ஶ்ரீ ஜெயதீர்த்தர்
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
வைஷ்ணவ ஆச்சாரியர்களில் தலைசிறந்து விளங்கியோரில் ஒருவர் ஸ்ரீபாத மத்வாசாரியர். 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர், துவைதம் என்று பிரபலமாக அறியப்படும் தத்துவவாதக் கொள்கையை நிலைநாட்டி பக்தியைப் பரப்பியவர். ஹனுமான், பீமன் ஆகியோரின் வரிசையில் வாயுவின் மூன்றாவது அவதாரமாக இவர் அறியப்படுகிறார்.
மத்வாச்சாரியார், தன் சிஷ்யர்களுக்கு த்வைத கொள்கைகளையும், ஸர்வ மூல க்ரந்தங்களையும் கற்றுக் கொடுத்தார். அவர் கற்றுக் கொடுத்தபோது மாணவர்களான சிஷ்யர்கள் மட்டும் அல்லாமல் ஒர் எருதும் கேட்டுக்கொண்டிருக்கும். மத்வாச்சாரியார், திக்விஜயங்கள் மேற்கொள்ளும் போதும் அவரது நூல்களை அந்த எருதே சுமந்து கொண்டு செல்லும். இப்படி பதினெட்டு ஆண்டுகளாக மத்வாச்சாரியருக்கு ஸேவை செய்தது அந்த எருது, பிற்காலத்தில்" டீக்காராயர் " என்று புகழ் பெற்ற ஜெயதீர்த்தராக அவதாரம் எடுத்தார்.,
தன்னுடைய முன் ஜன்மத்தில் எருதாக மத்வாச்சாரியரின், ஸர்வ மூல க்ரந்தங்களை சுமந்து, அவரது வாயாலேயே கேட்டு, பின் அடுத்த பிறவியில் ஸ்ரீ ஜெய தீர்த்தராக, மத்வரின் ஸர்வ மூல க்ரந்தங்களை விளக்கவுரையுடன் எழுதி , டீக்காராயர் என்று புகழ் பெற்றார். சமஸ்கிருதத்தில் ”டீக்கா” என்றால் விளக்கவுரை என்று பொருள்.
உயிர் பெற்று எழுந்த எருது
****************************
ஓர் நாள் சிஷ்யர் ஒருவர், குருவான மத்வாச்சாரியரை பார்த்து தங்களுடைய க்ரந்தங்களின் விளக்கவுரை யார் எழுதுவார் ? என்று வினவினார். சிஷ்யர்கள், தங்களில் யார் பெயரை குரு சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்தனர். மத்வாச்சாரியரோ “அந்த எருதுதான் தன்னுடைய க்ரந்தங்களுக்கு விளக்கம் எழுதும்” என்று கூறினார்.
இந்த பதிலை சிஷ்யர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை உடனே பொறாமையும், கோபமும் கொண்ட சிஷ்யர்கள், ஓர் ஸர்பம் மூலம் காளையை கொல்ல முடிவு செய்தனர். ஸர்பம் அந்த எருதின் மீது தன் விஷத்தை பாய்ச்சவே, உயிர் பரிபோனது. இதனை அறிந்த மத்வாச்சாரியர், தன் கமண்டல நீருடன் எருதின் அருகில் சென்று, “துவாதஸ ஸ்தோத்ரம்” ஜபித்து, நீரை தெளித்தவுடன் எருது உயிர் பெற்று எழுந்தது.
தோண்டு பந்த் ரகுநாதா
****************************
மகாராஷ்டிரத்தில், பந்தர்புராவில் இருந்து பன்னிரண்டு மைல் (தற்போது விட்டலன் இருக்கும் விஷேச தலமான பண்டரிபுரம்) உள்ள மங்கள்வேதே மாவட்டத்தில் பிராமண ராஜவான ரகுநாத தேஷ்பண்டே மற்றும் சக்குபாய் தேஷ்பண்டே என்ற தம்பதிக்கு மகவாக பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் தோண்டுபந்த ரகுநாதா.
தோண்டுராயர், மன்னர் குடும்பத்தில் பிறந்ததால் சொத்து, புகழ், ஆடம்பர வாழ்க்கை என்று ராஜபோக வாழ்க்கையில் திளைத்தார் . அனைத்திலும் ராஜ உபசாரம். கல்வி, குதிரை சவாரி, வாத வல்லமை, சமயோசித புத்தி என்று அனைத்திலும் முதல் மாணவனாக விளங்கினார். திருமண வயதை அடைந்ததும் மன்னர் ரகுநாத தேஷ்பண்டே தன் மகனுக்கு மிகவும் ஆடம்பரமாக திருமணமத்தை நடத்தினார்
அக்ஷோபிய தீர்த்தருக்கு அருளிய மத்வாச்சாரியர்
****************************
மத்வாச்சாரியரின் நேரடி சிஷ்யரான ஸ்ரீ அக்ஷோபிய தீர்த்தர், தன் காலத்திற்கு பின் மடத்தை அலங்கரிக்கும் நபரை, தேடிக்கொண்டிருந்தார். தன் வயது மூப்பின் காரணமாக, தனக்கு பின் யார் மடத்தின் பீடாதிபதி ஆக போகிறார்கள், என்ற கவலை அவரை வாட்டியது. கனவில் வந்த மத்வாச்சாரியர், ”எவன் ஒருவன் தண்ணீர் அருந்தும் போது சாதாரணமாக அருந்தாமல், குதிரையில் இருந்தே அருந்துகிறானோ அவனே உனக்கு சிஷ்யனாவான்” என்று கூறி மறைந்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த அக்ஷோபிய தீர்த்தர் தன் சிஷ்யனை தேட நதிகள், ஆறுகள் என சஞ்சாரம் மேற்கொண்டார். அப்படி ஒருநாள், ”பீமரதி” என்ற நதியில் அந்த பரமாத்மாவை ஜபித்துக்கொண்டிருந்த அக்ஷோபிய தீர்த்தருக்கு , தன் குருவான மத்வாச்சாரியரின் சொல் உண்மையானது.
