கீதா மஹாத்மியம்
மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர்
ஶ்ரீமத் பகவத் கீதை. பதினேழாம் அத்தியாயத்தின் மஹிமை
பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம்.
ஶ்ரீமத் பகவத் கீதை. பதினேழாம் அத்தியாயத்தின் மஹிமை
***************************
பத்ம புராணத்திலிருந்து - ஸ்ரீமத் பகவத் கீதையின் அத்தியாயம் 17 பற்றிய வர்ணனை
சிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, பகவத் கீதையின் பதினாறாம் அத்தியாயத்தின் எல்லையற்ற மகிமைகளை நீ கேட்டறிந்தாய். இப்போது பதினேழாம் அத்தியாயத்தின் மகத்துவத்தை பற்றி கூறப்போகிறேன்".
அரசர் காடபஹூவின் மகனான இளவரசரிடம் துஷசன் என்ற முட்டாள் சேவகன் இருந்தான். அவன் ஒரு முறை இளவரசரிடம் தான் அந்த மத யானை மீது ஏறி சவாரி செய்வதாக சவால் விட்டான். அதன் படியே அவன் யானை மீது ஏறி அமர்ந்தான். அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும், அந்த யானை மிகவும் ஆபத்தானது என்றும் ஆகையால் அவனை கிழே இறங்குமாறும் அவனிடம் வேண்டினர். அனால் துஷசன் அதை பொருட்படுத்தாமல் மிகுந்த உரத்த குரலில் கத்தியும் அங்குசத்தால் பலமாக குத்தியும் யானையை முன்னேறி செல்லுமாறு ஆணையிட்டான். பொறுமை இழந்த யானை, மதம் பிடித்து வேகமாக ஓடிஏ ஆரம்பித்தது. நிலை தடுமாறிய துஷசன், யானையின் மீதிருந்து தறியில் வீழ்ந்தான். கிழே விழுந்த அவனை, யானை தன் காலால் மிதித்து கொன்றது. அதன் பிறகு துஷசன் ஒரு யானையாக சிம்மலதீபின் அரண்மனையில் பிறந்தான். அந்த அரசர், வேறொரு அரசருக்கு அந்த யானையை பரிசாக கொடுத்தார். அதை அவர் ஒரு புலவருக்கு பரிசாக வழங்கினார். அந்த புலவர் மால்வாவின் அரசரிடம் அந்த யானையை நூறு பொற்காசுகளை விற்றார். ஆனால் சிறிது காலத்திலேயே அந்த யானை ஒரு குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டது. ஆகையால் உணவருந்தவும், தண்ணீர் குடிக்கவும் கூட்ஸ் மறுத்தது. யானை பாகன்கள் இந்த செய்தியை உடனே அரசரிடம் தெரிவித்தனர். அரசர் உடனடியாக யானை கொட்டகைக்கு, சிறந்த கால்நடை மருத்துவருடன் சென்றார். அப்போது அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில், யானை பேச துவங்கியது. "அரசே! நீங்கள் மிகவும் புண்ணியம் செய்தவர். அணைத்து வேதங்களையும் அறிந்தவர். பகவான் விஷ்ணுவை எப்போதும் தியானித்து கொண்டிருப்பவர். ஆகையால் இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு ஆத்மாவிற்கு மருத்துவரோ, மருந்துகளோ, தானமோ , தர்மமோ எதுவும் பலனளிக்கப்போவதில்லை என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் உண்மையிலேயே எனக்கு உதவ வேண்டும் என்று எண்ணினால் , தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினேழாம் அத்தியாத்தை படிப்பவரை என் முன் கொண்டு வாருங்கள்" என்றது.
யானையின் வேண்டுகோள் படி, தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினேழாம் அத்தியாயத்தை படிக்கும் ஒரு பெரும் பக்தரை கொண்டு வந்தார். அந்த பக்தர் யானையின் முன்பு நின்று பதினேழாம் அத்தியாயத்தின் ஸ்லோகங்களை உச்சரித்தபடியே, யானையின் மீது தண்ணீர் தெளித்தார். யானை அந்த நொடியே தன் உயிரை விட்டு, பகவான் விஷ்ணுவின் நான்கு கரம் ரூபத்தை அடைந்தது. புஷ்பக விமானம் மூலம் வைகுந்தம் செல்ல தயாராக இருந்த யானையிடம், மால்வாவின் அரசர், அதன் முற்பிறவி பற்றி வினவினார். தான் முற்பிறவியில் துஷசன் ஆக பிறந்து இறந்த கதையை கூறி முடித்த யானை, வைகுந்தம் நோக்கி புறப்பட்டது. சிறந்த மனிதனான மால்வாவின் அரசரும், அன்றிலிருந்து ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினேழாம் அத்தியாயத்தை தினமும் படித்து வந்தார். வெகு விரைவில் அவரும் பஹ்கவானின் திருப்பாதங்களை அடைந்தார்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment