நம்முடைய அற்பமான புத்தி கூர்மையைக் கொண்டு “கிருஷ்ணருடைய கனபரிமாணங்களை அளவிட முடியாது”


 நம்முடைய அற்பமான புத்தி கூர்மையைக் கொண்டு “கிருஷ்ணருடைய கனபரிமாணங்களை அளவிட முடியாது”


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

பெரும்பாலான ஞானிகளும், யோகிகளும், பொது வாழ்வில் அருவவாதிகளாகவே விளங்குகின்றனர். ஆன்மீக விண்வெளியில், பிரகாசமான பிரம்ம ஜோதியில் கலப்பதின் மூலம் அவர்கள் தற்காலிக மோட்சத்தைப் பெறுகின்றனர். இருந்த போதிலும், ஸ்ரீமத் பாகவதத்தின் கண்ணோட்டத்தின்படி, அவர்களுடைய அறிவு தூய்மையானதாகக் கருதப்படுவதில்லை. கடும் தவம், தியானம், வேள்விகள் ஆகியவற்றினை புரிவதன் மூலம் அவர்கள் பிரம்ம ஜோதி நிலைக்கு தம்மை உயர்த்திக் கொள்கின்றனர். ஆயினும் ஏற்கனவே குறிப்பிட்டப்படி இறைவனான கிருஷ்ணருடைய திரு உருவ நிலையை அவர்கள் பொருட்படுத்தாததால் மீண்டும் ஜட உலகில் விழுகின்றனர். கிருஷ்ணருடைய தாமரைப் பாதங்களைச் சேவிக்காவிடின் சந்தேகமின்றி எவரும் மீண்டும் ஜட உலக வாழ்க்கைக்குத் திரும்பியே ஆக வேண்டும். “நான் என்றும் உம்முடைய சேவகன். எவ்வாறாயினும் உம்முடைய சேவையில் ஈடுபட எனக்கு அருள் புரிவீராக” என்று நினைப்பதே மிகச் சிறந்த மனப்பாங்காகும். ‘வெற்றி காண முடியாதவர்’ என்று பொருள் பட ‘அஜித’ என அழைக்கப்படுகிறார். ஆகையினால், இறைவனை ஒருவராலும் வெற்றி காண முடியாது ஆனால் ஸ்ரீமத் பாகவதத்தின் படி, மேற்கூறிய மனப்பாங்கை ஒருவர் அடைவாராயின் அவர் மிக எளிதில் இறைவனை வெற்றி காண்கிறார். இறைவனை அளவிட்டு மதிப்பிடும் வீணான பழக்கத்தை நாம் விட்டுவிட வேண்டும் என்றும் ஸ்ரீமத் பாகவதம் நமக்கு சிபாரிசு செய்கின்றது ஆகாயத்தைக் கூட நம்மால் அளவிட முடிவதில்லை. இறைவனைப் பற்றி என்ன கூறுவது? நம்முடைய அற்பமான புத்தி கூர்மையைக் கொண்டு “கிருஷ்ணருடைய கனபரிமாணங்களை அளவிட முடியாது” என்ற முடிவுக்கு வருபவரே உண்மையில் புத்திசாலி என்று வேத நூல்கள் உரைக்கின்றன. நாம் இந்த பிரபஞ்சத்தின் மிக அற்பமான அம்சமே என்ற உண்மையை தாழ்மையுடன் புரிந்துக்கொள்ள வேண்டும். நம்முடைய மன கற்பனைகளின் மூலமாகவோ அல்லது மிகச் சிறிய புத்தி கூர்மையாலோ இறைவனை புரிந்துகொள்ள முயற்சிப்பதை அறவே விட்டுவிட்டு பகவத்கீதை போன்ற அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களின் மூலமாகவோ அல்லது இறைவனைப் பூரணமாக உணர்ந்த மகாத்மாக்களின் வாயிலாக மிகத் தாழ்மையுடன் கேட்பதின் மூலமாகவோ இறைவனை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

பகவத் கீதையில் அர்ச்சுனன் இறைவனைப் பற்றி ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து நேரடியாகவே கேட்கின்றான். இவ்வாறாக, பணிவன்புடன் இறைவனைப் பற்றி கேட்க வேண்டும் என்ற நியதிக்கு உதாரணமாக அர்ச்சுனன் விளக்குகிறான். பகவத் கீதையை அர்ச்சுனனிடமிருந்தோ, அல்லது குருவிடமிருந்தோ பெறுவதே நமது நிலைமையாகும். அவ்வாறு கேட்டு அறிந்த பிறகு, அத்தகைய அறிவை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்துவதும் அத்தியாவசியமாகும். “எனது அன்புக்குறிய பிரபோ, நீர் எவராலும் ஆட்கொள்ளப்படாதவர். இருப்பினும், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளிடமிருந்து உம்மைப்பற்றிய விவரிப்புகளை கேட்கின்ற இந்த முறையின் மூலம் நீர் ஆட்கொள்ளப்படுகிறீர்” என்றே பக்தன் இறைவனிடம் துதிக்கின்றான். இறைவனை ஒருவராலும் வெற்றி காண முடியாது. ஆனால், எல்லாவித மனக் கற்பனைகளையும் நிராகரித்து, அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் இருந்து கவனத்துடன் கேட்கும் பக்தரால் இறைவன் வெற்றி கொள்ளப்படுகிறார்.

(பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பால் / அத்தியாயம் 3)

Comments

Articles / கட்டுரைகள்

Show more

Posters / போஸ்டர்கள்

Show more

Srimad Bhagavad Gita 108 Sloka / ஸ்ரீமத் பகவத்கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

Srimad Bhagavad Gita Ratnamala / ஸ்ரீமத் பகவத்கீதை ரத்தினமாலை

Important Q&A from Bhagavad Gita / ஸ்ரீமத் பகவத்கீதையில் இருந்து முக்கியமான கேள்வி பதில்கள்

Ekadasi Mahatmyam / ஏகாதசி மஹாத்மியம்

Show more

Stories / உத்வேக கதைகள்

Show more

Vaishnava Acharya History / வைஷ்ணவ ஆச்சாரியர்கள் வரலாறு

Show more

Festival / திருவிழாக்கள் (Articles)

Show more

Prayers / பிரார்த்தனைகள் ( Articles )

Show more