எருதாக இருந்தாயா?
*****************************
இருபது வயது பாலகனான தோண்டுராயா, ராஜ பரிவாரங்களுடன் குதிரை சவாரி மேற்கொண்டு, வேட்டையாடியும், தன் தந்தையின் ஆட்சி எல்லையை அறிய நகர்வலம் மேற்கொண்டான்.களைப்பினால் சற்று தண்ணீர் தாகம் எடுக்கவே, அருகில் இருக்கும் நதியை நோக்கி குதிரையை ஏவினார். அருகில் ”பீமரதி” என்ற நதி கண்ணில் படவே, குதிரையில் இருந்து இறங்காமல், அமர்ந்தபடியே நதியில் தன் வாயால் தண்ணீர் பருகி களைப்பை போக்கினார். இதை நதிகரையில் இருந்து பார்த்த ஸ்ரீ அக்ஷோபிய தீர்த்தர் ஆச்சரியப்பட்டார். தன் குரு சொன்ன நபர் இவர் தான் என்று நினைத்து, பொதுவாக அனைவரும் இறங்கி குடிப்பது தானே வழக்கம், இவன் விசித்திரமாக அருந்துகிறானே என்று நினைத்து அவர், “கிம் பசு பூர்வ தேஹே” (போன ஜன்மத்தில் மிருகமாக இருந்தாயா?) என்று கேட்டார். ஒன்றும் புரியாத தோண்டுராயா விழித்தார். பகவானின் அருளால் உடனே தன் பூர்வ ஜன்மத்தை நியாபகப்படுத்திக் கொண்டு, தன் பூர்வ ஜன்மத்தில் மத்வாச்சாரியரின் “ஸர்வ மூல க்ரந்தங்களை” சுமந்த எருதாக இருந்ததையும், அவருக்கு ஸேவை செய்ததையும், நினைவுகூர்ந்தார். இதை அறிந்து மெய்சிலிர்த்துப்போய், உடனே அக்ஷோபிய தீர்த்தரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்த தோண்டிராயா, தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். உன் குடும்பத்தின் பெரியவர்களிடம் அனுமதி இல்லாமல் உன்னை சிஷ்யனாக ஏற்க முடியாது என்று கூறி மறுத்த தீர்த்தர், தோண்டுராயாவை அரண்மனைக்கு அனுப்பினார். அதை மறுத்த தோண்டுராயா, தன்னை உடனே சிஷ்யனாக்கும் படி கெஞ்சினார்.
மனம் மாறிய மன்னர்
****************************
நடந்த விஷயத்தை அறிந்த மன்னரான ரகுநாதா தேஷ்பண்டே மிகவும் கோபமுற்றார். உடனே பீமரதி நதிகரைக்கு சென்ற மன்னர், தன் மகனை அங்கிருந்து தன் ராஜமாளிகைக்கு அழைத்து வந்தார். இல்லறம் சிறக்க வைத்தால், துறவரம் நினைப்பு போய்விடும் என்று எண்ணிய மன்னர், தன் மகனை இல்லற வாழ்வில் ஈடுபடுத்த ஆர்வம் கொண்டார். தோண்டுராயருக்கும் அவரது மனைவியான பீமாபாய்க்கும் முதல் இரவு ஏற்பாடு செய்தார். தோண்டுராயார், பீமாபாய் கண்ணுக்கு ஸர்பமாக காட்சியளித்தார். ஸர்பமானது பீமாபாயை அருகில் வரவே அனுமதிக்கவில்லை. பயத்தால் பீமாபாய், தன் மாமனாரிடம் நடந்ததை கூற, தன் தவறை உணர்ந்தார் மன்னர். தன் எண்ணம் தவறானதை அறிந்த பின்னர் மன்னரே தன் மகனை ஸ்ரீ அக்ஷோபிய தீர்த்தரிடம் ஒப்படைத்தார். தன்னை மன்னித்தருளும் படி வணங்கிய மன்னரை, ஸ்ரீ அக்ஷோபிய தீர்த்தர் ஆசிர்வதித்து அருளினார். தன் சிஷ்யான தோண்டுராயாவிற்கு வேதம், உபநிடதம், க்ரந்தங்கள் கற்றுக்கொடுத்து “ஸ்ரீ ஜெய தீர்த்தர்” என்று நாம கரணம் இட்டார்.
ஜெய் ஸ்ரீ ஜெய தீர்த்தர் ஆச்சாரியர்.
ஹரே கிருஷ்ண!
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண!
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Telegram செயலி
🔆🔆🔆🔆🔆🔆🔆
Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇
🔆🔆🔆🔆🔆🔆🔆
கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க
Comments
Post a Comment