முசுகுந்தர் முக்தி


 முசுகுந்தர் முக்தி


🔆🔆🔆🔆🔆🔆🔆


ஸ்ரீ கிருஷ்ணர் தமது குடும்ப அங்கத்தினர்களை துவாரகை கோட்டைக்குள் பத்திரமாக வைத்தபின் மதுராவிற்குச் சென்றார். சந்திரன் உதித்தாற் போல் அவர் தோன்றினார். ஸ்ரீ கிருஷ்ணரின் பிரகாசமாக ஜொலித்த உடல், பகவானைப் பற்றி நாரதர் விவரித்த வர்ணனை யுடன் ஒத்திருப்பதைக் கண்ட காலயவனன், அவர் பரமபுருஷர் என்பதைப் புரிந்து கொண்டான். பகவான் நிராயுத பாணியாக இருப்பதைக் கண்ட காலயவனன், தன் சொந்த ஆயுதங்களை ஒருபக்கம் வைத்து விட்டு, அவருடன் போரிட விரும்பி பகவானை நோக்கி அவர் பின்னால் ஓடினான். ஸ்ரீ கிருஷ்ணரும் காலயவனனின் முன் அவனது கை கெட்டிய தூரத்தில் ஓடினார். இப்படியே ஒரு மலைக்குகையை நோக்கி ஓடிய பகவான், அவனை நீண்ட தூரம் தம்மை பின்தொடரச் செய்தார் இப்படிப் பின்தொடர்ந்து ஓடிய காலயவனன், பகவானை நோக்கி பழிச் சொற்களை அள்ளி வீசினான். ஆனால் அவனுடைய பாவ கருமங்களின் இருப்பு இன்னும் குறையாததால், பகவானை அவனால் பிடிக்க முடியவில்லை . ஸ்ரீ கிருஷ்ணர் குகைக்குள் பிரவேசித்தார் அவரைப் பின்தொடர்ந்து குகைக்குள் சென்ற அவன், ஒரு மனிதர் தரையில் படுத்திருப்பதைக் கண்டு அவரைக் கிருஷ்ணர் என்றெண்ணி, காலால் உதைத்தான். நீண்ட காலமாக உறங்கிக் கொண்டிருந்த அவர், முரட்டுத்தனமான முறையில் எழுப்பப்பட்டதால், கோபத்துடன் நாற்புறமும் பார்த்து, எதிரில் காலயவனன் நிற்பதைக் கண்டான். அந்த மனிதர் காலயவனனைக் கொடூரமாக முறைத்துப் பார்த்து அவனுடலில் தீ மூளைச் செய்தார். அந்த தீயும் நொடிப் பொழுதில் அவனை எரித்து சாம்பலாக்கியது

அசதாராணமான அம்மனிதர் மாந்தாதாவின் மகனும், முசுகுந்தர் என்ற பெயருடையவருமாவார். பிராமண பண்பாட்டிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவர், எப்பொழுதும் அதற்கேற்ப நடந்து கொண்டார். முன்பு, அசுரர்களிடமிருந்து தேவர்களைக் .காக்க உதவுவதில் பல நீண்ட ஆண்டுகளை அவர் கழித்தார். நாளடைவில் கார்த்திகேயரைத் தங்கள் காவலராகப் பெற்ற தேவர்கள், ஓய்வுபெற முசுகுந்தரை அனுமதித்தனர். மேலும் பகவான் விஷ்ணுவால் மட்டுமே அருளப் படக்கூடிய முக்தியைத் தவிர வேறெந்த வரத்தை வேண்டுமானாலும் கேட்கும்படி அவரை அவர்கள் கேட்டுக் கொண்டனர். முசுகுந்தரரும் உறக்கத்தினால் மூடப்பட்டுவிடும் வரத்தை தேவர்களிடமிருந்து பெற்றார். இவ்வாறாக அன்று முதல் அவர் அக்குகைக்குள் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.

காலயவனன் பலியானதும், ஸ்ரீ கிருஷ்ணர் தம்மை முசுகுந்தருக்குக் காட்டியருளினார். ஸ்ரீ கிருஷ்ணரின் ஒப்பற்ற அழகைக் கண்டு அவர் பேராச்சரியம் அடைந்தார். தன்னைப் பற்றி பகவானிடம் கூறிய முசுகுந்தர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அவர் யார் என்று பின்வருமாறு விசாரித்தார்: "நீண்ட நாட்கள் விழித்திருந்ததால் மிகவும் களைப் படைந்த நான், இங்கு இக்குகையில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அறிமுகமற்ற ஒருவன் எனக்குத் தொல்லை கொடுத்தான். அவரது பாவ விளைவுகளினால் எரித்து சாம்பலாக்கப்பட்டடான். பகவானே, எல்லா எதிரிகளையும் அழிப்பவரே, என்னுடைய பேரதிர்ஷ்டத்தினால் தங்களுடைய அழகிய வடிவத்தைக் காணும் பேறு பெற்றேன்.

பிறகு, தாம் யாரென்பதை முசுகுந்தருக்குக் கூறிய பகவான் அவருக்கு ஒரு வரமளித்தார். பௌதிக வாழ்வின் பயனின்மையைப் புரிந்து கொண்ட விவேகியான முசுகுந்தர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் புகலிடம் ஏற்க அனுமதிக்க வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார்.

இந்த விண்ணப்பத்தினால் மகிழ்ந்த பகவான், முசுகுந்தரிடம் கூறினார், "என் பக்தர்களுக்கு அளிக்கப்படும் பௌதிக வரங்களினால் அவர்கள் ஒருபோதும் வசீகரிப்பப்படுவதில்லை; பக்தரல்லாதவர்களும் தங்கள் இதயங்களில் பௌதிக ஆசைகளை வளர்த்துக் கொள்பவர்களும் மட்டுமே பௌதிக வரங்களில் விருப்பம் கொண்டுள்ளனர். எனது பிரியமுள்ள முசுகுந்தரே, என்னிடம் நிலையான பக்தியை நீர் பெறுவீர். இப்பொழுது, என்னிடம் இடையறாத சரணாகதி அடைந்த நிலையில், இராணுவ வீரராகிய நீர் செய்த கொலைகளால் விளைந்துள்ள பாவங்களைப் போக்கிக்கொள்ள, நீர் தவமியற்ற வேண்டும். உமது அடுத்த பிறவியில் முதல்தர பிராமணராகி என்னை நீர் அடைவீர்" . இவ்வாறாக பகவான் தமது ஆசீர்வாதங்களை முசுகுந்தருக்கு அளித்தார்.

( ஶ்ரீமத் பாகவதம் / காண்டம் 10 / அத்தியாயம் 51 )

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more