அருளியவர் :- உயர் திரு பங்கஜாங்கிரி தாஸ்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
பகவான் ஜகந்நாதரின் இந்த அசாதாரணமான தோற்றத்தின் இரகசிய காரணம் என்ன என்பது சிக்கி மகித்தி என்பவர் எழுதிய மஹாபாவா பிரகாஷா என்ற புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கம்பீராவில் (ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பூரியில் வசித்த இடம்) ஸ்வரூப் தாமோதரும், ராமாநந்தாராயும் மகாபிரபுவிடம் ஜகந்நாதர் பலதேவர் மற்றும் தேவி சுபத்ராவின் அசாதாரணமான உருவத்தை பற்றி வினவியதற்கு பகவான் சைத்தன்யர் கீழ்கண்டவாறு விவரித்தார்.
ஒருமுறை பலராமரின் தாயாகிய ரோகிணி தேவி துவாரகைக்கு வருகை தந்தபொழுது பகவான் கிருஷ்ணரின் ராணிகள் அவரை சூழ்ந்து கொண்டார்கள். மேலும் கிருஷ்ணர் பிருந்தாவனத்தில் திருமணத்திற்கு முன்பு நடத்திய திவ்ய லீலைகளை பற்றி கூறுமாறு கேட்டுக்கொண்டனர்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் "தூங்கும் போது சில சமயம் பேசுவதை கேட்கிறேன். அவரது இனிய குரலில் அவரது நண்பர்கள் பெயராகிய ஸ்ரீதாமா, சுபாலா மற்றும் பசுக்களின் பெயர்களை அழைக்கிறார். சில சமயம் அவர் "ஓ லலிதா, விசாகா, ஓ ஸ்ரீ ராதே என்று அழைக்கிறார். மற்றொரு சமயம் அம்மா எனக்கு புதிய வெண்ணெயை ஊட்டி விடு என்கிறார்.சில சமயம் அவர் அழுகிறார் பிறகு எழுந்து மணிக்கணகில் புலம்புகிறார். எவ்வளவு சிறந்தவர்கள் இந்த விரஜவாசிகள்! தயவு செய்து அவர்களை பற்றி எங்களுக்கு கூறுங்கள்! என்றார்கள்.
அன்னை ரோகிணி இதற்கு ஒப்பு கொண்டார், ஆனால் இதனை கிருஷ்ணர் கேட்கக்கூடாது என்றும் கேட்டால் உணர்ச்சி பெருக்கெடுத்து விருந்தவனத்தை நோக்கி விரைந்து சென்று விடுவார் என்றார். எனவே கிருஷ்ணரின் தங்கையான சுபத்ரா தேவியை வாசலில் காவலுக்கு வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஒரு கதவை மூடிக் கொண்டு, திறந்திருக்கும் மற்றொரு கதவின் அருகே நின்ற சுபத்ரா, தன்னை மறந்த நிலையில் , அந்த உன்னதமான திவ்ய லீலைகளில், ஆழ்ந்த பாவத்தில் திளைத்திருந்தார். கிருஷ்ணன் விரஜவாசிகளுடன் நடத்திய உணர்ச்சிமயமான இனிய காதல் லீலைகளை அவ்வாறு கேட்கையில் அவள் கிருஷ்ணரும் பலராமரும் அருகில் வந்ததை கூட கவனிக்கவில்லை பரவசத்தில் அவளது தேகம் மாற்றம் அடைவதை கூட அவள் உணரவில்லை. ஆன்மீக உணர்ச்சி பெருக்கெடுக்க அவளது கண்கள் பெரிதாக விரிந்தது, அங்கங்கள் தேகத்தில் ஒடுங்கின , சிரித்த முகமாக ஆனந்தத்தின் உச்ச நிலையில் காட்சிதந்தார். எதிர்பாராத விதமாக பகவான் ஶ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் அவ்விடம் வந்தார்கள். வாயிலில் சுபத்ரை நிற்பதையும், தன்னை மறந்து எதையோ கேட்பதையும் கண்டு அதை அறிந்து கொள்ள அவளது அருகில் வந்தனர். வல்லுனர்களான கிருஷ்ணரும் பலராமரும், சுபத்ராவின் நிலையை கண்டார் அவர்கள் உடனடியாக புரிந்து கொண்டார் அறையின் உள்ளே எதோ அசாதாரணமான விஷயம் நடக்கிறது என்று, அவர்களும் அதனை கவனிக்க தொடங்கினர்.
சிறிது நேரத்தில் மிகுந்த ஆன்மீக பாவத்தில் கிருஷ்ணரும் பலராமரும் அதே போன்ற மாற்றத்தை உணர்ந்தார்கள்.அவர்களது கண்கள் பெரிதாக விரிந்தது, அங்கங்கள் தேகத்தில் ஒடுங்கின சிரித்த முகமாக ஆனந்தத்தின் உச்ச நிலையில் அவர்கள் காட்சிதந்தனர். அப்பொழுது நாரத முனி அங்கு தோன்றினார். அந்த காட்சியை கண்டு வியந்து ஆனந்தத்தில் ஆடவும், பாடவும் தொடங்கினார். பகவான் ஶ்ரீ ஜகந்நாதர், பகவான் ஶ்ரீ பலதேவர்,மற்றும் சுபத்ரா தேவி சுய நிலைக்கு வந்த பிறகு நாரத முனி ஆச்சரியத்தில் கூறினார் “என் அன்பார்ந்த பிரபோ, நான் தங்களுடைய பலவிதமான பிரமிப்பூட்டும் திவ்ய ரூபங்களை பார்த்திருக்கிறேன் ஆனால் இத்தகய ஆனந்தமயமான அழகானரூபத்தை நான் பார்த்ததேயில்லை. பகவானே தயவு செய்து இந்த ரூபத்தை அனைவரும் தரிசனம் செய்ய பூமியில் அவதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று வேண்டினார். பகவானும் அதை ஒப்புக்கொள்ள பக்தர்களின் மகிழ்சிக்காக ஶ்ரீ ஷேத்ர பூரியில், இந்த ஆனந்தமயமான ஜகந்நாதர், பலதேவர் சுபத்ரா தேவியின் திவ்ய ரூபத்தை தரிசிக்கலாம் என்று கூறி அருள்பாளித்தார்.
இவ்வாறாக பகவானின் பரம பக்தர் ஶ்ரீல நாரதரின் கருணையால் நம்மால் இப்பொழுது பகவானின் இந்த உன்னத மூர்த்தியான ஜகந்நாதர், பலதேவர் சுபத்ராவை காணவும், வழிபடவும் முடிகிறது. பகவான் கிருஷ்ணர் , இந்த தனித்துவமான, ஆனந்தமையமான மற்றும் அழகான ஜகந்நாதர், ரூபத்தில் மிகவும் கருணையோடு பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். பகதர்களும் பகவானின் இந்த ஆனந்தமையமான மற்றும் அழகான இந்த ரூபத்தை தரிசித்து, அவர்களும் ஆனந்த பக்தி பரவச நிலையை அடையகின்றனர்.
ஜெய் ஜெகந்நாத்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
Telegram
🍁🍁🍁🍁🍁
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇
https://t.me/suddhabhaktitamil
ஆன்மீக கதைகளை படிக்க 👇
Whatsapp :-
🍁🍁🍁🍁🍁
https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR
உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏
Comments
Post a Comment