ஶ்ரீ ராம லிலா ஸ்ரவணம்


 ஶ்ரீ ராம லிலா ஸ்ரவணம்




பகவான் ஸ்ரீ ராமர்:

பரம புருஷ பகவான் ஸ்ரீ ராமராகத் தோன்றி தமது தூய பக்தரும், அயோத்தியின் அரசருமான தசரத மகாராஜனை தமது தந்தையாக ஏற்றுக் கொண்டார். ஸ்ரீ ராமர் தமது பூரண அம்சங்களுடன் அவதரித்தார். அவரது அம்சங்கள் அனைவரும் அவரது இளைய சகோதரர்களாகத் தோன்றினர். வழக்கம் போல் தர்மத்தைக் காத்து அதர்மத்தை அழிப்பதற்காக, திரேதா யுகத்தின் சித்திரை மாதத்தில், வளர்பிறையின் ஒன்பதாம் நாளன்று பகவான் தோன்றினார். அவர் வாலிபராக இருந்தபொழுது மாமுனிவரான விஸ்வாமித்திரருக்கு உதவும் பொருட்டு சுபாஹு எனும் அரக்கனைக் கொன்றதுடன் முனிவர்களின் அன்றாட கடமைகளுக்கு இடையூறு செய்து வந்த அரக்கியையும் தாக்கினார். பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் ஒத்துழைத்து பொதுமக்களின் நன்மைக்காக செயற்பட வேண்டும். பிராமண முனிவர்கள் பக்குவமான அறிவின் மூலம் மக்களுக்கு ஞானம் புகட்ட முயல்கின்றனர். அத்தகைய முனிவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது க்ஷத்திரியர்களின் கடமையாகும். “ப்ரஹ்மண்ய-தர்மம்” எனப்படும் மனித வர்க்கத்தின் மிகவுயர்ந்த பண்பாட்டைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் ஏற்ற சீரிய அரசராக பகவான் ஸ்ரீ இராமச்சந்திரர் இருந்தார். குறிப்பாக பகவான் பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் பாதுகாப்பு அளித்து உலகின் செழிப்பை மேலும் வளப்படுத்துகிறார். விஸ்வாமித்திரரின் வாயிலாக அசுரர்களை வெல்லக்கூடிய சக்திமிக்க ஆயுதங்களை அவர் நிர்வாகப் பொறுப்பிலுள்ள தேவர்களுக்கு அளித்தார். ஜனக மகாராஜனின் தனுர் யாகத்தில் பங்கேற்ற அவர், வெல்ல முடியாத சிவபெருமானின் வில்லை உடைத்து, ஜனகரின் புதல்வியான சீதாதேவியை மணந்தார்.

திருமணத்திற்குப் பிறகு அவரது தந்தையான தசரத மகாராஜனின் உத்தரவுப்படி அவர் பதினான்கு ஆண்டுகால வனவாசத்தை ஏற்றார். தேவர்களின் நிர்வாகத்திற்கு உதவுவதற்காக அவர் பதினான்காயிரம் அசுரர்களைக் கொன்றார். மேலும் அசுரர்களின் சதியினால், அவரது மனைவியான சீதாதேவி இராவணனால் கடத்திச் செல்லப்பட்டாள். சுக்ரீவனின் சகோதரனான வாலியைக் கொல்ல சுக்ரீவனுக்கு உதவிய பகவான் சுக்ரீவனை தமது நண்பராக்கி கொண்டார். பகவான் ஸ்ரீ ராமரின் உதவியால், சுக்ரீவன் வானர ராஜனானார். சீதையை அபகரித்துச் சென்ற இராவணனின் இராஜ்ஜியமான இலங்காபுரிக்குச் செல்ல இந்தியப் பெருங்கடலில் பாறைகளாலான ஒரு மிதக்கும் பாலத்தை அவர் நிர்மாணித்தார். பிறகு இராவணன் அவரால் கொல்லப்பட்டு, இராவணனின் சகோதரரான விபீஷணர் இலங்கையின் அரியாசனத்தில் அமர்த்தப்பட்டார். அசுரனான இராவணனின் சகோதரர்களில் விபீஷணரும் ஒருவராவார். ஆனால் பகவான் ஸ்ரீ ராமர் அவரை சீரஞ்சிவியாக்கினார். பதினான்கு ஆண்டுகள் கழிந்தபின், இலங்கையின் விவகாரங்களை முடித்துக் கொண்ட பகவான், புஷ்பக விமானத்தில் அவரது இராஜ்ஜியமான அயோத்தித் திரும்பினார். மதுராவை ஆண்டுவந்த லவனாசுரனைக் கொல்லும்படி தமது சகோதரரான சத்ருக்னருக்கு அவர் உத்தரவிட்டார். அவ்வாறே அசுரனும் கொல்லப்பட்டான். பத்து அஸ்வமேத யாகங்களை அவர் நிறைவேற்றினார். பிறகு சரயு நதியில் குளித்துக் கொண்டிருக்கும்பொழுது அவர் மறைந்து போனார். மிகச்சிறந்த இதிகாசமாகிய இராமாயணம், உலகில் ஸ்ரீ ராமர் நிகழ்த்திய வீரச் செயல்களைப் பற்றிய சரித்திரமாகும். மேலும் அதிகாரப்பூர்வமான இராமாயணம் மகாகவி வால்மீகி முனிவரால் எழுதப்பட்டதாகும்.

(ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம் 1.12.19/ பொருளுரை / )

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க


ஆன்மீக கதைகளை படிக்க 👇



Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more