ஸ்ரீ ஸ்ரீ குரு அஷ்டகம்



ஸ்ரீ ஸ்ரீ குரு அஷ்டகம்

(ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகுரர்)

 


பதம் 1

ஸம்சார-தாவாநல-லீட-லோகா

த்ராணாய காருண்ய-கனாகனத்வம்

ப்ராப்தஸ்ய கல்யாண-குணார்ணவஸ்ய

வந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம்

மொழிபெயர்ப்பு

மேகங்கள் எவ்வாறு மழையை பொழிந்து காட்டுத் தீயை அணைக்கின்றதோ அவ்வாறே கருணைக் கடலாகிய ஆன்மீக குருவானவர் பெளதிக விவகாரங்களினால் தகிக்கப்படும் இவ்வுலகை காப்பாற்றுகிறார், மங்கள கரமான குணங்களை உடைய அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்

 

பதம் 2

மஹாப்ரபோ கீர்தன-ந்ருத்ய-கீதா

வாதித்ர-மாத்யன்-மனஸோ ரஸேனா

ரோமாஞ்ச-கம்பா ஸ்ருதரங்க-பாஜோ

வந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம்

 

மொழிபெயர்ப்பு

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஸங்கீர்த்தன இயக்கத்தில் புனித நாமத்தை ஜெபித்து, நடனமாடி, பாடி, இசை கருவிகளை இசைத்து ஆன்மீக குருவானவர் எப்பொழுதும் ஆனந்தமடைகிறார். சில நேரங்கள் மயிர் கூச்செரிந்து, உடல் நடுங்க, கண்களில் நீர் மல்க  தனது தூய பக்தியை வெளிப்படுத்துகிறார், அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.


பதம் 3

ஸ்ரீ-விக்ரஹாராதன-நித்ய-நாநா

ஸ்ருங்கார-தன்-மந்திர-மார்ஜனாதெள

யுக்தஸ்ய பக்தாம்ஸ் நியுஞ்ஜதோ பி

வந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம்

மொழிபெயர்ப்பு

ஆன்மீக குருவானவர் எப்பொழுதும் கோவிலில் ஸ்ரீராதா க்ருஷ்ணரை வழிபட்டு, தனது சிஷ்யர்களையும் இந்த வழிபாட்டில் ஈடுபடுத்துகிறார், அவர்கள் அழகிய ஆடை, நகைகளால் தெய்வங்களை அலங்கரித்து, கோவிலை சுத்தம் செய்து சேவை புரிகிறார்கள், அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.

 

பதம் 4

சதுர்-வித-ஸ்ரீ-பகவத்-ப்ரசாதோ

ஸ்வாத்வ்-அன்ன-த்ருப்தான்-ஹரி-பக்த-சங்கான்

க்ருத்வைவ த்ருப்திம் பஜத சதைவா

வந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம்

மொழிபெயர்ப்பு

நான்கு வகையான அறுசுவை உணவுகளை க்ருஷ்ணருக்கு படைத்து, அந்த பகவத் பிரசாதத்தை சாப்பிடும் பக்தர்களைக் கண்டு தான் திருப்தி அடைகிறார். அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்

  

பதம் 5

ஸ்ரீ-ராதிகா-மாதவயோர் அபாரா

மாதுர்ய-லீலா-குண-ரூப-நாம் நாம்

ப்ரதி-சஷணாஸ்வாதன-லோலுபஸ்ய

வந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம்

 

மொழிபெயர்ப்பு

ஸ்ரீராதா மாதவரின் எல்லையற்ற மாதுர்ய லீலைகளை கேட்டும், நினைத்தும் அவர்களின் நாம, ரூபங்களில் ஆர்வம் கொண்டு, எந்த நொடியிலும் இவைகளை வெளியிட பேராவல் மிக்கவராய் இருக்கிறார் ஆன்மீக குருவானவர். அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.

 

பதம் 6

நிகுஞ்ச-யூனோ ரதி-கேலி-சித்யை

யா-யாலிபிர் யுக்திர் அபேக்ஷணீயா

தத்ராதி-தாக்ஷ்யாத் அதி-வல்லபஸ்ய

வந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம்

மொழிபெயர்ப்பு

விருந்தாவனத்தில் ஸ்ரீராதா க்ருஷ்ணரின் மாதுர்ய லீலைகளுக்கு வெவ்வேறு வகையான ஏற்பாடுகளை செய்யும் கோபிகளுக்கு பொருத்தமான, சிறந்த ஏற்பாடுகளை செய்வதில் அனுபவமிக்கவரான  ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்


பதம் 7

ஸாக்ஷாத்-தரித்வேன சமஸ்த-சாஸ்த்ரைர்

யுக்தஸ் ததா பாவ்யத ஏவ ஜத்பி :

கிந்து ப்ரபோர் ப்ரிய  ஏவ தஸ்ய

வந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம்

மொழிபெயர்ப்பு

குரு என்பவர் உண்மையில் பகவத் ஸ்வரூபமாக ஆராதிக்கப்பட வேண்டியவர். ஏனென்றால் அவர் பகவானுடைய அந்தரங்க தாஸன் என்பதை சாஸ்த்திரங்களும், எல்லா ஆன்மீக அதிகாரிகளும் ஒப்புக் கொள்கிறார்கள், அப்பேர்ப்பட்ட ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.


பதம் 8

யஸ்ய ப்ரஸாதாத் பகவத்-ப்ரஸாதோ

யஸ்யா ப்ரஸாதான் கதி குதோ பி:

த்யாயன் ஸ்துவம்ஸ் தஸ்ய யசஸ் திரி-சந்த்யம்

வந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம்

 

மொழிபெயர்ப்பு

குருவின் கிருபை இல்லாமல் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது. ஆகவே குறைந்தது ஒரு நாளைக்கு மூன்று முறையாவது குருவை நினைத்து அவரை போற்ற வேண்டும், எனது ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்,


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more