கு நித்தியமாக சேவை செய்துகொண்டிருப்பார்கள். பிறைநிலாவை போல காட்சியளிக்கும் மதுரா, பக்தியை வாரி வழங்கும் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ள மிளிரும் கல்லை போல் மதுராவில் கோவர்தன மலை மிளிர்கிறது. கோவர்தன மலை மரம் மற்றும் செடி கொடிகளால் கவரப்பட்டுள்ளது. மதுராவை சுற்றி பன்னிரண்டு அற்புதமான வனங்கள் உள்ளன. இந்த காடுகள் அனைத்திலும் பகவான் கிருஷ்ணர் தனது அற்புதமான லீலைகளை அரங்கேற்றுகிறார்.
மதுரையிலிருந்து புறப்பட்ட சாரதி மஹா, மேற்கு மற்றும் வடக்கு நோக்கி பயணத்தை தொடர்ந்தார். ஒரு நாள் காஷ்மீர் என்னும் இடத்திற்கு வந்தார். அங்கு ஒரு இடம் மிகவும் அழகாக இருந்தது. அந்த இடத்தில் இருந்த முட்டாளும் கூட தேவர்களை போல் காட்சியளித்தனர். ஏனெனில் அங்கு யாகங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தது. சிவபெருமான் அந்த இடத்தில் மணிக்கேஸ்வரர் என்ற பெயரில் அங்கு குடியிருந்தார்.
காஷ்மீரின் அரசர், போரில் பங்குபெற்று பல அரசர்களை தோற்கடித்த பின்னர், தன் ஊருக்கு திரும்பிவந்து சிவபெருமானை வணங்கினார். சிவபெருமான் மீது கொண்ட அதீத பக்தியால், மன்னரை அனைவரும் மணிக்கேஸ்வர் என்று அழைத்தனர். அந்த ஆலயத்தின் கதவருகில், ஒரு மரத்தடியில் ஒரு ரிஷியை பார்த்தார் சாரதி மஹா. மன்னர் ஜானஸ்ருதி கூறிய அடையாளங்களை வைத்து பார்த்தல் இவர் தான் ரிஷி ரைக்கவா என்று புரிந்து கொண்டார் மஹா. உடனடியாக அவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார். பின்னர் அவரிடம், "ரிஷியே, தாங்கள் எங்கு தங்குகிறீர்கள்? தங்களின் முழு பெயர் என்ன? இவ்வளவு பெரிய மஹரிஷியான தாங்கள் என் இவ்வாறு மரத்தடியில் அமர்ந்திருக்கிறீர்கள்?"என்று கேட்டார். மஹாவின் கேள்விகளை கேட்ட ரிஷி, "நான் முழுமையாக திருப்தியடைந்துள்ளேன். எனக்கு எதுவும் தேவையில்லை" என்று பதிலளித்தார்.
இந்த பதிலை புரிந்து கொண்ட மஹா, ப்ரதீஷ்தான்ப்பூருக்கு திரும்பினார். உடனடியாக மன்னரை பார்த்து வணங்கி விட்டு நடந்தவற்றை கூறினார். மஹா கூறியவற்றை கேட்ட மன்னர் ஜானஸ்ருதி உடனடியாக காஷ்மீருக்கு சென்று ரிஷியை சந்திக்க தயாரானார். தன்னுடன் பல விலைமதிப்பற்ற ஆபரணங்களையும் பரிசு பொருட்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார். க்ஷிமிரிலுள்ள அந்த ஆலயத்தில் ரிஷியை பார்த்தவுடன் அவரின் பாதங்களில் விழுந்து வணங்கினார் மன்னர். அதோடல்லாமல் தான் கொண்டுவந்திருந்த அணைத்து பரிசு பொருட்களையும் அவரின் முன் வைத்தார். இதை கண்டதும் மிகவும் கோபம் கொண்ட ரிஷி ரைக்கவா, "முட்டாள் மன்னனே, இந்த பயனற்ற பொருட்களை எடுத்துக்கொண்டு உடனடியாக இங்கிருந்து சென்று விடு" என்று கூறினார். இதை கண்டு அதிர்ந்த மன்னர் உடனடியாக ரிஷியின் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டி தன் மீது கருணை காண்பிக்கும்படி கெஞ்சினார். மேலும் அவர், ரிஷியிடம், "மகரிஷியே, தாம் எவ்வாறு இவ்வளவு தூய்மையடைந்தீர்கள்? எவ்வாறு பகவானின் பக்தி தொண்டினை பெற்றீர்கள்? என்று கேட்டார்.
மன்னரின் பணிவினை கண்டு மனமுறுகிய ரிஷி, "தினமும் நான் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஆறாம் அத்தியாயத்தை வாசிக்கிறேன்" என்று பதிலளித்ததோடல்லாமல், மன்னர் ஜானஸ்ருதிக்கும் அதை கற்பித்தார். தன் நாட்டிற்கு திரும்பி வந்த மன்னர் தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஆறாம் அத்தியாயத்தை படித்து வந்தார். அவர் இறந்ததும், புஸ்பக விமானத்தில் வைகுந்தத்திற்கு சென்றார். அதே போல் ரிஷியும் தனது உடலை நீத்த பிறகு, வைகுந்தத்திற்கு சென்று பகவான் கிருஷ்ணரின் தாமரை பாதங்களுக்கு சேவை செய்யும் பாகியத்தை பெற்றார்.
எனவே யாரொருவர் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஆறாம் அத்தியாயத்தை தினமும் படிக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக பகவானின் தாமரை பாதங்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை வைகுந்தத்தில் பெறுவார்கள்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment